கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெற கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள்

Spread the love

பொதுவாக கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கே எல்லோரும் விரும்புவார்கள்.

அந்த வகையில் நல்ல கட்டமைப்புடன் கூடிய உடலை பெற அதிக புரதச்சத்துள்ள முட்டை, மெல்லிய இறைச்சிகள், ஆல்மண்ட், முளைத்த பயறுகள் போன்றவைகளை உட்கொள்ள வேண்டும்.

இவ்வகை ஆரோக்கியமான உணவுகள், உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான புரதத்தை சேர்க்கும். மேலும் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ராலை தவிர்க்கும்.

இதுபோக அரிசி சாதத்திற்கு பதிலாக முழு தானியங்களையே உட்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கார்போஹைட்ரேட்ஸ்களையும் தவிர்க்கலாம்.

முட்டையின் வெள்ளை கரு!

உடலை கட்டுக்கோப்பாக வளர்க்கவும் தசைகளை பராமரிக்கவும் தேவைப்படும் 8 வகையான அமினோ அமிலங்கள் அனைத்தும் ஒவ்வொரு முட்டையிலும் உள்ளது.

இதுபோக முட்டையில், தசை திசுக்கள் ஆறுவதற்கும் அதன் மறு வளர்ச்சிக்கும் தேவைப்படும் வைட்டமின்கள்,அமிலங்கள் மற்றும் இதர ஊட்டச் சத்துக்களும் உள்ளது.

முட்டையின் வெள்ளை கருவில் கொழுப்பே கிடையாது. இதனால் உங்கள் உணவில் கொழுப்பு சேராது. முட்டையின் மஞ்சள் கருவில் தான் அனைத்து கொழுப்புகளும் அடங்கியுள்ளது.

ஓட்ஸ் கஞ்சி

காலை உணவிற்கு ஓட்ஸ் கஞ்சி குடிப்பது உங்கள் பொழுதை இனிதாக ஆரம்பிக்க உகந்ததாக இருக்கும்.

அதிலுள்ள நார்ச் சத்து உங்கள் உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைத்து உட்சேர்க்கைக்குரிய செயல்முறையை அதிகரிக்க உதவும்.

மேலும் இது உங்கள் உடலில் உள்ள க்ளைகோஜென் கிடங்கை நிறைவாக்கும். உடற்பயிற்சி செய்தபின் எடுத்துக் கொள்ள சிறந்த உணவாக இது விளங்குகிறது.

மீன்

உடலுக்கு ஓமேகா&3 போன்ற சில அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் தேவைப்பட தான் செய்யும். இது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

இருப்பினும் ட்ரான்ஸ் வகை கொழுப்புகள் மற்றும் பூரிதக் கொழுப்புகளை தவிர்க்க தான் வேண்டும். ஆனால், மீன்களில் உள்ள அதிமுக்கிய கொழுப்புகளை ஒதுக்கக் கூடாது.

குளிர்ந்த நீரில் வளரும் மீன்களான சால்மன், ட்யூனா, ட்ரௌட் மற்றும் சாலை மீன்களில் அதிக அளவில் புரதமும் ஆரோக்கியமான கொழுப்புகளும் அடங்கியுள்ளது.

ப்ராக்கோலி

மெல்லிய தேகத்தை விரும்புபவர்கள் தங்கள் உணவில் ப்ராக்கோலியை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக அதிலுள்ள வைட்டமின் சி, திசுக்கள் நீடித்து வாழ பாதுகாக்கும். மேலும், கரையும் இயல்புள்ள நார்ச் சத்துக்களை போதுமான அளவில் கொடுக்கும். இது உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் நிரப்பி விடும். இது மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை குறைவுக்கு துணை நிற்கும்.

பீன்ஸ் மற்றும் பட்டாணி வகைகள்

உடல் வளர்ச்சிக்கு சிவப்பு இறைச்சி மற்றும் முட்டை மட்டுமே போதுமானது அல்ல. இதற்காக பீன்ஸ் மற்றும் பட்டாணி வகைகளின் பங்களிப்பை யாரும் ஒதுக்கி விட முடியாது.

அவைகளில் தாவர புரதம் மற்றும் நார்ச் சத்து அதிகமாக அடங்கியுள்ளது. அதிலும் கிட்னி பீன்ஸ் இதற்கு புகழ் பெற்று விளங்குகிறது. ஒரு கப் கிட்னி பீன்ஸ் 14 கிராம் புரதத்தையும் நார்ச் சத்தையும் அளிக்கிறது.


Spread the love