பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு மத்திய அரசு புதிய சட்ட திருத்த மசோதாவை அறிவித்துள்ளது… அதாவது 12 வயதிற்கு உட்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை கொண்டு வரப்பட்டுள்ளது….
இந்தியாவில் child abuse-ன் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் சமீப காலமாக, சிறு குழந்தைகள் கூட இதற்கு ஆளாகிவிடுகிறார்கள்.. ஆனால் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்ச தண்டனை மட்டுமே கொடுப்பதனால், பாதிக்கப்பட்டவர்களில் இருந்து, நிறைய இயக்கங்கள் இதற்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில், இன்றைக்கு நிறைவேறியுள்ளது.
இதை பற்றி கூறும்போது, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும்குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக வாழ்நாள் சிறை அல்லது தூக்கு தண்டனைவிதிக்கலாம். இந்த மசோதாவில் சிறுமிகள்பலாத்காரம் தொடர்பாக வழக்குகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து, நீதிமன்றத்தால், தண்டனை அறிவிக்கப்பட வேண்டும் என்றும், கூட்டுப்பலாத்காரம் செய்ததாக எழும் குற்றச்சாட்டின் கீழ்எவருக்கும் முன்ஜாமீன் வழங்கப்படாது. சரியான நேரத்தில் இந்த மசோதாகொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால்இந்தக் குற்றங்களை இனிமேல் எப்படிக் குறைக்கப்போகின்றோம் என்பதைப் பொருத்துஇருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேதம். காம்