சீமை அத்திப்பழம் கால் கிலோ அளவு வாங்கி வந்து, நன்றாக நீர் விட்டுக் கழுவிச் சுத்தம் செய்த பின்பு, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு அதாவது பழம் குழம்பாக கரையும் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைந்து கரைக்கவும். கரைத்த பின்பு பிழிந்த சாற்றை, மாவு சலிக்கும் சல்லடையின் உதவிகொண்டு வடிகட்டி, வாயகன்ற பாத்திரத்தில் இட்டு, அந்தச்சாறு இருக்கும் அளவிற்கு சமமாக சர்க்கரை சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ச்ச வேண்டும்.
சாறு கொதித்து பாகு பதம் வரும் சமயம் இறக்கி ஆறிய பின்பு ஒரு வாயகன்ற கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் விட்டு வைத்துக்கொண்டு, தினசரி காலை,மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சர்பத்தை சாப்பிட்டு வர வேண்டும். இதன்மூலம் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட அத்திப்பழச் சர்பத்தினை ஒரு வாரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. அதற்கு மேல் பயன்படுத்தினால் கெட்டுப் போய்விடும் என்பதால் தேவைக்கு ஏற்ப புதிதாக சர்பத் தயாரித்துப் பயன்படுத்துவது நல்லது. பித்தக் கோளாறுகளைக் குணப்படுத்தும். நாற்பது நாட்களுக்குத் தொடர்ச்சியாக பயன்படுத்த குணம் பெறலாம்.
https://www.youtube.com/watch?v=5Jpcvsct8Vc&t=39s