உடற்பருமன் மிக்கவர்களையும், அதிக எடை உள்ளவர்களையும் பார்க்கும் போது அவர்கள் அளவிற்கு அதிகமாக உண்ணக் கூடியவர்கள் என்ற எண்ணமே உடனே நமக்குத் தோன்றுகிறது. உடல் எடை கூடுவதற்கும், உடற்பருமன் அதிகரிப்பதற்கும் உணவைத் தவிர வேறு பல காரணங்களும் உண்டு. குறைந்த அளவு உண்ணுகின்றவர்களும் உடற்பருமன் மிகுந்தவர்களாக இருப்பதும் இதனால் தான்.
பல நேரங்களில் வேறு பல உடற்கோளாறுகளுக்காகத் தொடர்ந்து உட்கொள்ளப்படுகின்ற பல மருந்துகள், மாத்திரைகள் காரணமாகவும் உடற்பருமன் கூடலாம். உதாரணமாக, மனத்தொய்வு (Depression), மனப் பதட்டம், பரபரப்பு (Anxiety) உயர் ரத்த அழுத்தம், கருத்தடை மாத்திரைகள், வலிப்பு நோய் மற்றும் சில மனநலக்கோளாறுகளுக்கும் உட்கொள்ளப்படுகின்ற மருந்துகள் பல வேளைகளில் உடற்பருமனை அதிகரிக்கச் செய்கின்றன.
இது போன்று உங்களுக்கும் இருக்கலாம் என்று தோன்றினால் உங்கள் மருத்துவரிடம் விஷயத்தைக் கூறி அது பற்றிக் கலந்தாலோசியுங்கள் தேவைப்பட்டால் உங்கள் மருத்துவர் மருந்துகளை மாற்றவோ, புதிய மருந்துகளைப் பரிந்துரைக்கவோ செய்வார். அவ்வாறின்றி நீங்களாகவே மருந்துகளைக் குறைக்கவோ, நிறுத்தவோ செய்யாதீர்கள்.