பிட்னஸ் பிரியரா நீங்க?

Spread the love

உடம்பு குண்டா இருக்கிறவங்களும், உடல் இளைக்கணும்னு கவலை. உடல் ஒல்லியா இருக்கிறவங்களுக்கு, குண்டாகனும் என்கிற கவலை. சொல்லப்போனா அவங்க அவங்களுக்கு ஒவ்வொரு கவலை.
எல்லாத்துக்கும் தீர்வு இருக்கும்போது இதுக்கு இல்லாமலா இருக்கும்.

உடல் பருமனாக டிப்ஸ்

உடல் வாகிற்குத் தேவைப்படும் கலோரிக்குப் பொருத்தமான உணவு வகைகளைச் சாப்பிட்டால் மட்டுமே உடல் எடை கூடும்.

பசிக்குத் தேவையான உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதுதான் முதல் ஸ்டெப்.

சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு வாக்கிங் போய்விட்டு வந்து சாப்பிட்டால் தேவையான அதிக கலோரி வகை உணவுகளைச் சாப்பிட முடியும்.

உருளைக் கிழங்கு வாழைப்பழம், சீஸ், மில்க் ஷேக், உலர்ந்த பழங்கள், தயிர், சிக்கன், முட்டை, வெல்லம், சாதம், இவை வெயிட் போடும் உணவு வகைகள்.

ஓவராக குண்டாகி விடுவோமோ என எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுங்கள்.

தசைகளைப் பெருக்கும் புரோட்டீன் சத்துள்ள பீன்ஸ், பட்டாணி, மீன், பருப்பு வகைகள் இவற்றில் ஒன்றிரண்டாவது உணவில் சேர்க்க வேண்டும்.

ஹார்மோன் கோளாறுகள், வேறு சில மருத்துவப் பிரச்சனைகள இருந்தாலும் வெயிட் ஏறாது.

ஸ்டிரெஸ்ஸைக் குறைத்து, ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர் கொள்ளுங்கள். பாசிடிவ் எனர்ஜியால் உடல் எடை ஏறும்.

சாப்பிட்டால் மட்டும் போதாது. ஏழு மணி நேரத் தூக்கமும் உடல் எடை கூட அவசியம்.

சரியான உணவுப் பழக்க வழக்கங்கள் இருந்தாலும், வெயிட் போட எப்படியும் சில மாதங்கள் ஆகும். அதுவரை உணவுப் பழக்கத்தை உடனே மாற்றி விடக் கூடாது.

உடல் இளைக்க டிப்ஸ்

சாப்பிடத் தொடங்கி 20 நிமிடத்திற்குப் பிறகு தான் போதும் என்ற உணர்வு ஏற்படும். அதனால் வேகமாகச் சாப்பிடாமல் உணவை மெதுவாகச் சாப்பிடப் பழகுங்கள். அளவு குறையும்.

மூன்று வேளை சாப்பாட்டை ஆறு வேளையாகப் பிரித்து குறைந்த அளவில் சாப்பிடலாம்.

கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மாடிப்படிகள் ஏறி, இறங்கத் தவறாதீர்கள்.

15 நிமிட வாக்கிங், 15 நிமிட சைக்கிளிங், உடல் எடையைக் குறைக்க பெஸ்ட் வழிகள்.

ஒவ்வொரு சாப்பாட்டு வேளையின் முன்பு ஒரு கப் சாலட், ஒரு கப் சூப் சாப்பிட்ட பிறகு உணவு சாப்பிட வேண்டும்.

சோயா பால் ஆரோக்கியமானது. அதே சமயத்தில் உடல் எடையும் ஏறாது.

ஒரு நாளைக்கு 30 நிமிடம் வாக்கிங், டைம் கிடைக்காதவர்கள் 10 நிமிடமாக ஒரு நாளைக்கு மூன்று முறை கூட வாக்கிங் போகலாம்.

பசிக்கும் போதெல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு, பதிலாகத் தண்ணீர் குடித்தால் போதும்.

இரவு ஏழு மணிக்குள் இரவுச் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்.

தினசரி உணவில் மூன்று வேளை ஒரு கப் காய்கறி, பழங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.


Spread the love
error: Content is protected !!