விரதம் பற்றிய விவரங்கள்

Spread the love

விரதம் அனுஷ்டிப்பது என்பது சமய சம்மந்தமான காரணங்களால் பொதுவாகஅநேக சமூகத்தினராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. பசியைக் கட்டுப்படுத்த விரதம் பெரிதும் உதவுகிறது. ஆனால் சிலரால் இந்த பசியின் கொடுமையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால்அவர்கள் தவறாமல் நாள் முழுவதும் குறித்த சமயத்தில் சாப்பிட்டுக் கொண்டு வருகிறார்கள்.

விரதம் அனுஷ்டிக்கும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய சில டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக என்னவென்றால், நாம் இப்பொழுது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அந்த எண்ணத்தை சிறிது தள்ளிப்போட வேண்டும். அவ்வளவுதான், நாம், சிரமமாக, ஒழுங்காக சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் சாப்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று சொன்னால், அது ஒரு தண்டனை மாதிரி தோன்றும். மற்றும் இன்னும் அந்த சாப்பாட்டை சாப்பிட பேர் அவாவும், அதிக ஆசையும் நம்மிடம் இருக்கும். உதாரணமாக, விரதம் இருக்கும்பொழுது ஒரு கேக் சாப்பிடச் சொன்னால், அது வேண்டாம் என்று அந்த சமயம் சொன்னால் கூட, விரதம் முடிந்த பிறகு அந்த கேக்கை நாம் சாப்பிடலாம் என்பது நமது மனதில் இருந்து கொண்டுதான் இருக்கும்.

சாப்பாட்டைக் கட்டுப்படுத்துவது என்பது நாம் பசியை அனுபவித்தலிலும், பின்பு சாப்பிடும்பொழுது நாம் எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறோம் என்பதிலிருந்தும் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

மனதை திசை திருப்புதல்.

பசித்திடும்பொழுது, நம் மனதை திசைத் திருப்ப வேண்டும். உதாரணமாக, ஒரு டம்ளர் தண்ணீரோ அல்லது ஹெர்பல் டீ சாப்பிட்டு நமக்கு பசிக்கும் தன்மையை திசை மாற்றி விடலாம். அல்லது உடற்பயிற்சி செய்யலாம். டி.வி. பார்க்கலாம், என்று பலவிதமாக நம்முடைய பசியை அடக்க, வேறு எண்ணங்களை நம்மில் கொண்டு வந்தால் பசிக் கொடுமையைக் கட்டுப்படுத்தலாம்.

பாராமுகமாக இருத்தல்.

பசிக் கொடுமையை நாம் முதலில் அது வரும்பொழுதே பாராமுகமாக, புறக்கணித்து விட்டால், நமக்கு பசி தெரியாத அளவுக்கு ஆக்கிவிடலாம்.

சமையல் கட்டிலிருந்து ஒரு விடுதலை.

விரதம் இருக்கும்பொழுது, நம்முடைய தினசரி வேலைக்கு ஒரு ஓய்வு என்று கூறலாம். சமையல் கட்டிலிருந்து ஒரு விடுதலை என்று கூட கூறலாம்.

வரம்பிலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திரம்.

சொல்லப்போனால், விரத நாள் என்பது உணவைப் பற்றி கவலைப்படாமல், ஒரு வரம்பு (Restriction) நிலையிலிருந்து சுதந்திரமாக (liberation) என்று நாம் உணர முடிகிறது.

அதிகப்படியாக உணவு சாப்பிடுதல்

உணவு சாப்பிட வேண்டும் என்று தோன்றும்பொழுது சில உணவுகள் எப்படி நம் உடம்பை ஊதிப்போக அல்லது உப்பி போக செய்கிறது. அல்லது அளவுக்குமீறி அதிகமாக சாப்பிட்டால் ( over indulgence) எவ்வளவு அது நமக்கு கெடுதல் செய்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வலிமை, பலம், உள்ளது விரதம்.

நம்முடைய மூளை, மூட், மனப்பாங்கு (attitude) எல்லாவற்றிலும் மிக சக்தியான விளைவை கொடுக்கக் கூடியது விரதம். பசியின் கொடுமையை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வை விரதம் மூலம் பெற்றால், அதுவே மிகப் பெரிய விளைவு. அது நாம் பெருமையோடு இருக்கச் செய்கிறது. ஒரு முன்னேற்றச் சக்தியையும் நம்மிடம் கொடுக்கிறது.

குணப்படுத்தும், சுத்தம் செய்யும் விரதம்.

விரதம் நம்முடைய உடம்பை குணப்படுத்தவும் சுத்தப்படுத்தவும், உதவும் மிகப் பெரிய சக்தி என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். காலம் செல்ல செல்ல, நமக்கு ‘விரதம்’ இருப்பது மிகவும் சுலபமாக ஆகிவிடும்.


Spread the love