மனிதனின் மூளையானது, மனித உடலில் உற்பத்தியாகும் ஆற்றலின் பெரும்பகுதியை தன்னுடைய செயல்திறனுக்காகப் பயன்படுத்தும் முதன்மை உறுப்பாகும்.
மூளை 24 மணி நேரமும் நன்கு சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமென்றால், மூளை இயங்கத் தேவையான உயிர்ச்சத்துக்கள், வளர் சத்துக்கள், நுண் சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தின் மூலமாக தடையின்றி 24 மணி நேரமும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இவையாவும் சிறப்பாக நடைபெற வேண்டுமென்றால் அவை நாம் உண்ணும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உள்ளன.பெற்றோர்களான நாம் தேர்வுக் காலங்களில் எவ்வகையான உணவுகளை விலக்க வேண்டும்.
எவ்வகையான உணவுகளை அளிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம், தேர்வுகள் நம் குழந்தைகளின் உடல் அளவிலும், உள அளவிலும் எவ்வகையான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தடுக்க முடியும்.
ஆயுர்வேதம்.காம்