வெந்தயம்

Spread the love

Trigonella Foenum

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் வெந்தயம் பயிரிடப்பட்டிருக்கிறது. தான் வளரும் பூமிக்கு திருப்பி நைட்ரஜன் உரத்தை காத்து வைக்கும் நன்றியுடைய தாவரம். விதைத்த 4 மாதங்களில் பயன் தரும். செடி இளம் பச்சை நிறத்தில் ஒன்று அல்லது 2 அடி வளரும். வெந்தய உற்பத்தியில் இந்தியா, ஆப்ரிக்கா முன்னிடத்தில் உள்ளன. இதன் கீரையும், விதைகளும், உணவிலும், மருத்துவத்திலும் பல பயன்களை அளிக்கின்றன.

முக்கிய பயன்

வெந்தயக் கீரையும், வெந்தயமும் நீரிழிவு வியாதிக்கு மருந்தாகும்.

பயன்கள் 

வயிற்றுக் கோளாறுகளுக்கு வெந்தயம் நல்ல மருந்து. கல்லீரலை சுறுசுறுப்பாக்கும். பித்தத்தை முறிக்கும். இலைகள் இரத்த விருத்தி செய்து சோகையை குறைக்கும். நார்ச்சத்து மிகுந்தது.

சிறப்பு அம்சம்

நார்ச்சத்து நிறைந்தது. இலையை விட வெந்தயம் (விதைகள்) மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. கனடாவின் உணவு, சத்துணவு இலாகா, எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகளில், வெந்தயம் பொடி 21 நாட்கள் கொடுக்கப்பட்ட எலிகளில், சர்க்கரை அளவு குறைந்திருந்தது. இதன் படி வெந்தயம் டைப் 1 – நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனளிக்கும் என்று தெரிய வந்துள்ளது. கல்லீரலையும், சிறுநீரகத்தையும், வெந்தயப் பொடி சீராக இயங்க வைக்கிறது. நிறைந்த நார்ச்சத்துள்ள வெந்தயத்தில் ‘டிரிகோனலின்’ என்ற அமிலத்தை எதிர்க்கும் “லவணசாரம்” என்ற பொருள் உள்ளது. இது ரத்தச் சர்க்கரையை குறைக்கும். வெந்தயம் இன்சுலீனை தராது ஆனால் குளூகோஸின் மற்றும் சோமோடோஸ்டடின் அடர்த்தி அதிகமாவதை குறைக்கும்.

பயன்படுத்தும் முறை

இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் சாப்பிடலாம். வெந்தயப் பொடியை மோரில் சேர்த்து உணவுக்கு 15 நிமிடம் முன்பு குடிக்கலாம். இதன் நார்ச்சத்து உடலுக்கு நல்லது. இல்லை 10 – 20 கிராம் வெந்தயத்தை உணவுக்கு 5 – 10 நிமிடங்கள் முன்பு அல்லது உணவுடன் சாப்பிட்டு வர இரத்த சர்க்கரை அளவு குறையும். இதன் இலைகளின் இரண்டை எடுத்து தினமும் காலையில் மென்று உண்ணலாம். அல்லது 2 மேசைக் கரண்டி புதிய கொழுந்தான வெந்தய இலைகளை காலையில் தினமும், 4 – 5 மாதங்களுக்கு உட்கொண்டால், முதல் கட்ட நீரிழிவு வியாதியை நிறுத்தும். டயாபடிஸினால் ஏற்படும் அசதி, களைப்பு, சோம்பல் இவற்றுக்கு இளம் வெந்தய கீரையை சமைத்து உண்பது நல்லது. டயாபடிஸால் உண்டாகும் பெண்களின் வெள்ளைபடுதல் நோய்க்கு, மஞ்சள் பொடி கலந்த வெந்தயத்தின் கஷாயத்தால் கழுவினால் குணமாகும். டயாபடிஸினால் வரும் ஆண்மைக்குறைவுக்கு – வறுத்து பொடித்த வெந்தய பொடி – 2 டீஸ்பூன், தனியா பொடி – 1 டீஸ்பூன், அரை ஸ்பூன் சீரகம், சேர்த்து உட்கொள்ளுதல் பயனளிக்கும். டயாபடிஸ் தொற்று நோய்களுக்கு – வெந்தயத்தையும், வெந்தய இலைலையும் சேர்த்து உண்ண – உடலில் நோய் தடுப்பு சக்தி விருத்தி ஆகும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love