ஃபிஷ் பில்லெட்ஸ்
தேவையான பொருட்கள்
வஞ்சிர மீன் –1/2கிலோ
கடலை மாவு –1கப்
மிளகாய் பொடி –2டீஸ்பூன்
உப்பு -தேவையானஅளவு
முட்டை –2
வெள்ளை மிளகுபொடி-1டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் –2கப்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
மீனை முள் நீக்கி சுத்தம் செய்து சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடலை மாவு, மிளகாய்ப் பொடி, உப்பு முன்றையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி வைக்கவும். இக்கலவையில் மீன் துண்டுகளை போட்டு புரட்டி எடுத்து ஊற வைக்கவும். முட்டையுடன் மிளகு பொடி சேர்த்து அடித்துக் கொள்ளவும். ஊற வைத்துள்ள மீனை எடுத்து முட்டையில் முக்கி எடுத்து பிரெட் க்ரம்ஸ்-ல் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தக்காளி கெட்சப் அல்லது சில்லி சாஸீடன் பரிமாறவும்.
ஃபிஷ் டிக்கா
தேவையான பொருட்கள்
முள் இல்லாத மீன் –500கி
இஞ்சி பூண்டு பேஸ்ட் –1டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி –1டீஸ்பூன்
தயிர் –2டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி –2டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
ஆரஞ்சு கலர் –1சிட்டிகை
வெண்ணெய் –4டீஸ்பூன்
செய்முறை
மீனை நன்கு சுத்தம் செய்து, சதுர துண்டுகளாக வெட்டி தண்ணீர் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும். கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் ஒன்றாகக் கலந்து மீன் துண்டுகளில் பூசி 1 மணி நேரம் ஊற வைக்கவும். 1 மணி நேரம் கழித்து மீனை ஒரு கம்பியில் குத்தி கிரில் அல்லது தீயில் சுட்டு எடுத்து பரிமாறவும்.
ஸ்டீம்டு ஷார்க்
தேவையான பொருட்கள்
ஷார்க் (சுறா மீன்) –1/2கி
மஞ்சள் பொடி –1டீஸ்பூன்
மிளகாய் பொடி –1/2டீஸ்பூன்
பெரிய வெங்காயம்-2
பச்சை மிளகாய் –3
இஞ்சி –1இன்ச்
பூண்டு –10பல்
எலுமிச்சம் சாறு –2டீஸ்பூன்
உப்பு -தேவையானஅளவு
கொத்தமல்லி -சிறிது
எண்ணெய் –4டே.ஸ்பூன்
செய்முறை
பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சுறா மீனைப் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் சுறா துண்டுகளைப் போட்டு ஒரு சத்தம் வரும் வரை வேக விடவும். ஆறியவுடன் சுறா மீனின் தோலை உரித்து விட்டு அதனை புட்டு போல உதிர்த்துக் கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். பின் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைப் போட்டு சிறு தீயில் மீனில் சூடு ஏறும் படி நன்கு கிளறவும். எலுமிச்சம் சாற்றைக் கலந்து கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
ஃபிஷ் ரோல்
தேவையான பொருட்கள்
மீன் –250கி
உருளைக்கிழங்கு –250கி
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி –1டீஸ்பூன்
மல்லிப் பொடி –1டீஸ்பூன்
பெரிய வெங்காயம்-2
உப்பு, மிளகுத்தூள்-தேவையானஅளவு
சீனி –1டீஸ்பூன்
மைதா மாவு –2டீஸ்பூன்
முட்டை –2
ப்ரெட்க்ரம்ஸ் –2கப்
கொத்தமல்லி -சிறிது
செய்முறை
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, சீனி சேர்த்து பூரி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும். மீனை அவித்து முள், எலும்பு ஆகியவற்றை நீக்கி சதைப் பாகத்தை மட்டும் எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் போட்டு வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். மைதா மாவை போட்டு 2 நிமிடம் கிளறி, உதிர்த்து வைத்துள்ள மீனையும் போட்டு கிளறி, கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மாவில் ஒரு சிறிய உருண்டை எடுத்து பூரி போல் தேய்த்து அதற்கு நடுவில் மீன் கலவையை 2 டேபிள் ஸ்பூன் அளவு வைத்து பூரியை பாய்போல் சுருட்டி மேல்புறமும், கீழ்புறமும் உருளைக்கிழங்கு மாவால் மூடவும். மீன் ரோலை நன்கு அடித்து வைத்துள்ள முட்டையில் முக்கி எடுத்து ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸ் அல்லது சில்லி சாஸீடன் பரிமாறவும்.
ஃபிஷ் பக்கோரா
தேவையான பொருட்கள்
மீன் –250கி
வினிகர் –2டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்
மிளகாய் பொடி –2டீஸ்பூன்
கடலை மாவு –1கப்
உப்பு -தேவையானஅளவு
சோடா உப்பு –1/4டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
மீனை சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வினிகர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்பொடி 1 ஸ்பூன், உப்பு எல்லாவற்றையும் கலந்து மீன் துண்டுகளின் மீது பூசி 15 நிமிடம் ஊற விடவும். கடலை மாவு மிளகாய் பொடி 1 ஸ்பூன், சோடா உப்பு, உப்பு சிறிது தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு போல கலந்து கொள்ளவும். இந்த மாவில் மீன் துண்டுகளை முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ப்ரான்ஸ் இன் சில்லி சாஸ்
தேவையான பொருட்கள்
பெரிய சைஸ் இறால் –6
வெங்காயம் –1
இஞ்சி –1இன்ச்
பூண்டு –10பல்
பச்சைமிளகாய் –3
சோயா சாஸ் –1/2டே.ஸ்பூன்
வினிகர் –11/2டே.ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
சில்லி சாஸ் –2டே.ஸ்பூன்
அஜினமோட்டோ –1சிட்டிகை
சீனி –1டீஸ்பூன்
உப்பு -தேவையானஅளவு
செய்முறை
வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கவும். இறாலை ஒடு நீக்கி சுத்தம் செய்த பின் முதுகுப்புறம் கீறி கருப்பு நிறத்தில் தெரிகின்ற நரம்பை எடுத்து விட வேண்டும். பின்னர் இறாலை மூன்று பாகமாக வெட்டவும். சோயா சாஸ், வினிகர் இரண்டையும் கலந்து வெட்டி வைத்துள்ள இறாலில் தடவி 20 நிமிடம் ஊற விடவும். ஊறிய இறாலை ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் போட்டு வதக்கி, சில்லி சாஸ், உப்பு, அஜினமோட்டோ, சீனி, மீதமுள்ள வினிகர் எல்லாவற்றையும் போட்டுக் கலந்து மீதமான தீயில் 2 நிமிடம் கிளறவும். பின் பொரித்து வைத்துள்ள இறாலை போட்டு இறக்கி ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.
உணவு நலம் ஜுன் 2011
மீன் வகைகள், ஃபிஷ் பில்லெட்ஸ், செய்முறை, வஞ்சிர மீன், கடலை மாவு, மிளகாய் பொடி, உப்பு, முட்டை, வெள்ளை மிளகுபொடி, ப்ரெட் க்ரம்ஸ், எண்ணெய், ஃபிஷ் டிக்கா, செய்முறை, முள் இல்லாத மீன், இஞ்சி, பூண்டு, கரம் மசாலாப் பொடி, மிளகாய்ப்பொடி, ஆரஞ்சு கலர், வெண்ணெய், ஸ்டீம்டு ஷார்க், செய்முறை, ஷார்க், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, எலுமிச்சம் சாறு, கொத்தமல்லி, எண்ணெய், ஃபிஷ் ரோல், செய்முறை, மீன், உருளைக்கிழங்கு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்ப்பொடி, மல்லிப் பொடி, பெரிய வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், சீனி, மைதா மாவு, முட்டை, ப்ரெட்க்ரம்ஸ், கொத்தமல்லி, ஃபிஷ் பக்கோரா, செய்முறை,
மீன், வினிகர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் பொடி, கடலை மாவு, உப்பு, சோடா உப்பு, எண்ணெய், ப்ரான்ஸ் இன் சில்லி சாஸ், செய்முறை, இறால், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், சோயா சாஸ், வினிகர், எண்ணெய், சில்லி சாஸ், அஜினமோட்டோ, சீனி,