நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்குங்க. அதிலும் அதிமான பெண்கள் இதற்கு என்னடா வழி என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஏன்? நம் வீட்டிலேயே அம்மா, பாட்டி என்று அனைவருக்கும் இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பு உள்ளது..கருவாடு, மீன் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் இவையெல்லாம் சாப்பிட்டால், அரிப்பும், தடிப்பும் ஏற்படுகிறது, அதற்கு என்ன பண்ணலாம் என்று நினைப்பவர்களுக்கு தான் இந்த …
கடலில் உப்புநீர் இருப்பதனால், அதில் வாழும் உயிரினங்களை சாப்பிட்டால் உடல் அரிப்பு ஏற்படும். இதற்கு என்ன காரணம் என்றால்? நமது உடலில் மிக நுண்ணிய குழாய்கள், உணவை எடுத்து செல்லும் போது, நீர்க்கசிவு ஏற்படுகிறது. அப்படி கடல் வாழ் பிராணிகளை சாப்பிடும்போது, உப்பு நீர் கசிவு, மாமிசம் வழியாக நம் உடலில் புகுந்து, உப்பு நீர் கசிவை உண்டாக்குகிறது. இந்த கசிவு வெளியேறாமல் தங்குவதனால், உணவு குழலின் உட்புறம் பிசுபிசுப்போட இருந்து, மாமிச உணவின் சக்தி, இந்த குழாய் வழியாக செல்லும்போது, அந்த சத்து உறிஞ்சப்பட்டு தோளில், அரிப்பையும், தடிப்பையும் ஏற்படுத்துகிறது.
இது பலபேருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தலாம் என்றாலும், சில பேருக்கு கருவாடு, மீன் போன்ற கடல் வகை உணவை சாப்பிடும்போது, அரிப்பு ஏற்படுவது வழக்கம் தான். இதற்கு ஒரே வழி, பிரச்சனை உள்ளவர்கள் கருவாடு, மீன் சாப்பிடுவதை தவிர்ப்பது தான். கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் நம்ம உடல் நலத்தை கவனித்து ஆக வேண்டும்..
இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டியது, காலையில் கோதுமை உப்புமா, மதியம் உணவில் தயிரில்லாமல் மோர் மட்டும்சேர்த்து சாப்பிடலாம். இரவில், சுக்கா ரொட்டி, கூட்டு சாப்பிடலாம். அதோட, அரிப்பை குணமாக்குவதற்கான மருந்து ஆலோசனைகளை , மருத்துவரோடு எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் சூடானதண்ணீரில், காலை, இரவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால்குடித்து வந்தால் நல்ல பலன் தரும்.