மழைக்கால உணவு

Spread the love

எலே.. கிழக்காலே வானம் கறுக்குதுஞ்.. மண்ணு வாசம் வருது பாத்தியா? அந்த சாக்கை கொண்டுவந்து எரு வரட்டியை, சொளக்கொல்லையை மூடி வைப்பா!!  அப்படியே ராவுக்கு தூதுவளை போட்டு மிளகு இரசம் வைச்சிடு புள்ளே!!!!!! இந்த வசனத்தை வயதானவர்களில் பலரும் மறந்திருக்க முடியாது., நவீன இளைஞர்களுக்கு இது பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை  இயற்கையின் மாற்றங்களை தன் வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் இயற்கையாகவே பிணைத்துக்கொண்ட வாழ்வாதாரம் அது. 

“மணி ஆச்சு தாத்தா சாப்பிட வாங்க என்று சொன்னதும், வானத்தில் ஒரு பார்வை, தன் நிழல் எந்தப்பக்கம் எப்படி விழுகிறது என்று நிலத்தில் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ அட ஏன்? என்ன அவசரம்? மணி ஒண்ணரை தானே ஆகிறது என்று சொல்லவும், இவர் எங்க பார்த்து மணியை சொல்கிறார்  என்பது அன்று  மண்டையை பிறாண்டியது, ஆனால் இன்றைக்கு மனதை மிக அதிகமாகப் பிறாண்டுகிறது.

வானம், பூமி, மழை, காற்று, நெருப்பு என பஞ்ச பூதங்களுடன் இணைந்து வாழ்ந்த நம் உணர்வுகளும், உறவுகளும் சிறிது சிறிதாக மறைந்து நடு இரவில் இத்தாலி பீட்சாவில் நெதர்லாந்து சீசையும், மெக்சிகோ மிளகாயையும் தின்று ( மென்று அல்ல ) இந்திய வயிற்றை வளர்க்கிறோம்?. எப்பொழுது எதை எங்கு எப்படி எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் உணவில் சொன்ன வரையறைகள் பசியை மட்டும் போக்கவில்லை, நமக்கு நோயைப் போக்கியது மட்டுமல்லாமல் நோய் வரமாலும் தடுத்தது.

“ ஆடிக்காற்றில் அம்மியும் பறக்குமாம்” அதன் பின் ஆவணியில் “கார் காலத்தில்” மழையும் பெய்யத் துவங்கும்.  இப்படிப்பட்ட ஆவணி முதல் தை மாதம்வரை மழையும் குளிரும் நிறைந்த பொழுதில் இரவு நேரத்தில் சாப்பிடும் விஷயம் குறித்த அந்த கால அக்கறை பெரிதுதான்.” குளோபல் வார்மிங்” கூடி வரும் இந்த நவீன யுகத்தில் “ஆடிமாதத்தில் அம்மி பறக்கவில்லை” அங்கங்கு தள்ளுபடிதான் பறக்கிறது.ஆவணியில் பெய்ய வேண்டிய மழையை ஐப்பசி, புரட்டாசியிலும் காண்பது அரிதாய் உள்ளது.இருந்தபோதிலும் திடீரென பெய்யும் மழையும், சாக்கடையுடன் கலந்து ஓடிவரும் வெள்ளமும் நமக்கு பல வியாதிகளையும் மறக்காமல் அழைத்து வருகிறது. இந்த மழைக்காலத்தில் நம்மை பாதுகாக்கும் உணவு வகைகள் என்ன என்பதை சிறிது பார்க்கலாம்.

பொதுவாகவே, மழைக்காலம் என்பது நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலுக்கு சவால் விடும் சோதனையான காலம் தான். மழைக்காலத்தில் ஆக்சிஜன் குறைவதால் வேலைகளை செய்வதற்கு சிறிது ஆற்றல் அதிகமாகத் தேவைப்படும் அதனால் பசியும் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.  மேலும், வெயில் காலத்தில் வறண்டு இருக்கும் நிலத்தில் பொதிந்துள்ள நுண்கிருமிகள், மழையில் துளிர்த்து, பருகும் நீரில், காற்றில், உணவில் கலந்து சாதாரண வைரஸ் ஜுரம், காமாலை, டைபாய்டு, வயிற்றுக்கழிச்சல் போன்ற நோய்களைத் தோற்றுவிக்கக் கூடும்.

குழந்தைகளை எளிதில் நோய் தாக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் அவர்களை வெந்நீரில் குளிக்கச் செய்து காலையிலும், மாலையிலும் ஒரு தேக்கரண்டி தேனை சாப்பிடக் கொடுப்பது மிகவும் நல்லது. அடிக்கடி வீசிங் வரும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்ட குழந்தை எனில் ஆடு தொடா இலை கஷயாமும் தேனும் கலந்து கொடுப்பது சிறந்தது.அதுவே “கேட்வாக் செய்யும் நவீன யுவதி எனில் தூதுவணையும் தேனும் கலந்து பருகுவது சிறந்தது.அறுவதைக் கடந்த வயதானவர்கள் எனில் கடுக்காயும் தேனும் கலந்து சாப்பிடுவது மழைக்காலத்தின் முதல் பணியாக இருக்கவேண்டும்.தேன் மழைக்காலத்தின் மருத்துவ மகானாகும்.

மழைக்கால உணவுகளானது! எளிதில் ஜீரணமாவதாகவும் புளிப்பு, இனிப்பு, மற்றும் உப்பின் சுவை சற்று அதிகமானதாகவும் இருக்க வேண்டும் என்று சித்த மருத்துவம் சொல்கிறது.  பஞ்ச கோலம் என்று அழைக்கப்படும் சுக்கு, மிளகு, மிளகின் வேர், திப்பிலி, திப்பிலியின் வேர் கலந்த கலவையின் பொடி ஒரு சிட்டிகை அளவில் சூப்பிற்க்கு மிளகுத்தூள் தூவி சாப்பிடுவது போல வீட்டில் செய்யும் காய், கறி கூட்டில் சாப்பிடும்போது தூவி சாப்பிடுவது மழைக்காலத்தில் நோய்கள் வராது காக்கும்.

பொதுவாகவே, மழைக்காலத்தில் மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது மிகவும் நல்லது.  மிளகு நம் உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளை  எதிர்த்து போராடவேண்டிய  சிணிலிலி விணிஞிமிகிஜிணிஞி மிவிவிஹிழிமிஜிசீ ஐ தூண்டக்கூடியது என்று நவீன ஆய்வுகள்  கூறுகின்றன.  ஆஸ்த்மா, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி, அர்ட்டிகரியா எனும் காணாக்கடி (உடம்பெல்லாம் திடீர் திடீரெனத் தடிப்பாகி மறையும் நோய்) இவற்றிற்கான ஒரு சிறந்த தடுப்பு மருந்து மிளகாகும்.

மேலும் பொதுவாக, மழைக்காலத்தில் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகமாககச் சேர்க்கக்கூடாது, மஞ்சள் பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சவ்சவ் இவற்றைத் தவிர்க்கலாம். நீர்ச்சத்துள்ள காய்கறியாக இருந்தாலும் வெண்பூசணி, சுரைக்காய் இவற்றை மிளகு சேர்த்து சாப்பிடலாம். கோதுமை, வெல்லம், பனைவெல்லம் சேர்த்த பணியாரங்கள் மழைக்காலத்து  சிபிணிதிதி     சிபிளிமிசிணி ளிதி ஜிபிணி ஷிணிகிஷிளிழி!.

மாமிச உணவு, தினை, ராகி போன்ற சிறு தானியங்கள், பழைய புழுங்கலரிசி உணவுகள் மதிய உணவிற்கு மிகவும் நல்லது.லிளிகீ நிலிசீசிமிவிமிசி தன்மையுள்ள இந்த தானியங்கள் மழைக்காலத்தில் நீடித்த ஆற்றல் தருபவை. உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் ஏதேனுமொன்றை சேர்த்துக்கொள்ளலாம்.தயிர் சேர்க்காமல், நீர்மோர் சேர்ப்பது மிகவும் நல்லது. காலையும், மாலையும், கரிசாலை தேநீர், துளசி தேநீர் பனங்கற்கண்டு சேர்த்த பானம் என சூடாக அருந்துவது மிகவும் சிறந்தது.

மேலும், மழைக்காலத்தில் பசி உணர்வு சிறிது அதிகமாக காணப்படும் ஆதலால் நொறுவல் கூடி பேதியோ அல்லது உடல் எடை அதிகமாக ஏறுவதோ ஏற்படலாம்.எனவே உடலுக்கேற்ற அதிகம் எண்ணைப்பசை இல்லாத சிற்றுண்டிகளை அளவுடன் சாப்பிடலாம்.

நாகர்கோவில் பகுதியில் சிறப்பான உப்பேரி (நேந்திரம் பழத்தில் வெல்லம் சுக்கு சேர்த்து செய்யப்படும் சுவையான நொறுவல்), நெல்லை மாவட்டத்து வெல்லமும், கடலை மாவும் சுக்கும் சேர்த்து செய்யப்படும் மனோகரம், கோவில்பட்டி கடலை மிட்டாய் (வெல்லம், சுக்கு சேர்த்து செய்யப்படும்) சாத்தூர், விருதுநகர் ஸ்பெஷல் பனைவெல்லத்தில் செய்யப்படும் முட்டாசி, மணப்பாறை முருக்கு, கிருஷ்ணகிரி எள்ளுருண்டை இவற்றை சிறு தீனியாக சாப்பிட குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.  தொ(ல்)லைக்காட்சி விளம்பரங்களை ஆக்ரமிக்கும் பண்ணாட்டு கோக்கோ சாக்லெட்டுகளைக் காட்டிலும் பன்மடங்கு பாதுகாப்பு தருவதுமட்டுமல்ல நமது உடலுக்கு ஆரோக்கியம் தருவதும் இதன் சிறப்பாகும்.

மழைக்காலம் உடலுக்கும், மனதிற்கும் மிகவும் இதம் தரக்கூடியது. கொஞ்சம் உங்கள் மனதையும், வீட்டு ஜன்னலையும் திறந்து வைத்து முகத்தில் தெறிக்கும் சாரலையும் சேர்த்து இரசித்து கூடிச் சுவையுங்கள் உணவு ருசிக்கும், உள்ளம் இரசிக்கும், உடல் வலுப்படும்.

சத்யா


Spread the love