உடற்பயிற்சியின் இதர  நன்மைகள்

Spread the love

உடல் உழைப்பு அருகி வருகின்ற இந்நாட்களில் அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம். அதிலும் குறிப்பாக நீரிழிவுக்காரர்களுக்கு மிகவும் அவசியம். உடற்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், செல்களுக்குள் குளுகோஸ் எளிதாகச் செல்வதற்கும், இரத்தச் சர்க்கரையின் அளவு குறைக்கப்படவும், இன்சுலின் திறம்படச் செயல்படுவதற்கும் உதவுகிறது. உங்களது இதயமும் நுரையீரலும் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. இன்சுலின் சார்ந்த நீரிழிவுக் காரர்களுக்கும் இன்சுலின் சாரா நீரிழிவுக்காரர்களுக்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

                இதில் அதிசயம் என்னவென்றால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கி.மு. 600 லியே ஆயுர்வேத மேதை சுஸ்ருதா குண்டான நீரிழிவு நோயாளிகள் நடப்பது, கிணறு வெட்டுவது. குதிரை சவாரி போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார். அதேசமயம் ஒல்லியான நீரிழிவு நோயாளிகள் அதிகமாக உடலை வருத்த வேண்டாம் என்றார்.

உடற்பயிற்சியின் இதர நன்மைகள்

· உயர் இரத்த அழுத்தத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் நேரடியான தொடர்பு உள்ளது. உடற்பயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைகின்றது. இறப்பு விகிதத்தை குறைக்கின்றது.

· உடற்பயிற்சி மூப்படைதலை குறைக்கின்றது. வாழ்நாளை, ஆரோக்கியத்தை, இளமையை பெருக்குகின்றது.

· இதய இரத்தக்குழாய்களின் தன்மையை வலுவாக்கி இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது.

· பிற நோய்களின் தாக்கத்தை குறைக்கின்றது. நீரிழிவின் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்றது.

· இரத்தத்தில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பின் (லிஞிலி) அளவை குறைக்கின்றது.

· தசைகள் வலுப்பெற உதவுகின்றது. குறிப்பாக இதயத்தின் தசையை வலுப்படுத்துகின்றது.

· நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது.

· அதிக எடையை குறைக்கும். கலோரிகளை எரித்துவிடும்

· அழற்சியை டென்ஷனை குறைக்கும்.

· நரம்புகளின் செயல்பாட்டையும் மூளையின் செயல்திறனையும் மேம்படுத்தும்.

· எலும்புகளை வலுப்படுத்தி மூட்டுகளை எளிதாக செயல்பட உதவிடும்.

.· உடல் எடை அதிகரிப்பதை தவிர்த்திடும்.

· உடலில் சேரும் கழிவுப் பொருட்களை எளிதாக வெளியேற்ற உதவிடும்.

· மனச்சோர்வையும் வருத்தத்தையும் போக்கிடும்.

· வளர்சிதை மாற்றத்தை (metabolism) சீராக்கும். இதனால் டயாபடீக் நோயாளிகளின் ஆரோக்கியம் மேம்படும்.

· மனநிலையை மேம்படுத்தும்.

· உடலின் இன்சுலீன் எதிர்ப்பு தன்மையை குறைக்கிறது

· முக்கியமாக உடற்பயிற்சியில் சக்தி தேவைப்படும். குளுக்கோஸ் தேவை அதிகரிக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு குறையும். இன்சுலீன் ஊக்கமடைகிறது. அதிக சர்க்கரை முழுவதையும் உடல் ஏற்றுக்கொண்டு, எரித்து விடும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love