பாலுறவில் அதிக ஆர்வம்

Spread the love

உடல் உஷ்ணத்திற்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்மந்தம் என்ன? உடல் உஷ்ணம் பல கோளாறுகளை உண்டாக்கும். உடல் உஷ்ணத்தைப் பற்றி முன் வந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வாய்வுத் தொல்லையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும். ஆசை அதிகம் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும்.
வெய்யில் காலத்தில் ஆண்களின் ஜனனேந்திரிய உறுப்பு - விந்துப்பை (ஷிநீக்ஷீஷீtuனீ) தளர்ச்சியாக, அதிகமாக விரிந்து, பெரிதாக தொங்கும். காரணம் பரப்பை அதிகமாக்குவதால் உஷ்ணம் சிக்கிரம் குறையும். குளிர்காலத்தில் விந்துப்பை சுருங்கி இருக்கும். பரப்பளவு குறைவதால் குளிரின் தாக்கம் அதிகம் தெரியாது. இந்த பருவகால மாற்றங்கள் வேறு, உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்பு வேறு சாதாரணமாகவே உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று பாலியல் குறைபாடுகள்.
ஜனனேந்திர உறுப்புகள் 'கூலாக' (சிஷீஷீறீ - குளுமையாக) இருக்க வேண்டும். உடலின் மற்ற அவயங்களை விட, உடல் உஷ்ணத்தில் ஒரு டிகிரி குறைந்தே இருக்க வேண்டும். அப்போது தான் கரு உண்டாக்கும் ஆண் தாதுவை (ஷிஜீமீக்ஷீனீணீ tஷீக்ஷ்ஷீணீ) விந்துப்பையில், அடிவயிற்றை விட ஒரு டிகிரி உஷ்ணக் குறைவில் வைத்து பாதுகாக்க முடியும்.
உடல் உஷ்ணம் அதிகரித்தால், விந்துப்பை அதிகமாக விரிந்து, உடலை விட்டு தொங்கிவிடும். உடலுறவு ஆர்வம் அதிகமாகும். ஆனால் சில விநாடிகளே உடலுறவில் ஈடுபடமுடியும். சூடான ஆண் அவயம், குளிர்ச்சியான பெண் உடலுடன் இணைந்தால், உடனே விந்து வெளியாகி விடும். ஆண்மை குறைவு ஏற்படும். ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையும் நீடித்து நிற்காது. விறைப்பு அடைவதே கடினமாகி விடும்.
இது தவிர விந்துவின் 'பலமும்' குறையும். விந்துவின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறையும். வெளிவரும் விந்துவின் அளவு குறையாது. ஆனால் விந்து நீர்த்துவிடும். இதனால் ஆண் மலட்டுத்தன்மை எற்படும். தவிர உஷ்ணத்தால் ரத்த நாளங்கள் அதிகமாக விரியும். இந்த பாதிப்பு அதிகமாக இடது விரை (ஆண் அண்டங்கள் - ஜிமீstவீs) யில் ஏற்படும் இதனால் ஆண் உறுப்பில் விறைப்பை உண்டாக்கிய ரத்தக் குழாய்கள் விரிவடைந்து விடுவதால், ரத்தம் நிலை கொள்ளாமல், திரும்பி ஒடி விடுகிறது. விறைப்புத்தன்மை நீடிப்பதில்லை. இதை க்ஷிணீக்ஷீவீநீஷீநீமீறீமீ என்பார்கள்.
உடலுறவு இச்சையை, உடல் உஷ்ணம் தூண்டிவிடுவதால், இரவில் விந்து வெளியேறலாம். தவிர னீணீstuக்ஷீதீணீtவீஷீஸீ பழக்கமும் சூடான உடலுடைய இளைஞர்களிடம் அதிகம் காணப்படும். இதனால் குற்ற உணர்வு ஏற்பட்டு உடலுறவுக்கு தகுதி குறைந்து விடும்.
பெண்களை பொருத்தவரை உடல் உஷ்ணம் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது. உடலுறவில் ஆர்வம் குறையும். அதிக வெள்ளைபடுதல் ஏற்படும். தளர்ச்சி, இடுப்பு வலி, முதுகுவலி இவை ஏற்படும்.

ஙிஷீஜ்
இந்த உடல் உஷ்ணபாதிப்புகளை எங்கள் ஆயுர்வேத நிறுவனத்தில், முதல் முறையாக கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எங்களிடம் வரும் நோயாளிகளில் பலருக்கு உடல் உஷ்ணம் குறைக்கும். மருந்துகளும், நோயாளிகளின் மருந்துடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டன. இதனால் பாலியல் குறைபாடுகளுக்கு நல்ல நிவாரணம் கிடைத்துள்ளது

உடல் சூடு அதிகரிக்கும் காரணம் வாய்வுத்தொல்லை. வாய்வுத்தொல்லை அதிகரிக்க காரணம் அஜீரணம். எனவே ஜீரணக் கோளாறுகளை சரி செய்து கொள்வது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Spread the love
error: Content is protected !!