நாம் வாழும் வாழ்க்கையின் முழுப் பலனைப் பெற, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சுவரில்லாமல் சித்திரமில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தேவை உணவு. அதாவது தேவையான எல்லா சத்துக்களும் சேர்ந்த நல் உணவு. உணவே கடவுள். உணவே மருந்து. உணவை சீர்திருத்தினால், ஆரோக்கியம் பெருகும். ஆயுள் உயரும். பெட்ரோல் போடாத வண்டி ஒடாது. காருக்கு எப்படி பெட்ரோலோ, உடலுக்கு உணவு. உணவை கண்டபடி உண்ணமால் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும். வயதிற்கேற்ப உணவு கட்டுப்பாடுகள் அவசியம் ஆரோக்கியத்திற்கு தேவை சத்துள்ள, ருசிமிக்க, சரிசம விகித உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்
புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், உப்பு, உலோக தாதுப் பொருட்கள் இவை உடலுக்கு தேவையான சத்துப் பொருள்கள். உடலுக்கு தேவையான எரிசக்தியை ‘கலோரி‘ என்று கணக்கிடுகிறோம். ஒரு மனிதனுக்கு தேவையான கலோரிகள் எவ்வளவு என்று நிர்ணயிப்பது அவன் செய்யும் வேலையைப் பொருத்தது.
இவை கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு இன்னும் அதிக கலோரிகள் தேவை.
சமச்சீர் உணவு
தினசரி உணவுடன் அரிசி, பால், பருப்பு, காய்கறி, கீரை, இத்யாதி கலக்க வேண்டும். சாப்பாடு கீழ்க்கண்ட விகிதத்தில் இருக்க வேண்டும்.
அரிசி 350 கிராம்
மில்லேட்
தானியங்கள் 175 கிராம்
பால் 280 கிராம் 275 – 300 மி.லிட்டர்
பருப்பு – 105 கிராம்
காய்கறிகள் – 210 கிராம்
கீரைகள் – 140 கிராம்
எண்ணெய் – 70 கிராம் 70 – 75 மி.லிட்டர்
பழங்கள் – 70 கிராம்.
இது ஒரு மனிதனின் ஒரு தினத்திற்கு சராசரி தேவை. கிடைக்கும் கலோரிகள் – 2600. மேலே குறிப்பிடப்பட்ட சத்துக்கள் முழுமையாக கிடைக்க, உங்கள் சமையல் முறையும் உதவ வேண்டும். இவற்றை தினந்தோறும் தராசில் அளந்து, நிறுத்தி தயாரிப்பது சாத்தியமில்லை. ஒரு தடவை செய்து பிறகு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசி உணவு
தென்னிந்தியர்களின் அடிப்படை உணவு அரிசி. அரிசியில் புரதம் குறைவாக (6.5 சதவிதம்) இருப்பதால் பருப்பு போன்ற புரதம் மிகுந்தவற்றை கலந்து உண்ணுவது இக்குறையை சீராக்குகிறது. கஞ்சியை வடிக்காமல் சமைப்பது சிறந்தது. ஆனால் இப்பொழுது ப்ரஷர் குக்கர்கள் பரவலாக உபயோகிப்பதால் கஞ்சி வடிக்கட்ட வேண்டிய நிலைமை ஏற்படுவதில்லை. ஆவியில் வேகும் அரிசியும் கஞ்சி வடிக்கப்படாத சாதத்திற்கு சமமே மிஷினில் நெல்லை அரைத்து, பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை விட கைக்குத்தல் அரிசி சிறந்தது. இதில் புரதம் 8.49% சதவிகிதம் உள்ளது.
கோதுமை
முழுக்கோதுமையில் புரதம் 11.77 சதவிகிதம் உள்ளது. கோதுமை குடலுக்கு குணமளிக்கும். கோதுமையை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
பருப்புகள்
அரிசியில் உள்ள புரதக்குறைப்பாட்டை பருப்புகள் சரி செய்து விடும். துவரம் பருப்பில் 23%, பாசிப்பயற்றில் 24%, உளுந்தில் 24%, கடலைப்பருப்பில் 17%, புரதம் உள்ளது. அன்னத்துடன் கலந்து சாப்பிடும் பருப்புகளை அதிகம் வேக வைக்க வேண்டும். மற்றபடி, கறிகாய்களுடன் வேக வைத்து கூட்டு செய்து உண்ணலாம். தினமும் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடைத்த பருப்புகளை விட முழுப்பருப்புகள் நல்லவை. முளை கட்டிய பருப்புகள் வைட்டமின் ‘சி‘ செறிந்தவை.
பால்
பால் ஒரு பரிபூரண உணவு. நோயைத் தடுக்கும். எலும்புகள் உறுதியடையும். தைராய்ட் சுரப்பியை மேம்படுத்தும். பசும்பாலில் 3.30% புரதமும், 3.60% கொழுப்பும், எருமைப்பாலில் 4.75% புரதமும், 7.70% கொழுப்பும் உள்ளன. பெண்கள் குறிப்பாக, தாய்மார்கள் பசும்பாலை தவறாமல் குடிக்க வேண்டும்.
கொழுப்புச் சத்துணவு
இதுவும் முக்கியமாக உணவில் கலக்கப்பட வேண்டும். மிருகக் கொழுப்பில் வைட்டமின் ‘ஏ‘ அதிகமாக கிடைக்கிறது. பசும்பாலில் 3.6%, எருமைப்பாலில் 8.8% கொழுப்பு சக்தி உள்ளது. உள்ளில் 43% , தேங்காயில் 41%, நிலக்கடலையில் 40%, பாதாம் பருப்பில் 59%, கொழுப்பு உள்ளது.
வைட்டமின்கள்
வைட்டமின்களில் முக்கியமானது வைட்டமின் ‘ஏ‘ அடங்கிய வைட்டமின் உணவுகளை காட்டுகிறது.
உணவு
பசும்பால்
எருமைப்பால்
கோழி முட்டை
காட்லிவர் எண்ணெய்
கொத்தமல்லி கீரை
முட்டைகோஸ்
பசலை கீரை
கேரட்
வைட்டமின் ‘ H ‘ குறைந்தால் தசைகள், நரம்புகள் தளர்ந்து விடும். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும், வளர்ந்தவர்களுக்கும், உலக சமச்சீர் அளவில் 3000 தேவை. 100 – 125 கிராம் முழுதானியங்கள், 175 கிராம் கீரைகளும், காய்களும் 75 கிராம் பருப்புகளும் தினமும் சாப்பிட்டால் போதுமான அளவு வைட்டமின் கிடைக்கும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கு நரம்புகளின் சக்திக்கும் தேவையான வைட்டமின் பி – 2, பால், தயிர், முட்டை, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு இவற்றிலிருந்து கிடைக்கும்.
தோல் பராமரிப்பு, நோய் தடுப்பு சக்தி இவற்றுக்கு தேவை வைட்டமின் ‘சி‘. பழங்களிலும் (ஆரஞ்ச், எலுமிச்சை, கொய்யா, பப்பாளி, தக்காளி) கீரைகளிலும் உண்டு. முட்டைகோஸ், பச்சை கொத்தமல்லி, பீட்ரூட், பூசணிக்காய், காலிஃப்ளவர், முருங்கைக்காய் இவைகளும் வைட்டமின் ‘சி‘ உள்ளவை.
வைட்டமின் ‘டி‘ காலை வெய்யிலில் சூரிய நமஸ்காரம் செய்தாலே கிடைக்கும். மற்றபடி காட் லிவர் எண்ணெய், வெண்ணெய், முட்டை இவற்றில் உண்டு.
வைட்டமின் ‘ஈ‘, ‘எஃப்‘, ‘கே‘ இவை முழு கோதுமை, அரிசி, கோழி, முட்டை, பால், கீரைகளில் கிடைக்கும்.
தாதுப்பொருட்கள்
சமச்சீர் உணவில் கால்சியம், இரும்பு போன்றவைகளும் சேர வேண்டும். கால்சியம் கர்ப்பிணிகளுக்கு தேவை. எலும்புகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது கால்சியம். பசும்பாலில் – 0.12%, தயிரில் – 1.125 ம் கால்சியம் உள்ளது. முருங்கக்கீரையும், கால்சியம் உள்ள கீரைகளுள் ஒன்று.
இரும்புச்சத்து
ரத்தம் உடலில் ஊற இரும்புச்சத்து தேவை. இந்தச்சத்து ஆப்பிள், பேரீச்சை, சோயா, பட்டாணி, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை, ஒட்ஸ், கோதுமை இவற்றில் உள்ளது.
கீரைகள்
கீரைகள் மலிவாகவும் எளிதாக கிடைக்கும் சத்துள்ள உணவு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீரையை உணவில் கட்டாயமாக சேர்த்து கொள்ள வேண்டும். கீரையை அதிகம் வேக விடாமல் குறைந்த நீரில் வேக வைக்க வேண்டும். இல்லை, ப்ரஷர்குக்கரில் வேக வைக்கவும். கீரையில் உள்ள முக்கியமான உயிர்ச்சத்துக்கள்.
பச்சை கொத்தமல்லி
சிறுகீரை
மணத்தக்காளிக் கீரை
பசலைக்கீரை
பழங்கள்
மனிதன் உண்ணக்கூடியதில் ஏதாவது ஒரு பழத்தை தினமும் உண்ணுவது அவசியம். பழங்கள் எளிதில் ஜீரணமாகும். அந்தந்த காலத்தில் கிடைக்கும் பழங்களை உண்ணுவது நல்லது. பொதுவாக பழங்களை பகல் 1 மணிக்குள் சாப்பிடுங்கள். ஆப்பிள் இதற்கு விதிவிலக்கு. ஆப்பிள் ஜலதோஷத்தை போக்கும். ஆப்பிளைத் தவிர, நேந்திரம் பழம், எலுமிச்சம் பழம், சதைப்பற்றுள்ள பழங்கள் இவற்றை காய்கறிகளுடன் சேர்த்து உண்ணாதீர்கள்.
ராகி
இது ஒரு தானியம். இதில் 7.1% புரதமும், 1.3% கொழுப்பும் தவிர வைட்டமின் ‘ஏ‘, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு செறிந்தது. மலிவான ராகியால் ரத்தம் சுத்தமாகும், எலும்பு உறுதியடையும், மலச்சிக்கல் நீங்கும். ராகியை சிறிது சிறிதாக உணவில் சேர்த்து கொண்டு வரலாம். கஞ்சியாகவோ, மொத்தையாகவோ இதை தயாரிக்கலாம்.
பச்சை உணவு
நாம் சாப்பிடும் காய்கறி, பழங்களில் 50 சதவிகிதம் பச்சையாக உண்ண வேண்டும். சமைப்பதில் பல காய்கறிகள் தங்கள் சத்தை இழக்கின்றன. வேக வைத்த, சமைத்த காய்கறிகளை உண்பவர்கள் திடீரென்று பச்சை காய்கறிகளுக்கு மாற வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக பச்சை காய்கறி உணவை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். இதனால் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், என்ஸைம்கள் எல்லாம் உடலுக்கு கிட்டும்.
சீரான, ஆரோக்கியமான உணவு பற்றிய குறிப்புகள்
நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சராசரி மனிதனுக்கும் உணவுக்கட்டுப்பாடு தேவை. கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான உணவு 60 வயதுள்ளவர்களுக்கு ஒத்து வராது. வயது ஏற ஏற உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம். 60 வயதானவர்களின் அன்றாட வேலை குறைவு. அவர்களுக்கு 1550 கலோரி போதுமானது.
பசிக்கும் போது உண்ண வேண்டும். வயிறு புடைக்க அளவில்லாமல் உண்ணுவது கூடாது. அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. நன்கு மென்று உண்ண வேண்டும்.
நல்ல தரம் உடைய, இயற்கையான, முழுமையான உணவுப் பதார்த்தங்களை தேர்ந்தெடுத்து உண்ணவும்.
சமையல் விஸ்தாரமாக செய்யாமல், குறைவான நேரத்தில் சமையலை முடியுங்கள். அதிக நேரம் அடுப்பில் சுட வைத்தால் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் இவை அழிந்து விடும்.
காய்கறி, பழங்களின் தோலை ஆழமாக சீவி எடுக்காதீர்கள். ஆப்பிள், வெள்ளரிக்காய் இவற்றின் தோலின் அடியிலேயே சத்துக்கள் நிறைந்திருக்கும். இவற்றை பச்சையாக சாப்பிடவும்.
பழரசமாக மாற்றுவதை விட, பழங்களை நேரடியாக சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும்.
பல தரப்பட்ட உணவுகளை ‘டயட்‘ டில் சேர்த்துக் கொள்ளவும்.
கொழுப்பை தவிர்க்கவும்.
புகையிலை, சிகரெட், மது வேண்டாம்.
சமைக்கும் முன் காய்கறிகளை நன்றாக தண்ணீரில் கழுவலாம்.
தினமும் 6 – 8 டம்ளர் தண்ணீர் பருகவும்.
உண்ணும் போது பாதி வயிற்றில் காய்கறிகள், பழங்கள் தெளிவான ரசம், வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர் இவற்றால் நிரப்பி, கால் வயிற்றில் அரிசி அல்லது கோதுமை பண்டங்களால் நிரப்பி பாக்கியை காலியாக வைக்கவும்.
எந்த வேளை உணவையும் முழுமையாக தவிர்க்க வேண்டாம். காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம்.
அதிகமாக எப்போதாவது சாப்பிட்டால், அதிகப்படி கலோரிகளை எரிக்க அதிக உடல் உழைப்பு தேவை.
டயாபடீஸ் (நீரிழிவு) வியாதிக்கான ‘டயட்‘ நீரிழிவு நோயாளிக்கான உணவுகட்டுப்பாடு கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.
ரத்த குளுகோஸை கட்டுப்படுத்தவும்.
கொலஸ்ட்ரால், டிரைகிளைசெரைட் இவற்றை கட்டுத்தவும்.
உடல் எடையை குறைக்கவும்.
நல்ல சத்துள்ள உணவுகளால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
கஞ்சி எந்த விதமான கஞ்சியும் வேண்டாம்.
சர்க்கரை, வெல்லம், தேன், குளூகோஸ், ஜாம், ஐஸ்கிரீம், இனிப்புகள், பாயாசம்.
நெய், வனஸ்பதி, வெண்ணெய், தேங்காய், பாமாயில்.
வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா போன்றவை.
போர்ன்விட்டா, பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்ப்ளான், கோலா போன்ற பானங்கள்.
வறுத்தவை – எண்ணெய் அதிகமுள்ள பிரியாணி, மற்றபடி பஜ்ஜி, போண்டா, பூரி, வடை, அப்பளம் இவற்றை குறைந்த அளவு டாக்டரின் ஆலோசனைப்படி சேர்த்துக் கொள்ளலாம்.
பிரெட், கேக், சாக்லேட், கிரீம், பிஸ்கெட்.
பழங்கள் – மாம்பழம், மஞ்சள் வாழைப்பழம், சீதாப்பழம், சப்போட்டா, பலாப்பழம்.
பழரசம்.
அசைவ உணவில் லிவர், கிட்னி, மூளை தவிர வறுத்தவை.
ஆல்கஹால் அதுவும் பியர்.
தாராளமாக சாப்பிடக்கூடிய உணவுகள்
சர்க்கரை, பால் சேர்க்காத டீ, காஃபி, சூப், ஆடையில்லாத மோர், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை சாறு, மிளகு ரசம், எண்ணெய் இல்லாத ஊறுகாய், தக்காளி சாறு 1 சிறிய கப், பச்சை காய்கறி சாலட், வெங்காயம், புதினா, தனியா, கறிவேப்பிலை, இஞ்சி, கடுகு.
காய்கறிகளில் கீரை வகைகள், வாழைப் பூ, தண்டு, வெண்டைக்காய், கத்தரிக்காய், வெள்ளரிக்காய், காலிஃப்ளவர், முட்டைகோஸ், முருங்கைக்காய்.
காராமணி, முள்ளங்கி, அவரை, பீன்ஸ், கொத்தவரங்காய், பூசணி, பரங்கி, பீர்க்கங்காய், குடமிளகாய், கோவைக்காய், சௌசௌ.
சுண்டல், முளை கட்டிய தானியங்கள்
வாரம் ஒரு முறை – (ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ள போது) கேரட், மொச்சை.
மாதம் ஒரு முறை – (சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ள போது) பீட்ரூட், உருளைக்கிழங்கு, சேனை, பச்சை வாழைக்காய், சேப்பங்கிழங்கு.
பழங்கள் – ஒரு நாளைக்கு ஒன்று. சிறிய ஆப்பிள், ஆரஞ்ச், மலை வாழைப்பழம், கொய்யா.
பழங்கள் வாரம் ஒரு முறை
தர்பூசணி, முலாம்பழம் (200 கிராம்), பப்பாளி (150 கிராம்), பச்சை திராட்சை 8 – 10, மாதுளம் பழம் – 1 சிறியது.
எண்ணெய்
நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்.
குறிப்பு
மேற்கண்டவை ஒரு வழிகாட்டியாகத் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உங்கள் உணவு அமைய வேண்டும்.
உணவு நலம் அக்டோபர் 2010
1. உணவுக் கட்டுப்பாடு, உடல் ஆரோக்கியம், உணவு சத்துக்கள், உணவே கடவுள், உணவே மருந்து, ஆயுள் உயரும், உடலுக்கு உணவு, உடலுக்கு, தேவையான, ஊட்டச்சத்துக்கள், புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், உப்பு, உலோக தாதுப் பொருட்கள், கலோரி, கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால், சமச்சீர் உணவு, உணவுடன், அரிசி, பால், பருப்பு, காய்கறி, கீரை, அரிசி உணவு, ப்ரஷர் குக்கர், பாலிஷ் அரிசி, கைக்குத்தல் அரிசி, கோதுமை, பருப்புகள், துவரம் பருப்பு, பாசிப்பயறு, உளுந்து, கடலைப்பருப்பு, வைட்டமின், சி, பால், எலும்பு, தைராய்ட் சுரப்பி, பசும்பால், எருமைப்பால், பெண்கள், தாய்மார்கள், கொழுப்புச் சத்துணவு, தேங்காய், நிலக்கடலை, பாதாம் பருப்பு, வைட்டமின்கள், கோழி முட்டை, காட்லிவர் எண்ணெய், கொத்தமல்லி கீரை, முட்டைகோஸ், பசலை கீரை, கேரட், வைட்டமின், பி, தசைகள், நரம்புகள், சருமம், வைட்டமின், பி, 2, தோல் பராமரிப்பு, நோய் தடுப்பு சக்தி, முட்டைகோஸ், பீட்ரூட், பூசணிக்காய், காலிஃப்ளவர், முருங்கைக்காய், வைட்டமின், டி, வைட்டமின், ஈ, தாதுப்பொருட்கள், கால்சியம், இரும்பு, எலும்புகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியம்,
இரும்புச்சத்து, ரத்தம், ஆப்பிள், பேரீச்சை, சோயா, பட்டாணி, உலர்ந்த திராட்சை, ஒட்ஸ், கோதுமை, கீரைகள், சத்துள்ள உணவு, உயிர்ச்சத்துக்கள், பச்சை கொத்தமல்லி, சிறுகீரை, மணத்தக்காளிக் கீரை, பழங்கள், ஆப்பிள், ஜலதோஷம், நேந்திரம் பழம், எலுமிச்சம் பழம், ராகி, தானியம், வைட்டமின், ஏ, கால்சியம், பாஸ்பரஸ், ரத்தம் சுத்தமாகும், எலும்பு உறுதியடையும், மலச்சிக்கல், கஞ்சியாக,
உணவு நலம் அக்டோபர் 2010
உணவுக் கட்டுப்பாடு, வைட்டமின்கள், என்ஸைம்கள், உடல், சீரான, ஆரோக்கியமான, உணவு, பற்றிய, குறிப்புகள், நோயாளிகளுக்கு மட்டுமல்ல, உணவுக்கட்டுப்பாடு, வயிறு, நல்ல தரம் உடைய, இயற்கையான, முழுமையான, உணவுப் பதார்த்தங்கள், சமையல், வெள்ளரிக்காய், சத்துக்கள், நார்ச்சத்து, டயட், புகையிலை, சிகரெட், மது, உடல் உழைப்பு, டயாபடீஸ், நீரிழிவு, வியாதிக்கான, நீரிழிவு நோயாளிக்கான, உணவுகட்டுப்பாடு, ரத்த குளுகோஸ், கொலஸ்ட்ரால், டிரைகிளைசெரைட், உடல் எடை, தவிர்க்க, வேண்டிய, உணவுகள், கஞ்சி, சர்க்கரை, வெல்லம், தேன், குளூகோஸ், ஜாம், ஐஸ்கிரீம், இனிப்புகள், பாயாசம், நெய், வனஸ்பதி, வெண்ணெய், தேங்காய், பாமாயில், வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, போர்ன்விட்டா, பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்ப்ளான், வறுத்தவை, எண்ணெய் அதிகமுள்ள பிரியாணி, பஜ்ஜி, போண்டா, பூரி, வடை, அப்பளம், டாக்டரின், பழங்கள், மாம்பழம், மஞ்சள் வாழைப்பழம், சீதாப்பழம், சப்போட்டா, பலாப்பழம், பழரசம், லிவர், கிட்னி, மூளை, ஆல்கஹால், பியர், தாராளமாக, சாப்பிடக்கூடிய, உணவுகள், சர்க்கரை, பால் சேர்க்காத டீ, காஃபி, சூப், ஆடையில்லாத மோர், எலுமிச்சை சாறு, மிளகு ரசம், எண்ணெய் இல்லாத ஊறுகாய், பச்சை காய்கறி சாலட், வெங்காயம், புதினா, தனியா, கறிவேப்பிலை, இஞ்சி, கடுகு, சுண்டல், முளை கட்டிய தானியங்கள், கேரட், மொச்சை, பீட்ரூட், உருளைக்கிழங்கு, சேனை, பச்சை வாழைக்காய், சேப்பங்கிழங்கு, பழங்கள், வாரம், ஒரு முறை,
தர்பூசணி, முலாம்பழம், பப்பாளி, பச்சை திராட்சை, மாதுளம் பழம், எண்ணெய்,
நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், குறிப்பு, வைத்தியர், ஆலோசனை,