பொதுவாக நாம் சாப்பிடக்கூடிய காய்கறிகள், உடல் நலத்திற்கு மட்டும் இல்லை, மனரீதியாகவும், தோல் மற்றும் முடி ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு ஊட்டமளிக்கக் கூடியதாக இருக்கின்றது… உடலில் பிண்ணி பிணைந்திருக்க கூடிய ஒவ்வொரு உறுப்புகளும் நமது உணவுமுறைகளோடு சார்ந்துதான் இருக்கின்றது.. இதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கீரைகளில் முழுக்க முழுக்க நார்சத்து அடங்கியிருக்கின்றது. இதனால் உடலின் நீரேற்றம் தடைபட்டு,தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. அதோடு கீரைகளில் முக்கிய சேமிப்பாக இருக்கக்கூடிய இரும்புசத்து மற்றும் செழிப்பான முடி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது. இளம் வயதினர், வாரத்திற்கு அதிகப்படியான கீரை உணவுகளை எடுப்பது, பிற்காலத்தில் ஏற்பட கூடிய முடி உதிர்வை தடுக்க முடியும்..
இரண்டாவது இடத்தில் இருக்கின்ற மற்றொரு பொருள் கேரட்.. இது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் பயனளிக்கும்… முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் கேரட் முக்கியமான அம்சமாக இருக்கின்றது. அதற்கு காரணம் கேரட்டில் இருக்கும் வைட்டமின் b7 மற்றும் பயோட்டின்.. இது தலைமுடிக்கு சிறந்த டானிக்காக செயல்படுவதோடு, முடி வேர்க்கால்களை வலிமை அடையவும் செய்கிறது..
கேரட்டை வைத்து நல்ல முடி மாஸ்க்கும் தயார் செய்யலாம்… கேரட்டை வேகவைத்து அரைக்க வேண்டும். இதற்கு கேரட்டை வேக வைத்த தண்ணீரை அப்படியே பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்… அந்த பேஸ்ட்டை முடிக்கும் தலைக்கும் நன்கு கசக்கி காய விடவேண்டும். ஒரு அரை மணி நேரம் கழித்து தலைமுடியை சுத்தம் செய்யலாம்… இதனால் முடி உதிர்வு நிற்பதோடு, முடி வளர்ச்சியையும் தூண்டும்..
வெங்காயம், நம்முடைய தினசரி சமையலிற்கு பயன்பட கூடிய முக்கிய உணவு பொருள்… இதில் தலை முடி வளர்ச்சிக்கான பங்களிப்பு அதிகமாகவே நிறைந்திருக்கின்றது…. இரும்பு, சிங்க், மற்றும் பயோட்டின் முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய ஆற்றலை கொண்டிருப்பதனால், முடி உதிர்வு ஏற்படாது..
தலைமுடிக்கு ஊட்டமளிக்கக்கூடிய மற்றொரு பொருள் சர்க்கரை வள்ளி கிழங்கு… இதில் அவசியம் வாய்ந்த பீட்டா கரோட்டின் அடங்கியிருக்கின்றது. நமது உடலானது இதனை வைட்டமின் ஏ வாக எடுப்பதனால், தலை முடி வலிமைக்கு உதவியாக இருக்கும். முடி உதிர்வு பிரட்சனையும் குறைந்து விடும்…
முடி உதிர்விற்கு எதிர்த்து போராடக்கூடிய ஆன்டிடோட் கருவேப்பிலையில் இருக்கின்றது. பெண்களின் முடி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் கெராட்டின் இந்த கருவேப்பிலையில் மட்டும் அதிக அளவில் இருக்கின்றது. அதனால் கருவேப்பிலையை உணவில் மட்டுமில்லாமல், வெந்நீரில் காய்த்து அல்லது காலையில் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வருவதனால் முடி கருமையாக செழித்து வளரும்.. இதை தொடர்ந்து பீன்ஸ், பச்சை மிளகாய், பீட்ரூட், பூண்டு இந்த இயற்கை உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்கும்…