வெந்தயம் முடி வேர்க்கால்களை கடினமாக்கி, முடி உதிர்வை தடுக்க கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. அதனால் முடி உதிர்வு பிரட்சனை உள்ளவர்கள் ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு கப் தேங்காய் எண்ணெய் இரண்டையும் எடுத்து கொள்ளவும். இதை ஒன்றாக கலந்து ஒரு வாரத்திற்கு குளிர்ந்த இடத்தில் அடைத்து வைத்து நன்கு கலக்கி, அந்த எண்ணெயை கொண்டு தலைக்கு மசாஜ் செய்து வர, முடி உதிர்வு தடுக்கப்படுகின்றது.
தலைமுடிக்கும் நல்ல அடர்த்தி கிடைக்கும். இதில் இருக்கும் புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் ஆசிட் தலைமுடிக்கு ஊட்டமளித்து வேர்கால்களை உறுதியாக்கும். கூந்தல் மினுமினுப்பாக, வெந்தய மாஸ்க் நல்ல பலனை தருகின்றது. அதற்கு தேவை ஒரு கப் தண்ணீர், 2 டீஸ்பூன் வெந்தயம். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வெந்தயத்தை போட்டு இறக்கி, அதை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை பேஸ்ட் போல அரைத்து தலைமுடி, வேர்கால், இவையனைத்தும் நன்கு தேய்த்து, 3௦ நிமிடத்திற்கு காய விடவும்.
பின் மிருதுவான சாம்பினால் அலசவும். வெந்தயத்தில் வர கூடிய வழுவழுப்பான Substance தலைமுடிக்கு மினுமினுப்பை கொடுக்கின்றது. அடுத்து பொடுகு ஒரு பொதுவான பிரட்சனை ஆனால் சிறிது மோசமானதுமாகும். இதை நீக்கும் ஆற்றலும் வெந்தயத்தில் உள்ளது. இந்த வெந்தய mask இல்லையென்றால் வெந்தயத்தை எப்படி பயன்படுத்தினாலும் அது பொடுகையும், பூஞ்சை தொற்றையும் போக்கும்.