வளரும் பருவத்தில், இருபது வயதில் உள்ளவர்களுக்கு, பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுவதால் அவர்களுக்கும், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்த உணவாகும்.
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும், நாற்பது வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் பால் அவசியமில்லை என்றே கூறலாம். பாலை அதிகமாக அருந்தி வருபவர்களுக்கும் சிறுநீரகம், நுரையீரல், தோல் ஆகியவை விரைவில் பழுதடைந்து விடும். சிறுநீரக நோய் ஏற்படும். ஒரு சராசரி மனிதனின் ஒரு கிலோ உடல் பருமனுக்குத் தேவையான புரதம் 1 கிராம் என்று ஊட்டச்சத்து உணவு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த அளவு புரதமானது, நாம் அன்றாடம் சாப்பிடும் பருப்பு மற்றும் கீரை வகைகளிலேயே கிடைத்து விடுகிறது. பாலைக் காட்டிலும் பாலினால் தயாரிக்கப்பட்ட பால்கோவா, பால் ஐஸ்கிரீம், பாலாடைக் கட்டி பல மடங்கு அடர்த்தியானவை என்பதுடன் ஜீரண உறுப்புகளை விரைவில் பாதிப்படையச் செய்யும். சத்துக்காக சாப்பிடாமல் ருசிக்காக பால் வகை உணவுகளை சாப்பிடுகின்றனர். இதனை தவிர்த்து விட வேண்டும்.
நீங்கள் என்ன வகையான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருக்க, நாம் கீழ்க்கண்ட மூன்று விஷயங்களில் கவனிக்க வேண்டியது அவசியம்.
சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது,
தேர்ந்தெடுத்த உணவை சமைக்கும் முறை,
சமைந்த உணவை முறையாக உண்ணுவது தான் அவை.
உணவைத் தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்கள்
வயதுக்கு ஏற்ப, எந்தெந்த வயதில் எதை உணவாக தேர்ந்தெடுத்து சாப்பிடுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்ற உணவைத் தேர்ந்தெடுப்பதுடன், எந்தெந்த வேலைக்கு எந்த உணவு சரியாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை காலம், குளிர்காலம், பனிக் காலங்களில் தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்க பல உணவுகள் உண்டு. அதுபோல ஒரு நாளில் காலை, பகல், இரவு என்று ஒவ்வொரு வேளைக்கும் எந்தெந்த உணவு உட்கொள்ள வேண்டும் என்பதும் தெரிந்து கொள்வது அவசியம். உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப அதாவது ஆரோக்கியமான உடல் நிலை மற்றும் நோய்வாய்ப்பட்டிருக்கும் போதுள்ள உடல் நிலை என்று இரு மாறுபட்ட உடல் நிலைகளில், எந்த உணவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
சுறுசுறுப்பாக உள்ளவரும், நோயாளியாக உள்ளவரும் ஒரே வகை உணவை உட்கொள்ள முடியுமா? முடியாது. பருவ வயதினரும், முதிய வயது உள்ளவர்களும் ஒரே வகை உணவை உட்கொள்ள முடியுமா? முடியாது. நமக்கு தேவையான, சரியான உணவைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அஜீரணமும், மலச்சிக்கலும் ஏற்படாது. மலம், சிறுநீர், தேவையில்லாத வாயுப் பொருட்கள் கழிவுகளாக உடலில் தேங்கி இருக்காமல் தினசரி சிரமம் இன்றி கழிந்து விடுவது அவசியம். மேற்கூறிய கழிவுகளே வயிற்று வலி, தலைவலி, இடுப்பு வலி, இருமல், சர்க்கரை வியாதி, ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.