நமது நாட்டில் சுமாராக மூன்றில் இரு பங்கு பெண்களுக்கு இரத்தசோகை பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் கூருகின்றது.. அதோடுஉடற்பயிற்சி செய்கின்ற ஆண்களுக்கு இந்த கஷ்டம் நிச்சயமாகவே இருக்கிறது.இரும்புசத்து குறையும் போது ஏற்படும் அறிகுறிகள்: அடிக்கடி மூச்சு வாங்குவது, அதிகபடியான சோர்வு, தலைவலி, தலைசுத்தல், உடல் எடைகுறைதல் ஆகியவைகளாகும்.
நமது உடலில் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்யவும், உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்து செல்வதற்கும் இரும்புசத்து முக்கிய பங்காக இருக்கின்றது. இது தடைபடும்போது அனேமியா ஏற்படும். ஒரு 4௦ வயதை தாண்டிய சில பெண்களுக்கு உயிரிழப்பு கூட ஏற்படலாம். இரும்புசத்து நாம் சாப்பிடும் உணவுகளில் மட்டும் தான் கிடைக்கும். இதற்கான மாத்திரைகள் சிறந்த தீர்வாக இருக்காது.
இரும்புசத்து நிறைந்த உணவுபொருட்களை இப்போது பார்க்கலாம். சைவ உணவுகளில் பசலைகீரை, கருப்பு உளுந்து, கொண்டைக்கடலை, பூசணிக்காய், பேரீச்சை, எள் மற்றும் பருப்பு வகைகள் அதி சிறந்த இரும்பு சத்து நிறைந்திருக்கின்றது. பொதுவாக கீரைகளில் இரும்புசத்து இருக்கின்றது. ஆனால் பசலை கீரை இரும்பு சத்துக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்டும் அதிகமாக நிறைந்திருக்கிறது.
தினமும் 3 பேரிச்சைபழம் சாப்பிட்டாலே, தேவையான இரும்புசத்தை மீதம் வைக்கலாம். பருப்புவகைகள் மற்றும் முளைகட்டிய தானியங்கள் இதனால் உடலுக்கு அதிகபட்சமான இரும்புசத்து கிடைக்கும். கூடவே சுண்டல், டோஃபு, உருளைகிழங்கு, பூசணி விதை இதையும் எடுத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளில் 3.5mg இரும்பு சத்து கோழி ஈரலில் நிறைந்திருக்கிறது.
அதனால் அசைவ பிரியர்கள், சிக்கன், ஈரல்,முட்டை, இவையெல்லாம் வாரத்தில் இரு முறையாவதுதொடர்ந்து சாப்பிட்டு வரலாம். தினமும் ஒரு அவித்த முட்டை பரிந்துரைக்கப்படுகிறது.குறிப்பாக 1௦௦ கிராம் ஈரலில் 13௦% இரும்புசத்து கிடைக்கும். சைவ உணவுகளை பொருத்தவரைக்கும்இரும்புசத்தின் கிரகிக்கப்படும் தன்மை குறைவு தான். அதனால் இரும்புசத்து உணவுகளோடுவைட்டமின் சி உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு கொய்யா, நெல்லி,இதை அடிக்கடி சாப்பிடலாம்.