ஆயுர்வேதத்தின் படி விரதம் என்பது, செரிமானத்தை தடை இல்லாமல் செயல்படவும், வயிற்று எரிச்சல் மற்றும் நச்சுகளை வெளியேற்றவும் கையாளப்படும் சிறந்த யுக்தி என கூறப்படுகின்றது. இது மனதிற்கு நிம்மதியையும், உடலிற்கு வலிமையையும் கொடுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை, சில பேருக்கு மூன்று நாட்கள் மேல் விரதம் இருந்தால் அவர்களின் நரம்புகள் பாதிப்படைந்து உடல் வலிமை இழந்து பயம், பதட்டம் போன்ற எதிர்மறை வினைகள் வரும். அதனால் இதற்கான அறிகுறிகள் விரதம் இருக்கும் போது ஏற்படலாம். அப்படிபட்டவர்கள் விரதத்தை நிறுத்துவது நல்லது.
முதல் அறிகுறி என்னவென்றால்? சோர்வான உணர்வு, வயிற்றில் ஏதோ ஒரு எரிச்சல் போன்ற உணர்வு வந்தாலோ அல்லது இரைப்பை பிரட்சனை வந்தாலோ உடனே விரதத்தை நிறுத்துமாறு வலியுறுத்தப்படுகின்றது. இரண்டாவது வாந்தி, வெறும் வயிற்றில் இருக்கும் போது வாந்தி ஏற்பட்டால் அது தீவிரமான இரைப்பை எரிச்சலாகும். நமது உடலில் எலக்ட்ரோலைட் சமனற்ற நிலைக்கு தள்ளப்படவும் வாய்ப்பு அதிகம்.
மூன்றாவது சுய நினைவு இல்லாமல் போவது, விரதத்தில் இருக்கும்போது உடல் சோர்வாக இருப்பது இயல்பு. அதனால் மயக்கம் வரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு தடவைக்கு மேல் மயக்கம் ஏற்பட்டு நினைவு இழப்பதை உணர்ந்தால், மறுபடியும் விரதத்தை தொடர்வது ஆபத்தானதாகும். இது மூளைக்கு சரியான அளவில் குளுக்கோஸ் இல்லாததை மறைமுகமாக உணர்த்தும். பக்திக்காக விரதம் இருந்தாலும் நம்முடைய உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். வயிற்றுபகுதி, மார்பு போன்ற பகுதியில் வலி ஏற்பட்டாலும் விரதத்தை நிறுத்தலாம். இந்த வலிகள் மிகவும் பாதிப்பான வழியை வகுக்கலாம்.
அனைத்தையும் தாண்டி விரத நேரத்தில் பழங்களை பார்த்து சாப்பிடுவது அவசியம், ஏனென்றால்? ”டயரியா” பொதுவாக பழங்களில் இருந்துதான் ஏற்படுகின்றது. எந்த பழமாக இருந்தாலும் அதன் தரத்தையும் பார்த்து சாப்பிடுவது நல்லது.