கண்களைக் காக்கும் உணவுகள்

Spread the love

உலகிலேயே சிறந்த காமிரா நமது கண்கள் தான். அவற்றை பாதுகாக்க சில உபயோகமான குறிப்புகளையும் சிகிச்சைகளையும் ஆயுர்வேதம் சொல்கிறது.

கண்களை, பாதிப்புகள் வருமுன் காக்க ஆயுர்வேதம் மூலிகை கஷாயங்களால் அடிக்கடி கண்களை கழுவுதல், பிரம்மி, நெல்லி, பிருங்கராஜ் மூலிகைகளின் தைலத்தை தலைக்கு தேய்த்து குளிப்பது முதலியவற்றை கூறுகிறது. தினசரி உணவில், பயத்தம் பருப்பு, முக்கிரட்டை கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை, கேரட், ஆப்பிள், மாதுளை, பப்பாளி, பாகற்காய், புடலங்காய் முதலியவற்றை சேர்த்துக் கொள்வது கண்களுக்கு நல்லது என்கிறது ஆயுர்வேதம்.

கண் கோளாறுகள் உண்டாகும் காரணம் திரிதோஷ கோளாறுகள். வாதம் கண்கள் வரட்சியினால் உலர்ந்து போதல், கருமை தோன்றுதல் போன்றவற்றுக்கு காரணம். பித்ததோஷம் கண்கள் சிவந்து போதல், எரிச்சல் இவற்றை உண்டாக்கும். கபத்தால் கண்கள் அரிப்பு, நீர்வடிதல் போன்றவற்றை உண்டாக்கும்.

கண்களைக் காக்கும் உணவுகள்

தானியங்கள் – அரிசி, கோதுமை, பார்லி

பருப்புகள் – பச்சைப் பயறு, கடலைப் பருப்பு, உளுந்து, சோளம்

காய்கறிகள் – வெந்தயம், வெந்தயக் கீரை, முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முட்டைக்கோஸ், பசலைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, ஜீரகம், கருமிளகு, லவங்கம்

கிழங்குகள் – கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட்

பழங்கள் – பேரீட்சைப்பழம், அத்திப்பழம், மாதுளம்பழம், திராட்சை, இயற்கையாக பழுத்த மாம்பழம், ஆப்பிள், நெல்லிக்கனி, வாழைப்பழம், ஆரஞ்ச், கொய்யா, தக்காளி, கருப்பு திராட்சை, எலுமிச்சம்பழம், பப்பாளி, அன்னாசி, பலாப்பழம் முதலியன.

எண்ணெய்கள் – நல்லெண்ணெய், எள் எண்ணெய், மீன் எண்ணெய்

மாமிச உணவுகள் – நதி மீன்கள், கோழி, சுறா மீன், ஆட்டின் லிவர், முட்டை,

பாலும், பால் சார்ந்த உணவுகளும் – பசும் பால், ஆட்டுப்பால், பசும்பாலிலிருந்து எடுக்கப்பட்ட நெய், ஆட்டுப்பாலின் நெய், பசும்பாலிலிருந்து செய்யப்பட்ட வெண்ணெய், மோர், கிரீம்,

கீழ்க்கண்ட உணவுகளை தவிர்க்கவும்

காராமணி, ராஜ்மா, சோயாபீன்,

பழங்கள் – முலாம்பழம், தர்பூசணி

எண்ணெய்கள் – செந்தூரகம் எண்ணெய், லின்சிட் ஆயில்

பிரெட், பன் போன்ற உணவுகள்

கண்களுக்கு ஒவ்வாத விருத்த ஆகாரங்கள்

கீழ்க்கண்டவை கண்களுக்கு நல்லதல்ல என்கிறது ஆயுர்வேதம்

பழம் + பால்

முருங்கைக்காய் + தயிர்

பால் + மீன்

வெண்கல பாத்திரத்தில் தயாரித்த தேன்

சில கண்கோளாறுகளுக்கு ஏற்ற உணவுகள்

பல விதமான பார்வைக்கு – இந்த கோளாறுகளுக்கு சீசனில் கிடைக்கும் மாம்பழம் நல்லது.

மாலைக்கண் – இதற்கும் மாம்பழம் நல்லது.

அகத்திக்கீரை சாறு அல்லது சமைத்த அகத்திக்கீரை இந்த குறைபாட்டுக்கு நல்ல மருந்து.

கண் சோர்வுக்கு ஒரு கப் திராட்சை ரசம் + ஒரு மேஜைக்கரண்டி தேன்

பழுத்த பப்பாளி + பால் + தேன்

தூர பார்வை, கிட்டப்பார்வை கோளாறுகளுக்கு

இதற்கு மாம்பழக் கூழ் ஒரு தேக்கரண்டி எடுத்து தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை கொடுத்து வர பார்வைகள் சீரடையும்.

கண்ணெரிச்சலை குறைக்க

ஒரு கப் நாகப்பழ சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

அன்னாசிப்பழம் தினமும் எடுத்துக் கொள்ளலாம். அக்டோபர் மாதங்களில் அன்னாசி பழத்தை சாப்பிடக் கூடாது.

சித்த வைத்தியத்தின் படி

பொன்னாங்கண்ணிக்கீரை, சிறுகீரை மற்றும் திரிபாலா சூரணம் கண் பராமரிப்புக்கும், கண் நோய்களை தடுக்கவும் உபயோகமான உணவுகள் என்கிறது சித்த வைத்தியம் தவிர தினமும் இரவில் பால் சாப்பிடுவதும், உணவில் நெய் சேர்த்துக் கொள்வதையே சித்த வைத்தியம் பரிந்துரைக்கிறது.

முக்கியமான குறிப்பு

கண்களுக்கு அத்தியாவசிய தேவை விட்டமின் ஏ. இதனால் கண்கள் பலத்தையும், நல்ல பார்வையையும் பெறும். விட்டமின் எல்லாவித ஆரஞ்ச் / மஞ்சள் நிற காய்கறிகளிலும், பழங்களிலும் கிடைக்கிறது. முக்கியமாக கேரட், ஆரஞ்ச், பரங்கிக்காய், மாம்பழம், பப்பாளி இவற்றில் விட்டமின் உள்ளது.

பசலைக்கீரை, கொத்தமல்லி கீரைகளிலும் உள்ளது. மாமிச உணவில் மீன், லிவர், முட்டைகள் இவற்றில் விட்டமின் ஏ கிடைக்கிறது.

விட்டமின்ஏவுடன் கூடவே விட்டமின் C யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விட்டமின் சி கண்களில் கண்புரை வராமல் தடுக்கும். நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்ச், எலுமிச்சம்பழம், முட்டைக்கோஸ், குடமிளகாய் மற்றும் தக்காளியில் விட்டமின் சி உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கேரட் அல்வா

கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்பதை சிறு குழந்தைகளும் அறியும்.

வெறும் காரட்டாக கொடுக்காமல் அல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் இன்னும் விரும்பும்.

தேவையான பொருட்கள்

துருவிய கேரட்     – 200 கிராம்

பால்                – 1 கப்

கன்டன்ஸ்டு பால்   – 2 டேபிள் ஸ்பூன்

கிரீம் (பாலாடை)     – 2 டேபிள் ஸ்பூன்

பொடித்த சர்க்கரை   – 4 டேபிள் ஸ்பூன்

நெய்                – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி சூடுபடுத்தவும். இதில் துருவிய கேரட்டை போட்டு 10 நிமிடம் (அ) அவை வேகும் வரை வதக்கவும்.

பால், சர்க்கரை, கன்டன்ஸ்டு பால் இவற்றை நன்றாக கலக்கவும். (கன்டன்ஸ்டு மில்க் கிடைக்காவிட்டால் 4 டேபிள் ஸ்பூன் கோவாவை உபயோகிக்கலாம்). இந்தப் பால் கலவையை வாணலியில் உள்ள கேரட்டுடன் சேர்த்து குறைந்த தீயில் 7 லிருந்து 10 நிமிடம் வரை சமைக்கவும். அடிக்கடி கிளறவும். கிரீம்மை கலக்கவும். ஒரு சிட்டிகை பொடித்த ஏலக்காய், முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சை (நெய்யில் வறுத்தது) இவற்றுடன் சேர்க்கலாம். ருசி கூடும்.

உணவு நலம் செப்டம்பர் 2011

கண்களைக் காக்கும், உணவுகள், கண்கோளாறுகளுக்கு ஏற்ற உணவுகள்,

கண்ணெரிச்சலை குறைக்க, முக்கியமான குறிப்பு, கேரட் அல்வா, கேரட் அல்வா செய்முறை,


Spread the love
error: Content is protected !!