ஊட்டச் சத்து நிறைந்த, திட உணவு உட்கொள்ள பல்வேறு உணவு வகைகளைத் தேர்வு செய்தல்.
கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் போதுமான நீரும், உணவும் எடுத்து கொள்ள வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு 4-6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம் ஆகும். இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.
குழந்தைக்கு திட உணவுகளை 4-6 மாதத்தில் இருந்து கொடுக்க துவங்கலாம்.
குழந்தைகளும், விடலைப் பருவத்தினரும் நல்ல உடல் நலனைப் பெறவும் நோய் எதிர்ப்பு சக்திக்கும், போதுமான அளவு ஊட்ட உணவு உட்கொள்ள வேண்டும்.
கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
சமையல் எண்ணெய்கள் மற்றும் நெய்/வெண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகப் பயன்படுத்தவும்.
உடல் பருமன் மற்றும் அதிக எடையைத் தவிர்க்க அதிகமாக உணவு உட்கொள்ளக் கூடாது. உடல் பயிற்சி செய்து உடல் எடையைப் பராமரிக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவை உட்கொள்ளலாம். சுகாதாரமான உணவுப் பழக்க வழக்கங்களையும் சமையல் முறைகளையும் பின்பற்றலாம். அதிகமான அளவு தண்ணீர் குடிக்கலாம். போதுமான அளவு பானங்கள் குடிக்கலாம்.