டீ டிகாஷன் போட்டு லேயர் கோழி முட்டையை நாட்டுக் கோழி முட்டை என்று விற்கும் சமாச்சாரமல்ல இது. லேயர் கோழி, நாட்டுக்கோழி முட்டையைப் போல் போலி முட்டை தயார் செய்யப்படுகின்றது. போலி முட்டையானது சாதாரண நாட்டுக் கோழி, லேயர் கோழி முட்டையின் சுவையை விட அதிகமாக இருப்பதால் மக்களால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. செய்கையாக கோழி முட்டைகளை சீனா அதிக அளவில் தயாரித்து தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறதாம். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய போலி முட்டைகள் பெரிய மால், சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட விற்பனை செய்யப்படுகிறதாம். இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் பலவித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன என்பதால் மக்கள் போலி முட்டையினை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்? போலி முட்டை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏழு இரசாயனப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் முட்டையானது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொழுது நான்கு மடங்கு லாபம் பெறலாம் என்பது வியப்பாக உள்ளது அல்லவா.
போலி முட்டையை தயாரிப்பது எப்படி?
முதலில் முட்டையின் மஞ்சள் கருவை தயாரித்துக் கொண்டு, அதை குறிப்பிட்ட ரசாயன கலவையில் கலந்து அதனை பராபின் மெழுகு அல்லது கால்சியம் கார்பனேட் கலவையில் போட்டால் வேதிவினை மாற்றத்தினால் சில நிமிடங்களில் ஓடு உருவாகி விடும். சில முட்டைகளின் வேதிவினை மாற்றத்தால், இரசாயனம் சேர்த்தல் சரியான அளவில் அமையாவிட்டால் அல்லது அரைகுறையாக இருந்தால், மஞ்சள் கரு கெட்டிப்பட்டு காட்டிக் கொடுத்து விடும்.
போலி முட்டைகளை கண்டறிய ஈஸி வழி
முட்டையின் ஊடே ஒரு டார்ச்லைட் வெளிச்சம் அடித்துப் பார்க்கும் பொழுது இயற்கையான காற்று ஓட்டைகள் அந்த முட்டையில் இருந்தால் அது நாட்டுக் கோழி மற்றும் பிராய்லர் கோழி முட்டை என்று தெரிந்து கொள்ளலாம். முட்டைக்கு மறுபக்கம் உள்ள பொருள் தெரிகிறது என்றால் அது போலி முட்டையாகும். போலி முட்டையில் அடிக்கப்படும் வெளிச்சம் எதிர்பக்கத்தில் தங்கு தடையின்றி தெளிவாக தெரியும்.
போலி முட்டைகளின் கெடுதலை அரேபிய நாடுகள் அறிந்ததால் அங்கு வசிக்கின்ற கேரள மக்கள் இந்தியாவில் தங்கள் மாநிலத்தில் போலி முட்டையின் நடமாட்டத்தைப் பற்றி அறிந்து விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். நமது தமிழ் நாட்டிலும் போலி முட்டைகளைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வாசகர்களுக்கு இத்தகவலை சொல்லி இருக்கிறோம்.