உணவு / வாழ்க்கை முறை கட்டுப்பாடுகள்

Spread the love

• உணவில் உப்பை குறைக்க வேண்டும். உப்பு நிறைந்த அப்பளம், ஊறுகாய், வறுவல்கள் இவற்றை தவிர்க்க வேண்டும். புளியையும் குறைக்கவும்.

• குறைந்த கொழுப்பு, குறைந்த உப்பு உள்ள உணவுகள் உத்தமம். அவ்வாறே சர்க்கரையை குறைக்கவும்.

• உகந்த உணவுகள்:- கோதுமை, அரிசி, ராகி, முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பச்சை காய்கறிகள், பருப்புகளில் பயத்தம்பருப்பு, ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சைப் பழங்கள், ஆப்பிள், வாழைப்பழம், நல்லெண்ணை, சூரியகாந்தி எண்ணை, மீன் போன்றவை.

• தவிர்க்க வேண்டியவை:- வறுத்த, பொரித்த உணவுகள், வனஸ்பதி, உப்பு, நெய், வெண்ணை, ஊறுகாய், அப்பளம், வறுவல், பாம் ஆயில்   , தேங்காய் எண்ணை, மாமிச உணவுகள், சாக்லேட், கேக், ஐஸ்கிரீம், செயற்கை குளிர்பானங்கள்.

• பட்டினி கிடக்க வேண்டாம்

• இஞ்சி, பூண்டு, நெல்லிக்காய், எலுமிச்சம் பழம், தர்பூசணி, திராட்சைப்பழம் இவை உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். கருப்புத் திராட்சையை நன்கு கழுவி தோலுடன் உண்பது நல்லது. இதயத்தை காக்கும்.

• புகைப்பது எல்லா வகைகளிலும் கெடுதி செய்யும். அதுவும் குறிப்பாக உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கும். எனவே புகைப்பழக்கம் இருந்தால் உடனே நிறுத்தவும். மது அருந்துவதையும் கண்டிப்பாக நிறுத்தவும்.

• பொட்டாசியம், கால்சியம் இவை உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பவை. பொட்டாசியம் பழங்கள், காய்கறிகளிலிருந்து கிடைக்கும். கால்சியம் பால் சார்ந்த உணவுகளில் ஒன்று.

•             யோகா, உடற்பயிற்சி, தியானம் இவைகளை செய்து வரவும். மனஉளைச்சல், டென்ஷன், மனச்சோர்வு, மனஅழுத்தம் இவற்றை போக்க, இந்த வழிகள் தான் சிறந்தவை.

•             மலச்சிக்கல், இருக்கக் கூடாது. வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.


Spread the love