கண்களை கவனிப்போம்

Spread the love

மனித உடலில் முக்கியமான உறுப்பு கண். பார்வை மிகவும் அற்புதமான வரம். ஆனால், அநேக மனிதர்கள் கண்களின் முக்கியத்துவத்தை புறக்கணிப்பது மட்டுமல்லாமல், கண்களின் பராமரிப்புக்கு தகுந்த கவனம் செலுத்துவதில்லை.

அழகான கண்களுக்கு

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில கண்கள் பராமரிப்பு குறிப்புகள், அழகான, கவர்ச்சியான கண்களுக்கு

கோப்பை நீரில் சிறிது பருத்தி பஞ்சை இரவு முழுவதும் மூழ்கவிடவும். மறுதினம் காலையில் அதை வடிகட்டி அத்துடன் 1 கப் சாதாரண நீரை கலக்கவும். கண்களின் மேல் பளிச் சென்று அடிக்கவும் அல்லது கண்களை சுத்தமான கண் பராமரிப்பு கோப்பையை பயன்படுத்தி கழுவவும்.

ரோஜாப்பூ நீரில் 2&3 துளிகள் சுத்தமான விளக்கெண்ணையை கலக்கவும். பருத்தி பஞ்சை அதில் நன்றாக நனைத்து, கண்களின் இமைகள் மேல் 15&20 நிமிடங்கள் வைக்கவும். கண்கள் எரிச்சல், மற்ற பிரச்சனைகளும் வெகுவாக குறைந்துவிடும்.

தேநீர் கரைசலை நன்றாக வடிகட்டி 2&3 நிமிடங்கள் குளிர வைத்து, கண்கள் மேல் அடிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு.

குளிர்ந்த தேநீர் பானத்தில் பருத்தி பஞ்சை 1 மணி நேரம் ஊற வைத்து, பிறகு அதை கண் இமைகள் மேல் 10&15 நிமிடங்கள் வைத்திருந்து, அமைதியாக இருக்கவும்.

கண்களை சுற்றியுள்ள கருவளையம் நீங்க

3 துண்டுகள் வெள்ளரிக்காயை துருவி, நசுக்கி, மஸ்லின் துணி மூலம் சாறை எடுக்கவும், பருத்தி பஞ்சை 2 நிமிடங்கள் அந்த சாறில் நன்றாக மூழ்கவிட்டு, பிறகு அந்த பஞ்சை கண்களின் இமைகள் மேலும் கருமையான பகுதியிலும் வைக்கவும். 15 நிமிடங்கள் அமைதியாக இருக்கவும். சிறந்த பலன் பெற தொடர்ந்து 2 லிருந்து 3 நாட்கள் செய்யவும்.

தக்காளி கூழ், 1 தேக்கரண்டியுடன், 1 துளி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி கடலை மாவு இவற்றை நன்றாக கலந்து பசையாக்கவும், பின்னர் இப் பசையை மென்மையாக கண் இமைகளின் மேல், கருமையான பகுதியிலும் தடவி, 1/2 மணி நேரம் விடவும். பிறகு ஈரமான பருத்தி பஞ்சினால் மென்மையாக நீக்கவும். இதை தொடர்ந்து 1 வாரம் செய்யவும்.

ஆழ்ந்த குழி விழுந்த கண்கள்

1 தேக்கரண்டி தேனுடன் 1/2 தேக்கரண்டி பாதாம் எண்ணையை கலக்கவும். மென்மையாக இதை கண்களின் மேல் தடவி, உறங்கவும். தொடர்ந்து 1 வாரம் செய்யவும்.

5 பாதாம் பருப்பை இரவு ஊற வைத்து மறு நாள் அதை 1 கப் பாலுடன் நன்றாக மென்று தின்று குடிக்கவும். இதை தொடர்ந்து, காலையில் 21 நாட்கள் அருந்தினால் நிச்சயம் நல்ல மாறுதல் கிடைக்கும்.

உப்பிய கண்கள்

பச்சை உருளைக் கிழங்கை மெல்லியதாக நறுக்கி மூடிய கண்களை சுற்றி வட்ட வடிவில் கொண்டு செல்லவும் அல்லது துருவிய பச்சை உருளைக் கிழங்கை மெல்லிய மஸ்லின் துணியில் வைத்து பிழியவும். பின்னர் மூடிய கண்களின் மேல் வைத்து 15&20 நிமிடங்கள் அமைதியாக இருக்கவம்.

குளிர்ந்த காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து 10&15 நிமிடங்கள் களைப்பாறவும்.

சிறிய கோப்பையில் குளிர்ந்த எடுத்துக் கொண்டு சில துளிகள் வைட்டமின் ஈ, எண்ணெயை சேர்த்து பஞ்சை 5 நிமிடங்கள் ஊற வைத்து கண்களின் மேல் வைத்து தினமும் 20 நிமிடங்கள் களைப்பாறவும்.

கணனி (கம்ப்யூட்டர்) உபயோகிப்பவர்களுக்கும், கணினி தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும், கண் பராமரிப்புக்கான சில வழிமுறைகள்.

கணினி முன்பும், தொலைக்காட்சி பெட்டியின் முன்பும் பல மணி நேரங்களை செலவழிப்பது மக்களின் அன்றாட வாழ்க்கையில் சகஜமாகிவிட்டது. அதிலும், கணினி தொழில் நுட்ப வல்லுனர்கள் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லை. இது எதிர்காலத்தில் கண், பார்வை சம்பந்தப்பட்ட அனேக தொல்லைகளை உருவாக்கும், கணினி உபயோகிப்பவர்களுக்கு கீழே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

20 முதல் 30 நிமிடங்கள் வேலைக்குப்பிறகு கண்களை வெகு தொலைவில் உள்ள பொருளை நோக்கி செலுத்தி, கண்களை பலமுறை சிமிட்டுங்கள். இது நல்ல பார்வை நோக்கை அதிகரிக்கச் செய்யும்.

அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள். கணினி வேலை செய்பவர்கள், கண்களை சிமிட்டும் அளவு குறைந்து காணப்படுகிறது. இது தொடர்ந்தால் கண்களை வரண்ட கண்கள் நிலைக்கு கொண்டு செல்லும். தினமும் 12&15 முறை கண்களை சிமிட்ட முயற்சிக்கவும்.

கண்களுக்கு அடிக்கடி பயிற்சி கொடுங்கள். கண் பயிற்சி மிகவும் எளிமையானது. நீங்கள் செய்ய வேண்டுவது என்னவெனில் அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும், பிறகு கண்களை மூடிக்கொண்டு வலதுபுறம், இடம்புறம் என மாறி மாறி உருட்ட வேண்டும். இதை செய்யும்பொழுது மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து, வெளியே விட வேண்டும். பிறகு கண்களை மெதுவாக திறக்க வேண்டும்.

பிறகு இரண்டு உள்ளங்கைகளை சூடு வரும் வரை தேய்த்து பிறகு இரண்டு உள்ளங்கைகளால் கண்களை மூட வேண்டும். இது 1 நிமிடம் இருக்கட்டும். சூடான உள்ளங்கைகளால் கண்களை மூடும் முறை கண்களுக்கு புத்துணர்ச்சியையும், இதமான தன்மையையும் தருகிறது.

வேலையின் இடையே குளிர்ந்த நீரை மூடிய கண்களின் மீது அடிப்பது, புத்துணர்ச்சியை அளிக்கிறது. இது கண்களுக்கு குளுமையையும் தருகிறது.

வேலையின் இடையே சிறிது நடப்பது உடம்பிற்கும், மனதிற்கும் புத்துணர்வை தருகிறது. கண்களுக்கு மிகவும் நல்லது ஏனெனில் நடப்பது அதிகமானால், கண்களுக்கு ரத்தம் செல்லும் அளவும் அதிகரிக்கிறது.

கண்கள் கூசுவதைத் தடுக்க மானிட்டருக்கு அதற்கான திரையையோ அல்லது கண்களுக்கு ஏற்ப மூக்குக் கண்ணாடியையோ, பயன்படுத்தலாம். மானிட்டரையும், விளக்கு வெளிச்சத்தையும் தக்கபடி மாற்றி அமைத்து மானிட்டரில் இருந்து வரும் ஒளி வெள்ளத்தை கட்டுப்படுத்தலாம். அதாவது குறைக்கலாம்.

கண்களுக்கு தேவையான வைட்டமின்களும், கனிமங்களும்

வைட்டமின் ஏ & இரவுப் பார்வையை அதிகரிக்கிறது. வைட்டமின் ஏ, நிறைந்துள்ள உணவுப் பொருட்கள் & கரும்பச்சை இலைத் தன்மையுடைய காய்கறிகள், காரட், புதினா, பசலைக் கீரை, பச்சை காலி பிளவர், முட்டை, சீஸ், வெண்ணெய்.

வைட்டமின் பி & காம்ப்ளக்ஸ் & கண்களின் சிவப்புத் தன்மையை குறைக்கிறது. வெளிச்சத்தை கண்டு கூசும் கண்களை பாதுகாக்கிறது. வைட்டமின் பி.1. (தையாமின்) பி.2. (ரிபோப்ளேவின்) பி.3. (மயாசின்) பி.6. (பைரிடாக்சின்) பி.12 (க்கோபாலமின்) நிறைந்துள்ள உணவுப் பொருட்கள், பாஸ்தா, ரொட்டி, பால், கருமையான பச்சை நிலை இலையுடன் கூடிய காய்கறிகள், காளான், பருப்புகள், வாழைப்பழம், ஈரல், வெண்ணெய்யும் (Avacadosol, Butter Fruit ) Tuna (ஒரு வகை பெரிய மீன்)

அழகான கண்களை பாதுகாக்கும் முறைகள்

கண்களுக்கு தேவையான நல்ல உணவை எடுத்துக் கொள்ளல். நல்ல கண் பார்வை வேண்டும் என்ற முதியவர்கள், குழந்தைகள், யாராயினும் அவர்களுக்கு வைட்டமின் எ, சி, டி, ஈ முக்கியமானது.

கண்களுக்கு மிக அதிகமான வேலை தரக் கூடாது. கண்ணிற்கு பொருத்தமான கண்ணாடி அணிய வேண்டும். கண் டாக்டர் கொடுத்த மருந்து சீட்டினை கொண்டு குறிப்பிட்ட தேதியில் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

கண்களை அடிபடாமல் பாதுகாக்கவும், உயர ரக கண்ணாடி வகைகளை பயன்படுத்த வேண்டும். கடினமான வேலையின் போதும் விளையாடும் போதும் பாதுகாப்பு கண்ணாடியை அணிய வேண்டும். பாதுகாப்பு விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

கண்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாக்டீரியாக்கள் வலி தரக்கூடியதும், அழிவை தரக் கூடியதுமான தொற்றுநோயை கொண்டு வரும். ஒப்பனைபோடும் போதும் நீக்கும்போதும் கவனக் குறைவு கூடாது. சீந்தும்போது சுத்தமான டிஷ்யூ பயன்படுத்த வேண்டும், கண்களின் அருகில் இல்லாமல்.

ரத்தக் கொதிப்பை சம அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இயற்கை முறையில் தேவைப்பட்டால் ஒழிய மருந்துகள் பயன்படுததாமல் சீராக இருப்பது நலம்.

புகை பிடிக்கக் கூடாது. புகை பிடிப்பவர்கள் மத்தியில் இருந்தால் நீங்களும் புகைப் பிடிப்பதாகும்.

கண்களுக்கு ஓய்வு தேவை. தைக்கும்போது, கணினியில் வேலை செய்யும்போதும், அடிக்கடி, தொலைவில் நோக்க வேண்டும். கூர்மையான பார்வை செலுத்தி வேலை செய்யும்போது, அடிக்கடி கண்சிமிட்ட வேண்டும். கண்கள் ஈரத்தன்மை அடையும்.

கண்களுக்கு யோகா பயிற்சி அளிக்கவும், கண்களை மெதுவாக சிமிட்டவும், மெதுவாக எவ்வளவு தொலைவு பார்க்க முடியுமோ பார்க்கவும், பின்னர் இடது, வலது, மேல், கீழ் பின்னர் மூக்கை நோக்கவும்.

குளிர்க் கண்ணாடியை (Sunglasses ) (ultra violet light) புற ஊதா கதிர்கள் தோன்றும் நேரமான காலையிலும், மதியமும் அணியவும்.

பிரதி வருடமும் கண் வைத்தியரிடம் முறைப்படி பரிசோதனை செய்து விட்டீர்களா என்று உறுதி செய்யவும். குழந்தைகளுக்கும் பள்ளி திறக்குமுன், கிட்ட, தூரப்பார்வை மற்ற குறைப்பாடுகளுக்கு முழு பரிசோதனை செய்ய வேண்டும். மற்றவர்கள், முதியவர்கள், தூர, கிட்ட பார்வை மட்டுமல்லாமல், வயதானவுடன் தோன்றும் மற்ற குறைபாடுகளையும் பரிசோதனை செய்து நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுவது அவசியம்.

To Buy Herbal Products >>>


Spread the love