உங்களுக்கு ஸ்ட்ரெஸ் வரும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது (உதாரணமாக Boss உடன் Discussion அல்லது Meeting) அதற்கு 2 மணி முன்பாக அதிக கார்போ-ஹைடிரேட் உணவுகளை உட்கொள்ளவும். தானியங்கள் பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
Serotonin என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவும். இந்த ஹார்மோன் குறைந்தால் ஸ்ட்ரெஸ் சுலபமாகத் தாக்கும்.
பச்சை காய்கறிகள், கீரைகள், ‘B’ விட்டமின் செறிந்தவை. இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், Serotonin, Dopamine போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
அலாபாமா பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி விட்டமின் ‘C’ ஸ்ட்ரெஸ் உண்டாக காரணமாக ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. ஆரஞ்சு ஜுஸ் Vitamin ‘C’ செறிந்தது. ஆனால் அதைவிட சிறந்தது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய், ஒரு ஆரஞ்சை விட இருமடங்கு விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. நெல்லி ஜீஸ் தினமும் சாப்பிட்டால் மிகவும் நல்லது. முளை கட்டிய உளுந்தும் போக்க வல்லது.
வேர்க்கடலை அடங்கிய சாக்லேட் மனதை அமைதிப்படுத்த உதவும் Endrophins ஊக்குவிக்கும். மீன் ஸ்ட்ரெஸ்ஸால் உண்டாகும் Aggression ஐ குறைக்கும்.
எந்த வகையானாலும் சரி, பழங்கள் நல்லவை. ஓட்ஸ் கஞ்சி Strees ஐ குறைக்க உதவும். இந்த கஞ்சியுடன் வாழைப்பழம் சேர்த்துக் கொண்டால், தூங்க உதவும். Melatonin ஹார்மோன் கிடைக்கும்.