அத்திப்பழத்தின் மகத்துவம்!

Spread the love

அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

ஞாபக மறதி வராது இதயத்திற்கு வலிமை கிடைக்கிறது. அத்திப்பழம் பித்த சூட்டைத் தணிக்கிறது.

குழந்தைகளுக்கு தேனில் ஊற வைத்த பழத்தை கொடுக்கலாம் அல்லது இரவில் சிறிது தண்ணீரில் ஊற வைத்து காலையில் ஊறிய பழத்தையும் அந்த தண்ணீரையும் தரலாம்.

அத்திப்பழம் விரைவில் உணவை ஜீரணிக்கச் செய்து சுறுசுறுப்பைத் தருகிறது. கடுமையான பித்தப்பை வியர்வை மூலம் வெளியாக்கி ஈரல்  நுரையீரலில் உள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.

தினசரி இரண்டு பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.மேலும்,.உடலும் வளர்ச்சி அடையும். அத்திப்பழத்தில் புரோட்டீன், சர்க்கரை, கால்சியம் ,பாஸ்பரஸ், மற்றும் இரும்புச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளது.


Spread the love