தேர்வுகளை எதிர்கொள்ள:-

Spread the love

தேர்வுக் காலமாக இருப்பதால் மாணவர்கள் தேர்விற்கு செல்லும் முன்னர் தங்கள் உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்ள தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். குறிப்பாக பழங்கள் தான் மூளைக்கு வலுவூட்டக்கூடிய உணவுகளாகும்.

காலை எழுவதிலிருந்து பரீட்சைக்குச் செல்லும் முன்பு வரை தங்கள் உணவுப் பழக்க வழக்கங்களைச் சிறிது மாற்றி சீர்படுத்திக் கொண்டால் தேர்வில் வெற்றி நிச்சயம். இதற்கு உபயோகப்படும் பழங்களில் முதலிடம் வகிப்பது ஆரஞ்சுகளாகும். இதனை பழமாகவோ, அல்லது சாறாகவோ காலை உணவில் சேர்த்துக் கொண்டால் நரம்பு மண்டலம் வலுப் பெறும் சீராக மூளைக்கு இரத்த ஓட்டம் செல்லும் அதிகமாக மூளையை பயன்படுத்த இயலும். எனவே, மதிப்பெண்களும் அதிகம் பெறலாம். அனைவருமே இதனை வாழ்வில் கடைபிடித்தால் வெற்றி நிச்சயமாகும்.

ஸ்பெஷல் ஆரஞ்சு ஜுஸ்

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு பழ சாறு       – 2 கப்

எலுமிச்சைச்சாறு      – 2 – 3 தேக்கரண்டி

சாத்துக்குடி சாறு       – 1 கப்

சாட் மசாலா  – 1 தேக்கரண்டி,

ஐஸ் (நொறுக்கியது) – தேவைக்கு.

செய்முறை:

அனைத்தையும் ஒன்றாக கலந்து ஐஸ் போட்டு பருகிட மிகவும் சுவையாகவும், சத்தாகவும் அமையும்.

ஆரஞ்சு மெலடி

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு பழச்சாறு                 – 2 கப்,

உப்பு                                       – ஒரு சிட்டிகை,

இந்துப்பு                                 – ஒரு சிட்டிகை

எலுமிச்சம் பழ சாறு – 2 தேக்கரண்டி

சர்பத் (ஜீனி பாகு)                – 2 மேஜைக் கரண்டி

தேன்                                       – 2 மேஜைக் கரண்டி

ஆரஞ்சு கிரஷ்                        – 2 மேஜைக் கரண்டி

ஐஸ் (நொறுக்கியது)            – தேவைக்கு.

செய்முறை:

அனைத்தையும் ஒன்றாக கலந்து ஐஸ் போட்டு பருகிட புதிய சுவையாக இருக்கும்.

ஆரஞ்சு லஸ்ஸி:

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு பழச்சாறு                 – 2 கப்,

வெனிலா ஐஸ்கிரீம்             – 1 கப்

புளிப்பில்லாத தயிர் – 11/2 கப்

பொடித்த ஜீனி                      – தேவைக்கு

நொறுக்கிய ஐஸ்                  – தேவைக்கு

ஆரஞ்சுப் பழசுளை               – அழகு படுத்திட

செய்முறை:

ஆரஞ்சு பழ சாறை தயிருடனும் ஜீனியுடனும் சேர்த்து மிக்ஸியிலிட்டு அரைத்து அதனுடன் ஐஸ் கலந்து ஆரஞ்சு பழ சுளைகளை அழகிற்கு வைத்து கிளாஸில் ஊற்றி பருகிட வெயிருக்கு ஏற்ற புது சுவையாக அமைந்திடும்.


Spread the love