புளிச்சக் கீரை சாதம்

Spread the love

தேவையானவை:

பொடியாக நறுக்கிய புளிச்சக் கீரை – அரை கப்,

கீறிய பச்சைமிளகாய் – 4,

உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்,

வறுத்துப் பொடித்த வெந்தயம் – கால் டீஸ்பூன்,

 மஞ்சள் தூள்,

உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:

நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 2, கடுகு,

சீரகம் – சிறிது,

கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

சாதத்தில் உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து ஆறவிடவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களை போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, சாதத்தின் மீது போடவும். மீதி எண்ணெயில் புளிச்சக் கீரையை நன்கு வதக்கி, சாதத்துடன் சேர்த்து வெந்தயப் பொடியைத் தூவி நன்கு கிளறிவிடவும்.

  • குறிப்பு: கீரை வகைகள் செய்யும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கத் தேவை இல்லை.

Spread the love