மெக்ஸிகன் பை தேவையான பொருட்கள்
சிக்கன் – 150 கிராம்
தக்காளி – 1
வெங்காயம் – 1
குடமிளகாய் – 1
சோளம் – 1/2 கப்
பூண்டு – 5 பல்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
துருவிய பனீர் – 1/2 கப்
டாப்பிங் செய்ய
கார்ன் ப்ளார் – 1/2 கப்
சிக்கன் வேக வைத்த நீர் – 1/2 கப்
சீரகப் பொடி – 1 சிட்டிகை
மிளகாய் பொடி – 2 சிட்டிகை
மெக்ஸிகன் பை செய்முறை
சிக்கனை எலும்பில்லாமல் சிறிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு, தக்காளி, வெங்காயம், குடமிளகாயை சிறியதாக நறுக்கவும். சோளத்தை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் சிக்கனைப் போட்டு 5 நிமிடம் வதக்கவும். பனீரைத் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் போட்டு 5 நிமிடம் வதக்கவும். பேக்கிங் டிஷ்ஷில் சிறிதளவு எண்ணெய் தடவி வதக்கிய கலவையை அதில் கொட்டவும். மேலே துருவிய பனீரைப் பரப்பவும். அதே நேரம் சிக்கன் வேக வைத்த நீரில் கார்ன் ப்ளாரைக் கரைத்து, சீரகப் பொடி, மிளகாய் பொடி சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டி ஆகும் வரை கிளறவும். இந்தக் கலவையை பனீர் தூவி உள்ள பேக்கிங் ட்ரேயின் மேல் பரவலாக ஊற்றவும். பின்னர் ப்ரிஹீட்டட் அவனில் 200 டிகிரி சி / 400 டிகிரி தி- ல் 20 முதல் 25 நிமிடம் வரை டாப்பிங் கோல்டன் ப்ரவுன் கலர் ஆகும் வரை வேக வைக்கவும். வெந்தவுடன் அவனிலிருந்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
மொகல் சிக்கன் தேவையான பொருட்கள்
இளம் கோழி – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 3
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
மல்லிப் பொடி – 1 டீஸ்பூன்
தக்காளி – 1
தயிர் – 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவை
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
மொகல் சிக்கன் செய்முறை
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். கோழியைக் கழுவி சுத்தம் செய்து மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி கொள்ளவும். மிளகாய்ப் பொடியில் பாதியையும் மல்லிப் பொடியில் பாதியையும், தேவையான உப்பையும் மஞ்சள் பொடியையும் தயிருடன் சேர்த்துக் கலக்கவும். அதில் கோழித் துண்டுகளை புரட்டி எடுத்து 3 மணி (Marinate) நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மீதியிருக்கும் மிளகாய், மல்லி, மிளகு பொடி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள கோழித்துண்டங்களைச் சேர்த்து வதக்கவும். கடைசியாக தக்காளியை சேர்க்கவும். மீதியிருக்கும் தயிர்க்கலவையையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும். வெந்தவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பட்டர் சிக்கன் தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 2
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 11/2 டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – 1 டீஸ்பூன்
தக்காளி – 4
மேத்தி இலை – சிறிது
வெண்ணெய் – 100 கிராம்
முந்திரிப் பருப்பு – 50 கிராம்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
தயிர் – 3 டீஸ்பூன்
கிரீம் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் சாறு – 1 டேபிள் ஸ்பூன்
பட்டர் சிக்கன் செய்முறை
சிக்கனின் எலும்பை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை வெந்நீரில் போட்டு, தோலை உரித்து விட்டு அரைத்துக் கொள்ளவும். எலுமிச்சம் சாறு, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மிளகாய் பொடி, கரம் மசாலாப் பொடி எல்லாவற்றிலும் சிறிது சிறிது எடுத்துக் கலந்து அதில் சிக்கனை ஊற வைக்கவும். அரைமணி நேரம் ஊறிய பின் அதனை தனியே வேக வைத்துக் கொள்ளவும்.
முந்திரிப் பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பாதி அளவு வெண்ணெயை உருக்கி அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பின் மீதமுள்ள கரம் மசாலா, சீரகம், மிளகாய் பொடிகளைப் போட்டு வதக்கி, அரைத்த தக்காளி, அரைத்த முந்திரி தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இடையில் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும். கிரேவி நன்கு எண்ணெய் திரண்டு வரும் போது வேக வைத்த சிக்கனைப் போட்டு கொதிக்க விடவும். பரிமாறுகையில் கிரீம், மேத்தி இலை சேர்த்து பரிமாறவும்.
காஷ்மீரி சிக்கன் தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
சிவப்பு மிளகாய் – 10
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
பட்டை – 1 இன்ச் துண்டு இஞ்சி
பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
முந்திரி – 20
உலர்ந்த திராட்சை – 20
ரெட் கலர் – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவை
காஷ்மீரி சிக்கன் செய்முறை
சிக்கனை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். சிவப்பு மிளகாயில் விதையை எடுத்து விடவும். சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, ரெட் கலர் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சீரகம், ஏலம், பட்டை, மிளகாய் வற்றல், வெங்காயம் முதலியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். மசாலாவிலிருந்து எண்ணெய் பிரியும் போது பொரித்த சிக்கனைப் போட்டு 1 கப் தண்ணீர் விட்டு குறைவான தீயில் வேக விடவும். மசாலா சிக்கனுடன் ஒட்டி வரும் பதத்தில் முந்திரி, திராட்சை போட்டு சிறிது நேரம் கிளறி வறண்ட பக்குவத்தில் இறக்கவும்.