நார்சத்து நமது உடலுக்கு உயிர்சத்து

Spread the love

நமது உணவு முறை தவறுகளாலேயே பல நோய்கள் தோன்றுகின்றன. ஆகவே நமது உணவுகள் பற்றியும், அதன் தன்மைகளை பற்றியும் தெரிந்து கொண்டால் தான். அதனை நாம் பயன்படுத்த முயல்வோம். இல்லையேல் தேவையானவற்றை நீக்கியும், தேவையற்றவற்றை உபயோகித்தும் நோய்களுக்கு ஆளாகி விடுவோம். உணவுகளில் மிகவும் முக்கியமானது நார்ச்சத்து. இது பல நோய்கள் வராமல் தடுத்து காப்பாற்றவல்லது. இந்த நார்ச்சத்து மிகவும் அதிகமாக பழங்கள், காய்கள், கீரைகள், தானியங்கள் முதலியவற்றில் தான் அதிகமாக உள்ளது. இதனைப்பற்றி நாம் தெரிந்துக் கொண்டு, பயன்படுத்தி நோய்கள் நீங்கி நலமுடன் வாழ்வோம்.

பழங்களிலும், காய்கறிகளிலும், தானியங்களிலும், கீரைகளிலும் மிக எளிதில் கிடைக்கும் உணவுப் பொருளாக இருப்பது நார்ச்சத்து ஆகும். பழங்கள், காய்களில் அதன் மேல் தோல்களிலும், தானியங்களில் உமிகளிலும் உள்ளது. தண்ணீர் உட்பட மிக எளிதில் கிடைக்கும். எந்த, பொருட்களையும் நாம் துதிப்பதுமில்லை, மதிப்பதுமில்லை உமி என்பது செல்லுலோஸ் என்னும் நார்சத்து ஆகும். தவிடு என்பது தையமின் ஆகும். தவிட்டில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளது என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் செல்லுலோஸ் பற்றி நாம் கண்டு கொள்வதில்லை. தற்போது தான் செல்லுலோஸ் என்னும் நார்ச்சத்து, நமது உடலுக்கும், குடலுக்கும் ஒர் இன்றியமையாத வேர் சத்து என்று புரிந்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் இன்னும் இதனை யாரும் பயன்படுத்துவதில்லை.

பல சாலிக்கு பாலிசாக்ரைடுகள் கூட்டு சர்க்கரை உடலுக்கு சக்தி தரும் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமானவை. சக்தி மாற்றத்திற்கு நமது உடல், கார்போஹைட்ரேட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறது. இது இல்லாத போதே புரதமும், கொழுப்பும் எரிக்கப்படுகின்றன. இது நமது உடலில் கீழ்க்கண்டவாறு மாற்றப்படுகின்றன.

பாலி சாக்ரைடுகள் ஸ்டார்ச்சு, டெக்ஸ்டிரின், கிளைகோஜன், செல்லுலோஸ்

டைசாக்ரைடுகள் இரட்டை சர்க்கரை சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ்மோனோ சாக்ரைடுகள் ஒற்றை சர்க்கரை குளூக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ் ஆகவும் மாற்றப்படுகின்றன.

நாம் பாலிசாக்கரைட்டுகளை உண்டு, அவைகள் நமது சீரண நீர்களால் டைசாக்கரைட்டுகளாகவும், மோனோ சாக்கரைட்டுகளாகவும், மாற்றப்படுவதே சரியான வழியாகும். அவ்வாறில்லாமல், மோனோ சாக்கரைட்டுகளையே நாம் உண்போமானால் செரிமான பாதையில் தடைகள் ஏற்படும். ஆரோக்கியமும் கெடும்.

நார்சத்து என்றால் என்ன செல்லுலோஸ் பாலிசாக்கரைடுகளில் சேர்ந்தே உள்ளது. இது தாவரங்களில் மட்டுமே காணப்படும். நார்ப்பொருளாகும். தாவரங்களில் உள்ள உயிரணுக்களின் சுற்றுச்சுவரில் இந்த நார்ச்சத்து இருப்பதால் தான், தாவரங்களில் மட்டும் இது காணப்படுகிறது. விலங்குகளின் செல்களில் சுற்றுச்சுவர் கிடையாது. அதனால் இது, சீரண நீர்களால், சீரணிக்கப்படுவதில்லை. சீரணத்திற்குப் பிறகும் மாற்றம் அடையாது அப்படியே உள்ளது.

நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் முழு தானியங்கள், பயிறுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் ஏராளமான செல்லுலோஸ் அடங்கி உள்ளது. தானியங்களையும் பயிறுகளையும் முதல் நாள் ஊற வைத்து, இரண்டாம் நாள் முளை கட்டுகின்ற போது நார்ச்சத்து பெருக்கமடைகிறது. முருங்கக் கீரைகளிலும், அகத்திக்கீரையிலும் இது நிரம்ப உண்டு. காய்கறிகளில் குறிப்பாக அவரை இனங்களில் இதற்கு குறைவில்லை. மாமிச உணவுகளிலும், தோல் நீக்கப்பட்ட தானியங்கள், பருப்புகள் மற்றும் கிழங்குகளில் இது இல்லை.

மலச்சிக்கலுக்கு மாமருந்து

நார்ச்சத்து அடங்கிய உணவு, நமது குடலுக்கு வலிமையை சேர்க்கிறது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு மருந்தாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் மலச்சிக்கலை வருமுன் காக்க இந்த நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. இந்த செல்லுலோஸ் எனப்படும். நார்ச்சத்து உணவுடன் செல்லும் நீரை ஈர்த்து கொள்ளும் வேலையை செய்கிறது. இதனால் எப்பொழுதும் மலம் இளக்கமாகவே இருந்து, குடலில் எங்கும் தங்காமல் அவ்வப்போது வெளியேறிவிடுகிறது. இந்த நார்ச்சத்தை உண்ண நாம் தவறிவிட்டால், மலம் கெட்டிபட்டு காலைகடனை தினமும் செய்யமுடியாமல் இரண்டு (அ) மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் மலம் கழிக்க முடியும். மலம் கெட்டிபடுவாதல் சுலபமாக மலத்தை வெளியேற்ற முடியாமல், தேவைக்கும் அதிகமான சக்தியை கொடுத்து முக்கி, முனகி மலத்தை வெளியேற்றுவதால் மலவாயில் உள்ள இரத்த குழாய்கள் அதிக இரத்த ஒட்டத்தை கொடுக்க நேரிடுகிறது. இதனால் நாளடைவில் அந்த இரத்த குழாய்களுக்கு இரத்த தேக்கம் ஏற்பட்டு, அந்த இரத்த குழாய்கள் வீக்கம் அடைந்து நாளடைவில் வெடித்து விடுகின்றன. இதை தான் மூலநோய் என்று சொல்கிறோம். இதனால் சரிவர உட்கார முடியாமை, அதிக இரத்தபோக்கு, அடிக்கடி மலம் கழிக்க வேண்டும். போன்ற உணர்வு, இரத்த சோகை, உடல் மற்றும் மனச்சோர்வு, பசியின்மை, போன்றவை ஏற்படுகின்றன. இந்த மூலநோய் முற்றிவிடாத இரத்த போக்கால் குடல்களில் சோர்வு ஏற்பட்டு, குடல்கள் வறண்டு குடல்புற்று நோயாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. ஒரு சாதாரண விஷயமான இயற்கையில் கிடைக்கும் பழங்கள், தானியங்கள் மற்றும் கீரைகளை குறிப்பாக நார்சத்து உள்ள தோல்பகுதியை நீக்காமல் உண்ண தவறுவதால் ஏற்படும் விளைவுகள் பலப்பல. எனவே நார்சத்தின் பயன்களை அறிந்து அவற்றை உணவில் சேர்த்து பலன் பெறுவோம். குறிப்பாக தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டாலும் கூட 50% மலச்சிக்கலை தவிர்க்கலாம். பொதுவாக நாம் அனைவரும் வீட்டில் செய்யும் தவறுகள் பலப்பல. அவை முதலில் அரிசி பொதுவாக தவிடு நீக்கிய அரிசியை தான் நாம் வாங்குகிறோம். தவிடு நீக்கிய அரிசியின் மேல் உமி என்னும் நார்ச்சத்து படர்ந்து காணப்படும். இது மிக மிக முக்கியமானது. அரிசியை கழுவுவதின் மூலம் 50% உமியை நாம் இழந்து விடுகின்றோம். அரிசியை ஊற வைத்து பின்பு கழுவி சமைப்பதனின் மூலம் 80% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். சமைத்த சாதத்தை வடிப்பதின் மூலம் 100% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். மீதம் நாம் உண்பது ஒன்றுமே இல்லாத சாதம். அதை சாப்பிடுவதின் மூலம் ஒரு பயனுமில்லை. இதற்கும் மேலாக ஒரு படி மேலே போய், ஒரு சிலர் தவிடு நீக்கிய அரிசியை பாலீஷ் போடுவதின் மூலம் உமி என்கிற அந்த நார்சத்தை 100 முதலிலேயே இழந்து விடுகின்றனர். பிறகு சமைத்து சாப்பிடுவதால் சக்தி, நேரம் போன்றவை வீணாவதை தவிர வேறு ஒரு பலனும் நம்மை வந்தடைவதில்லை. எனவே அரிசியை பாலீஷ் போடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். மேலும் அரிசியை ஒரு முறை கழுவிவிட்டு, இரண்டாவது முறை ஊறவைக்கும் தண்ணீரோடு அரிசியை வேக வைத்து, கஞ்சி வடிக்காமல் சாதம் செய்து சாப்பிட்டால் அரிசியிலுள்ள 80 நார்ச்சத்தை நாம் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை. மேற்கூரிய தவறுகளை திருத்தி கடைபிடித்தால் வேண்டிய நார்சத்தை பெற்று நலமோடிருக்கலாம்.


Spread the love