உண்ணாமலிருத்தல் மிகவும் பழமையான, செலவில்லாத, மிகவும் பயன்தரக்கூடிய இயற்கை வைத்தியமாகும். நம் இந்துமதம் இதை விரதம் என்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே உண்ணாமலிருத்தல் நடைமுறையில் இருந்திருக்கிறது. அசிலிபியாடஸ், ஹிப்போகிரிடஸ், கேலன், பார்சிலஸ் போன்ற மருத்துவர்கள் இதை மிகவும் உயர்வாக வைத்து கடைப்பிடித்துள்ளனர்.
மிதமிஞ்சி சாப்பிட்டால் உடம்பில் நச்சுப் பொருள்கள், கழிவுகள் சேருகின்றன. உடம்பை வருத்தி வேலை செய்யாமலிருந்தால் இந்த அதிக அளவு உணவு செரிக்கப்படாமல் ஜீரண உறுப்புக்களில் சேர்ந்து தங்குகின்றன. இதனால் கழிவுகள், நச்சுகள் வெளியேறும் பாதைகள் தடைபட்டு சரிவர இயங்க முடியாமல் போகின்றன. இதனால் ஜீரணமாவது, இந்த உறுப்புக்கள் நன்கு வேலை செய்வது மிகவும் தாமதமாகின்றது. இதன் விளைவு உடம்பு மிகவும் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறது.
ஏதாவது நோய் நம்மைத் தாக்கினால் இந்தக் கழிவுகளை வெளியேற்றப்படுகின்றன. இதைப் போக்க நாம் அளவோடு உண்ண வேண்டும் அல்லது உண்ணா நோன்பு இருக்க வேண்டும். இதனால் ஜீரண உறுப்புகள், சிறுநீரகங்கள், இரப்பை, நுரையீரல் எவ்வித தடையின்றி வேலை செய்து கழிவுகளை வெளியேற்றும் ரத்தம் சுத்தமாகும். திசுக்களும் பொலிவு பெறும்.
கால அளவு
எவ்வளவு நேரம், எவ்வளவு நாட்கள் சாப்பிடாமல் இருக்கலாம். ஒருவரின் வயது, நோயின் தன்மை எற்கனவே சாப்பிட்ட மருந்துகளைப் பொருத்து இது மாறுபடும். மருத்துவர் ஆலோசனைப்படி உண்ணா நோன்பு இருக்க வேண்டும். தேவையின் அதிக காலம், நாட்களென்றால் அபாய விளைவுகள் ஏற்படும். தேவையற்ற பொருட்கள் வெளியேறி, உடலும் நன்றாக செயல்படும். உணவு உட்கொள்ள ஆரம்பித்ததும் வாழும் முறை சீராக இருக்க வேண்டும், உணவும் சரியான விகிதத்திலிருக்க வேண்டும்.
உண்ணா நோன்பு வயிற்றில் குடலில், உள்ள கோளாறுகளை சரிப்படுத்தும் சிறுநீரகங்கள், ஈரல் மிகவும் மோசமாக இருப்பின், நன்கு பழைய நிலைக்குத் திரும்பும், எக்சிமாவும் குணமடையும். சில நரம்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
உண்ணா நோன்பை சர்க்கரை வியாதி உள்ளவர்கள், காசநோய் முற்றியவர்கள், நியூரோஸ் தனியாக்காரர்கள் (Neurasthenia) மேற்கொள்ளக் கூடாது.
பொதுவாக, உண்ணா நோன்பு மேற்கொண்டவர்கள் நன்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
முறைகள்
உண்ணா நோன்பு இருக்கும்பொழுது பழரசம் குடிக்கலாம். இது தண்ணீர் அருந்துவதைவிட சிறந்தது. கழிவுகள் வெளியேற தயாராகும்பொழுது ஆல்கலைன் கலந்த பழரசம் உகந்தது. யூரிக் ஆசிட், மற்றும் பல Inorganic ஆசிட்கள் விரைவில் வெளியேற உதவும். பழரசத்திலுள்ள சர்க்கரைச் சத்து இதயத்தைப் பலப்படுத்தும்.
பழரசங்கள் புதியதாக இருக்க வேண்டும். டின்னில் அடைக்கப்பட்ட, உறைந்து வைக்கப்பட்ட பழரசங்கள் கூடாது.
உண்ணா நோன்பு ஆரம்பிக்குமுன் எனிமா எடுத்துக் கொள்ளுதல் நல்லது. வாயு உபத்திரவம் இருக்காது. கழிவுகள் கெட்டும் வாயு ஏற்படாமலிருக்கும். ஒன்றுவிட்டு ஒரு நாள் நோன்பு இருக்கும்பொழுது எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். இளஞ்சூடான தண்ணீர் அருந்த வேண்டும். பழரசம் தண்ணீர் கலந்து சாப்பிடவும். ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் பழரசம் சாப்பிடலாம். ஆரஞ்சு, திராட்சை ரசம் ஓ.கே.
உண்ணாமலிருக்கும்பொழுது நிறைய சக்தி வெளியேறுவதால் ஓய்வும், மன அமைதியும் தேவை.
சிலருக்கு நச்சுப் பொருட்கள் இரத்தத்தில் கலக்கும்பொழுது (உண்ணா நோன்பின்போது) மயக்கம், வாந்தி வரலாம். இது தொடர்ந்தால் பாஸ்டிங்கை விட வேண்டும். பீட்ரூட், ஸ்பினாச், போன்றவற்றை சமைத்து உண்ண வேண்டும். உடம்பு நார்மலாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் உண்ணாமலிருந்தால் மிகவும் பாதிக்கப்படமாட்டார்கள். முதல் நாள் கஷ்டமாகயிருக்கும். பின்பு சாப்பிட வேண்டுமென்ற தூண்டுதல் இருக்காது. நோயாளிக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால் சாப்பிடாமலிருத்தல் அவர்களுக்கு எளிது. ஆனால் பசித்தபின் சாப்பிட வேண்டும்.
உண்ணா நோன்பின் போது சிறிய தூரம் நடை பழகலாம். வெந்நீரில் குளிக்கலாம். குளிர்ந்த தண்ணீரில் குளிக்கக் கூடாது. சூரிய வெளிச்சத்தில், காற்றோட்டமான இடத்தில் தினசரி இருக்க வேண்டும்.
சிலருக்கு தூக்கம் வராமல் சிரமப் படுபவர்கள். இவர்கள் தொட்டியில் சுடுநீர் நிரப்பி உட்காரலாம். காலடியில் சுடுநீர் கொண்ட பாட்டில்களை வைக்கலாம். வெந்நீரை ஒன்று அல்லது இரண்டு டம்ளர்கள் குடிக்கலாம்.
பயன்கள்
உண்ணா நோன்பினால் அனேக பயன்கள் உண்டு. நீண்ட நாள் உண்ணா நோன்பின் உடம்பானது சேகரிக்கப்பட்டு சக்தியை எடுத்துக் கொண்டு செயல்புரிகிறது. வேண்டிய புரோட்டின், கொழுப்பு கிடைக்காததால் உடம்பானது தனது திசுக்களை எரித்து, ஜீரணம் செய்யும். நோய்ப்பட்ட, கெட்டுப்போன, இறந்த, பழுதுபட்ட திசுக்களை முதலில் எரிக்கும். இவ்வாறு எரிக்கப்பட்ட திசுக்களின் இடத்தில், புது திசுக்கள் தோன்றும். நுரையீரல், சிறுநீரகங்கள், ஈரல் போன்றவை கழிவுகளை நன்கு வெளியேற்றும். உணவு சேராததால் அவைகளின் வேலைப் பளு குறைந்து, செயல்திறன் அதிகமாவதால் கழிவுப் பொருட்களை விரைவில் அவை அகற்றும். உடல் நார்மலாகி நரம்புகள் முறுக்கேறும், மனம் நன்கு மேம்படும்.
உண்ணா நோன்பை முடித்தல்
உண்ணா விரதம் எவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்கிறதென்பது அது முடிக்கப்படும் விதத்திலுள்ளது. இது முக்கியமான கட்டம். இதற்கான விதிகள், அதிகம் சாப்பிடக் கூடாது. மென்று தின்னவும். மெதுவாக சாப்பிடவும். வழக்கம்போல சாப்பிட நாட்கள் பல எடுக்கவும். திட உணவை சாப்பிட கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும். நல்ல ஓய்வு தேவை. நல்ல, சரியான உணவு உண்ணா நோன்புக்குப் பின்பு தேவை.
ஆயுர்வேதம்.காம்