சூடு படுத்தி சாப்பிட கூடாத உணவுகள்

Spread the love

சைவத்தில் இருந்து அசைவம் வரைக்கும் நாம் சாப்பிட்டு மீதியான குழம்பை, வீணாக்ககூடாது என அதை சுண்டக்காய்த்து சாப்பாட்டு பின் பயன்படுத்தி வருவோம்.  ஆனால் இப்படி வீணாகும் அனைத்து உணவையுமே சூடு செய்து சாப்பிடக்கூடாது. சில உணவுகள் ஒரு இரவிலே விஷமாக மாறிவிடும்.அந்த வகையில் எந்தெந்த உணவுகளை சூடு செய்து சாப்பிட கூடாது என பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்க கீரை வகையான உணவுகள் மிகவும் முக்கிய பங்காக இருக்கின்றது. உணவு சம்மந்தமாக டாக்டர் சொல்ல கூடிய முதல் அறிவுறையே சாப்பாட்டில் கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள் என சொல்வார்கள். பொதுவாக கீரையில் இரும்பு சத்தும் நைட்ரைடும் நிறைந்துள்ளது.  இந்த நைட்ரைடை சூடுபடுத்தும்போது நைட்ரைட்ஸாக மாறும்.இதில் புற்றுநோயை உண்டாக்குகின்ற வாய்ப்பும் அதிகமாக உள்ளது. பின் செரிமான நிகழ்வு முழுமையாகிவிடும். இதனால் ஏற்கெனவே சமைத்திருக்கும் கீரையை, திரும்பவும் சூடு செய்து சாப்பிட்டால் அந்த உணவு விஷமாக மாறிவிடும்.

அடுத்து முட்டையையும், காளானையும் சாப்பிடாதவர்கள்மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள்.உணவிற்கு சைடிஷ் ஏதும் இல்லாத நேரத்தில் கை கொடுக்கின்ற இந்த முட்டை மட்டும் தான்.  இந்த இரண்டுமே ப்ரோட்டீன் நிறைந்திருக்கும் உணவுகள். இந்த முட்டையையும், காளானையும் திருப்பி சூடுசெய்து சாப்பிட்டால், அதில் இருக்கும் விஷத்தன்மை செரிமான பிரச்சனைக்கும், வயிற்று கோளாறுக்கும் வழி வகுத்து விடும். அதே மாதிரி சிக்கனிலும் நிறைய புரோட்டீன் இருக்கின்றது. சிக்கனை மீண்டும் மீண்டும் சூடு செய்யும்போது, புரோட்டீன் அதிகரித்து செரிமானம் ஆவது குறைந்து விடும்.

அதே மாதிரி உருளை கிழங்கையும் ஒரு தடவைக்கு சமைத்த பின் மீண்டும் அதைகுளிர்சாதனபெட்டியில் வைத்து மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாது. இதில் இருக்கும் பாக்டீரியா நமது உடலிற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.    பீட்ரூட்டும் கீரை மாதிரி தான் இது அதிகமான நைட்ரைட்ஸ உள்ளடக்கியியுள்ளது. இதையும் சூடு செய்து சாப்பிடக்கூடாது.


Spread the love
error: Content is protected !!