இதுவரை நீங்கள் எத்தனை முறை அடுத்த வாரம் முதல், அடுத்த மாதம் முதல் அல்லது அடுத்த வருடம் முதல் உடற்பயிற்சி செய்வேன் என முடிவெடுத்திருக்கிறீர்கள்? அல்லது எத்தனை முறை உடற்பயிற்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களில் கை விட்டிருக்கிறீர்கள்.
அல்லது ஏதாவது ஒரு நொண்டி சாக்கைக் காரணமாகக் காட்டி உங்கள் உடற்பயிற்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்? ஏன்? உடற்பயிற்சி என்பது அவ்வாறு சாக்குப் போக்கைக் காரணம் காட்டி நிறுத்திடக் கூடிய ஒன்றா? இல்லை இல்லவேயில்லை உங்கள் கவலையை விடுங்கள். இதோ நீங்கள் ஏன் உங்கள் உடற்பயிற்சியை விடக் கூடாது அல்லது எவ்வாறு உங்களது சாக்குப் போக்குகளை எதிர் கொள்ள வேண்டும். அல்லது எவ்வாறு உங்கள் அன்றாட உடற்பயிற்சி உங்களது உடல் நலனை மேம்படுத்தும் என்பதற்கான சில யோசனைகள். இவற்றை பயன்படுத்துங்கள். உடற்பயிற்சியை தவிர்க்காதீர்கள் பயனடையுங்கள். வாழ்த்துக்கள்.
· உயர் இரத்த அழுத்தத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் நேரடியான தொடர்பு உள்ளது. உடற்பயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைகின்றது. இறப்பு விகிதத்தை குறைக்கின்றது.
· உடற்பயிற்சி மூப்படைதலை குறைக்கின்றது. வாழ்நாளை, ஆரோக்கியத்தை, இளமையை பெருக்குகின்றது.
· இதய இரத்தக்குழாய்களின் தன்மையை வலுவாக்கி இரத்த ஒட்டத்தை சீராக்குகின்றது.
· பிற நோய்களின் தாக்கத்தை குறைக்கின்றது. நீரிழிவின் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்றது.
· இரத்தம் கட்டிப்படும் தன்மையை சீராக்கி ஒட்டத்தை சீராக்குகின்றது.
· இரத்த நாளங்களின் மீள்திறனை சீராக்குகின்றது.
· இரத்தத்தின் கட்டித் தன்மையை (Viscosity) சீராக்குகின்றது.
· இரத்தத்தில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பின் (LDL) அளவை குறைக்கின்றது.
· தசைகள் வலுப்பெற உதவுகின்றது. குறிப்பாக இதயத்தின் தசையை வலுப்படுத்துகின்றது.
· உடலின் உஷ்ணநிலையையும் ஈரப்பதத்தையும் சீராக வைத்திட உதவுகின்றது.
· நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது.
· எலும்புகளை வலுவடையச் செய்கின்றது.
· மிதமான உடற்பயிற்சி மூட்டுவலியை போக்குகின்றது.
· புற்றுநோய் தாக்காமல் காத்திடும்.
· மலச்சிக்கலை தவிர்த்திடும் எளிதாக மலம் கழித்திட உதவும்.
· தசைவலி மற்றும் நாள்பட்ட தசை பிடிப்பை போக்கிடும்.
· உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சீராக்கும்.
· உடலுறவில் ஈடுபாட்டை ஏற்படுத்தும் உறவினை மேம்படுத்தும்.
· மலட்டுத்தன்மையை ஆண்மைக் குறைவினைப் போக்கும்.
· அதிக எடையை குறைக்கும்.
· நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கும் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை பெறச் செய்யும்.
· மூப்படைவதால் ஏற்படும் நோய்களை தவிர்க்கும்.
· அழற்சியை டென்ஷனை குறைக்கும்.
· நரம்புகளின் செயல்பாட்டையும் மூளையின் செயல்திறனையும் மேம்படுத்தும்.
· தன்னம்பிக்கையையும் தோற்றத்தையும் மேம்படுத்தி கம்பீரத்தை தரும்.
· எலும்புகளை வலுப்படுத்தி மூட்டுகளை எளிதாக செயல்பட உதவிடும்.
· பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். சுரப்புகளை சீராக்கும்.
· உடல் எடை அதிகரிப்பதை தவிர்த்திடும்.
· மாதவிடாய் மற்றும் மாதவிடாய் மறையும் வேலைகளில் ஏற்படும் வலியையும் பிரச்சனைகளையும் குறைத்திடும்.
· உடலில் சேரும் கழிவுப் பொருட்களை எளிதாக வெளியேற்ற உதவிடும்.
· வியர்வையை அதிகரிக்கச் செய்து சரும துவாரங்களில் படிந்துள்ள கழிவை வெளியேற்றிடும்.
· தேவையற்ற சிந்தனையை போக்கி மனதை ஒரு நிலைப்படுத்திடும்.
· மனச்சோர்வையும் வருத்தத்தையும் போக்கிடும்.
· பிற நோய்களை எதிர்க்க உதவிடும்.
· தொடர் உடற்பயிற்சி ஆஸ்துமாவை குறைத்திடும்.
· மனநிலையை மேம்படுத்தும்.
· பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சக்தியை கொடுத்திடும்.
· அறிவு திறனை மேம்படுத்தும்.
· இளமையை நிலைபெறச் செய்திடும்.
இத்தனை நன்மைகள் பயக்கக்கூடிய உடற்பயிற்சியை நீங்கள் ஏன் தவிர்த்திட வேண்டும். இன்றே உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.