தோளுக்கு வலுக்கொடுக்கும் உடற்பயிற்சி.

Spread the love

உடலின் வலிமைக்கு முக்கிய உதாரணமாக தோள்பட்டை இருக்கிறது. ஆஜானுபாகுவான உடல் மட்டும இருந்தால் போதாது. அதில், உரிய வலுவும் பொலிவும் இருக்க வேண்டும். தோள்பட்டை அதிகம் அசையக் கூடிய மூட்டுப் பகுதி. ஆகவே, இந்த தோள்பட்டையை வலுப்படுத்தும் பயிற்சிகள் குறித்து பார்ப்போம்.

ஷோல்டர் ஃப்ரண்ட் ரைஸ் பயிற்சி

முன் தோள்பட்டைக்கு உகந்த பயிற்சி இது. ஐந்து கிலோ எடைகொண்ட பார்பெல் கம்பியின் உதவியுடன் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

கால்களைச் சற்று அகட்டி நின்று கொண்டு, பார்பெல்லைக் கீழிருந்து மேலாக மார்பு வரை (40 டிகிரி) உயர்த்தி இறக்க வேண்டும். இப்படி 20 முறை செய்யுங்கள்.

இதன் பயன்கள்.

முன் தோள்பட்டைகள் நன்றாக விரிவடையும். தசைகள், எலும்புகள் வலவடையும்.

பக்கவாட்டு தோள்பட்டை பயிற்சி.

இடது காலை முன்பக்கமும், வலது காலை பின்பக்கமும் அகட்டி வைத்து நிற்கவும். 5 கிலோ டம்பெல்லை கைகளில் வைத்துக் கொள்ளவும். உடலைச் சற்று முன்னோக்கி வளைத்தவாறு, இரண்டு கைகளிலும், 20 முறை டம்பெல்லை ஏற்றி இறக்கவும்.

இதன் பயன்கள்.

பக்கவாட்டில் உள்ள தோள்பட்டை தசைப்பகுதி நன்கு விரிவடைந்து, முன் இடது கால் தசைப்பகுதி, பின் தசைப் பகுதி, முழங்கால் எலும்பு வலுவடையும்.

சைடு ரைஸ் சிங்கிள் ஹேண்ட் ஷோல்டர் பயிற்சி

இடது காலைச் சற்று அகட்டி, வலது காலில் சற்று பேலன்ஸ் செய்தபடி நிற்க வேண்டும். இடது கையை இடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து கிலோ டம்பெல்லை வலது கையில் வைத்தபடி சில விநாடிகள் அப்படியே நிற்க வேண்டும். பின்னர் இதேபோல இடது கையில் செய்ய வேண்டும்.

இதன் பயன்கள்.

பக்கவாட்டில் உள்ள மேல்தசை மற்றும் கீழ்தசையை ஃபீட் ஆக்கும். கைப்பகுதியில் உள்ள நரம்புகள் வலுவடையும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கை மணிக்கட்டுப் பகுதி எலும்புகள் வலுவடையும்.

ராடு பார்பெல் ட்ரைசெப்ஸ் பயிற்சி.

பார்பெல் கம்பியை மார்பளவு வைத்தபடி நிற்க வேண்டும். கைகளை மடித்து பார்பெல் கம்பியை முகத்துக்கு அருகே கொண்டு சென்று சில விநாடிகளில் பழை நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி 20 முறை செய்யுங்கள்.

இதன் பயன்கள்.

கைப்பகுதிகளில் உள்ள தசைகள் வலுவடையும். நரம்புகள் வலுவடைவதுடன், தசைப் பகுதி விரிவடைந்து அழகு கூடும்.


Spread the love