கீழாநெல்லி சூப்
தேவையான பொருட்கள்
கீழா நெல்லி இலை 1 கைப்பிடியளவு
துவரம் பருப்பு அரை கப்
பச்சை மிளகாய் 2
தக்காளி 2
நெய் – அரை மே.கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை
பருப்பை நன்கு வேகவைக்கவும். பின்பு அதனை இறக்கி வைத்து அதில் தண்ணீர் சேர்த்துப் பருப்பை நன்றாகப் பிசைந்து கலக்கி விட வேண்டும். தக்காளியை அரிந்து பருப்பு நீருடன் சேர்த்துக் கையால் பிசைந்து கீழா நெல்லி இலையைப் பொடியாக நறுக்கிப் போட்டு, பச்சை மிளகாயை நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும். நன்கு கொதி வந்தவுடன் அரிந்த வெங்காயம் மற்றும் கடுகை நெய்யில் தாளித்து சூப்புடன் சேர்த்து இருபது நிமிடம் கொதிக்கச் செய்ய வேண்டும். வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.
கரிசாலை சூப்
தேவையான பொருட்கள்
கரிசாலை 1 கப்
(அ) பொடி 3 டீஸ்பூன்
தண்ணீர் – 250 மி.லி
வெங்காயம், தக்காளி,
பூண்டு, மல்லித்தழை,
கருவேப்பிலை, காரட்,
பீன்ஸ், இஞ்சி, – 1 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள் சிறிது
உப்பு – தேவைக்கு
எலுமிச்சம் சாறு 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கரிசாலை இலைகளை அல்லது பொடியைப் போட்டு நீர்விட்டு சூடு படுத்தவும். கொதி நிலை வரும் சமயம் வெட்டிய காய்கள், வெங்காயம், இஞ்சி, மல்லித்தழை, கருவேப்பிலை, காரட், புதினா, நசுக்கிய பூண்டு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பசுமை மாறும் முன் எல்லாவற்றையும் காய்கறி அல்லது பருப்பு மத்தால் மசிக்கவும். தேவையான மிளகுத்தூள், சீரகத்தூள் கலந்த சூடு ஆறுமுன் வடிகட்டவும். உப்பு சேர்த்து எலுமிச்சைச் சாறு சிறிது சேர்த்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
வில்வ சூப்
தேவையான பொருட்கள்
வில்வ இலை – 1 கப்
(அ) பொடி 15 கிராம் – 3 டீஸ்பூன்
பீன்ஸ், காரட், தக்காளி,
வெங்காயம், கொத்தமல்லித்
தழை, இஞ்சி, பூண்டு
கலந்து 1 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள் -1 டீஸ்பூன்
கம்பு மாவு – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தே.அளவு
செய்முறை
வில்வ இலையுடன் நீர் கலந்து பசுமை மாறும் முன் சூப் தயாரிக்கவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் பிறவெட்டிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறுமுன்பு வடிகட்டி பரிமாறவும்.