மனித உடலின் அஸ்திவாரமே எலும்புகள் தான்.. சிலர் பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும், மிக சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.. அதிக பளுவையும் கையாளுவார்கள். அதற்கு மூல காரணம், அவர்களின் பளுவான எலும்புகள்தான். சிலர் நல்ல உடற்கட்டோடு இருந்தாலும், வேளையில் சுறுசுறுப்பு இருக்காது. அதற்கு, சரியான கால்சியம் ஊட்டச்சத்தும், தேவையான உடற்பயிற்சியும் இல்லாததுதான்… இதனால் என்னதான் சிக்ஸ் பேக் பாடியாக இருந்தாலும், அவர்களுக்கு வில் பவர் சுத்தமாக இருக்காது.
எலும்புகள் பலம் பெற வைட்டமின் டி மிக மிக அத்தியாவசியம்.. இந்த வைட்டமின் சூரிய ஒளியில் இருந்தும் நமக்கு எளிதாக கிடைக்கும். அதை தவிர, நாம் உண்ணும் உணவில் இது போன்ற விட்டமின்கள் எடுத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில், தினமும் தவறாமல் ஒரு டம்ளர் பால் குடித்து வருவது நல்லது. வயதானவர்கள் இரவு தூங்க செல்லும் முன்பு, காய்ச்சிய பசும்பாலை ஒரு டம்ளர் அளவு குடிக்கலாம்.
எலும்பு பலவீனமாக இருப்பதாக உணர்ந்தால், தினமும் நிலக்கடலை 100 கிராம், வெல்லம் 50 கிராம், தயிர் ஒரு கப், ஒரு டம்ளர் மோர், ஒரு வேலை உணவில் மீன், தினம் ஒரு அவிச்ச முட்டை சாப்பிட்டு வந்தால், கால்சியம் குறைபாடின்றி எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். முடிந்த வரை இந்த உணவுகளை வழக்கமாக்கி கொள்வது நல்லது.
சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்வதை விட, டீ, காபி குடிப்பதே இன்றைய காலத்தில் பேஷன் ஆகிவிட்டது. இதனால் சரியான நேரத்தில் முழுமையாக சாப்பிட கூட முடியாது.. ஆகையால், டீ, காபியை ஒழித்து விட்டு நடைபயிற்சி, ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை அவசியமாக்கிக்கொண்டு, புகை மற்றும் மதுபழக்கத்தை மறந்தாலே உங்களது ஆரோக்கியம் சீராக இருக்கும்.