நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக் கூடாது?

Spread the love

ஒவ்வொரு நோய்க்கும் ஆகும் உணவையும், ஆகாரப் பொருளையும் பத்தியம் என்று சித்தர்கள் கூறிச் சென்றுள்ளனர். ஒவ்வொரு நோயிற்கும் காரணமாக உள்ளது வாத, பித்த, கப தோஷங்களில் உள்ள சமநிலை சீரற்று இருப்பது தான். மூன்று தோஷங்களினை சீர்படுத்த, குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்த இயலும். அதற்கு உதவும் உணவுகள் எது? மூலிகைகள் எது? என்பதை அறிந்து கொள்வதும் அவசியம்.

இவ்வகையில் இங்கு நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவுகளில் என்ன சாப்பிடலாம்? என்ன வகையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மன அழுத்தம் காரணமாக நீரிழிவு ஏற்படுகிறது என்பதை தற்போதைய மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகிறது. இதற்கு உடற்பயிற்சி செய்வது எளிதான ஒன்று என்றாலும், மூளைக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அதிகம் அமைந்தால் மூளை இயக்க, நேர்மறை எண்ணங்கள், மன நிலையை ஒருமுகப்படுத்துதல் போன்றவை அமையும். இதற்குரிய உணவுகள் ஆலிவ் எண்ணெய், பசுமையான இலைகள் கொண்ட கீரை வகைகளில் உள்ளது. கோழிக்கறி, முட்டை, மீன், ஆட்டிறைச்சி உணவுகளைக் குறிப்பிட்ட அளவில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

ஒமேகா 3, அமினோ அமிலங்கள், வைட்டமின் டி, கொழுப்பு அமிலம் முட்டையில் உள்ளது. காய்களில் முட்டைகோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி, தக்காளி, வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடலாம். உருளைக் கிழங்கு, பீன்ஸ் தவிர்க்க வேண்டும். பானங்களில் கொழுப்பு நீக்கிய பால் மூலம் தயாரிக்கப்பட்ட காபி, தேனீர், மோர், மிளகுரசம், எலுமிச்சம்பழச்சாறு, சோடா பானங்களை அருந்தலாம். மது வகைகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உணவைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள் கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, சாத்துகுடி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒரு பழமோ அல்லது சிறு துண்டுகளோ சாப்பிட்டுக் கொள்ளலாம். எப்போதாவது ஒரு தடவை முந்திரிப்பருப்பு, நிலக்கடலை சாப்பிட்டுக் கொள்ளலாம். குறைந்த இரத்த அர்த்தம், நீரிழிவு நோயாளிகள் விரதம், பட்டினி இருப்பது கூடாது.

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பழவகை உணவுகளில் வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா, திராட்சை, உலர் திராட்சை, ஆப்பிள் பழ வகைகளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இனிப்பான பழரசங்கள், பழக்கூழ், துவையல்களை தவிர்க்கவும். காய்கறி வகைகளில் உருளைக் கிழங்கு, பீன்ஸ், பட்டாணி வகைகள் தவிர்க்க வேண்டும். குளிர் பானங்கள் கோகோ கோலா, ஃபாண்டா, பெப்ஸி என்று எவ்வித குளிர்பானங்களையும் அருந்தக் கூடாது.

அது போல ஊட்டச்சத்துப் பானம் என்று போர்ன்விட்டா, பூஸ்ட், காம்ப்ளான் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். ஐஸ்கிரீம், வெண்ணெய், நெய், டால்டா, வறுத்த உணவுகளை உண்பதை தவிர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் எந்த விதமான கஞ்சி, கூழ், களி, சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதற்குக் காரணம் சமைத்த உணவு, சமைக்காத உணவு, திரவ உணவு, திட உணவு இவை மாவுச் சத்து சீரணமாவதை வெவ்வேறு விதமாக கட்டுப்படுத்தும்.

ராகிக்கஞ்சி, கோதுமைக்கஞ்சி இவைகள் ரத்தத்தில் சரக்கரை அளவை அதிகப்படுத்தும். தீவிர பசியை, பசி உணர்வை திரவ உணவுகளால் தீர்க்க இயலாது. அதிகம் உட்கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்டால் கம்பை அடையாகவும், கோதுமையை சப்பாத்தியாகவும் செய்து சாப்பிட்டால், ரத்தச் சர்க்கரை அதிகமாக மாறுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அது போல ஆப்பிள் பழத்தை பழச்சாறாக தயாரித்துக் குடிப்பதை விட, முழுப்பழத்தை சிறு துண்டுகளாக அல்லது அப்படியே கடித்துச் சாப்பிடுவது நல்லது.                

கா. ராகவேந்திரன் 


Spread the love