ஒவ்வொரு நாட்டிலும் தங்களுக்கென தனியான கலாச்சாரங்களை கடைபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரங்களும் வியப்பை தர கூடியதாக இருக்கும். இது போன்ற கலாச்சாரங்கள் அந்த நாட்டில் வாழும் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், சூழல் ஆகியவற்றை பொறுத்து தான் மாறும். குறிப்பாக துபாய், சீனா, கொரியா, போன்ற பல நாடுகளில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் பரவி உள்ளது. முக்கியமாக உணவு முறையில் பல வேறுபாடுகள் உள்ளது.
துபாய்
துபாய் கலாச்சாரத்தில் உணவு உண்ணும் போது இடது கையால் சாப்பிடக்கூடாது. எப்போதுமே வலது கையால் மட்டுமே சாப்பிட வேண்டும். இடது கையை இவர்கள் கழிவறையை போன்ற இடங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.
தென் கொரியா
தென் கொரியாவில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் உண்ணும் உணவின் முதல் பங்கை குடும்ப தலைவர் தான் சாப்பிட வேண்டும். இது ஒரு வித்தியாசமான முறையாகும்.
சீனா
நம் நாட்டில் வெளிப்படையாக ஏப்பம் விட்டால் அதிகமாக உணவு உண்டதாக கிண்டல் செய்வார்கள். ஆனால், சீனாவில் ஏப்பம் விட்டால், ஏப்பம் விட்டவரை பாராட்டுவார்கள். ஏப்ப சத்தம் கேட்டால் அவர் உண்ட உணவு பிரமாதமாக இருந்ததாக கூறுவார்கள்.
தாய்லாந்து
நம் நாட்டில் ஃபோக்கை நூடுல்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடுவதற்காக பயன்படுத்துவோம். ஆனால் ஃபோக்கை பயன்படுத்தி சாப்பிடக்கூடாது. வாயில் ஃபோக் பயன்படுவதே மிக மோசமான விஷயமாக கருதுகிறார்கள்.
இத்தாலி
இத்தாலி நாட்டில் சாப்பிட்ட பின் காப்பசினோ என்கிற பானத்தை குடித்தால் அது ஆரோக்கியமற்ற பழக்கமாக கருதுகின்றனர். எப்போதுமே இவர்கள் சாப்பாட்டிற்கு பின் பால் சார்ந்த உணவு பொருட்களை உண்ண மாட்டார்கள்.
கஜகஸ்தான்
நம் நாட்டில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு கப் நிறைய டீ கொடுப்போம், அது தான் நம் பாரம்பரியம். ஆனால் பாகிஸ்தானில் கப் நிறைய டீ கொடுக்க கூடாது. ஏனென்றால், அது அந்த விருந்தினரை விரைவாக போக சொல்வதற்கு சமம். பாதி கப் டீ கொடுத்தால் அவர்கள் மீது நமக்கு அதிக அன்பு உள்ளதாம்.