மாலை வேளைக்கான சிற்றுண்டி

Spread the love

முளை கட்டிய தானிய வகைகள்

நோய் நொடியின்றி நலமாக வாழ்ந்தால் வளமான வாழ்வு அமையும்.

முளை கட்டிய பயிறு ஒருவேளை வெந்தயம், கொள்ளு, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, வெள்ளரி விதை, எள் போன்றவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த தானியங்களை நன்கு கழுவி எட்டு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.பின்னர் அதை ஒரு ஈரத்துணியில் எட்டு மணி நேரம் சுற்றிவிட வேண்டும் மறுபடியும் எட்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் அதில் முளை கட்டியிருக்கும்.இதனை அப்படியே சாப்பிடலாம்.

முளை கட்டிய தானியங்களின் பயன்

பயிறு

புரதம், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், வைட்டமின் கி1, ஞி1, ஞி2 முதலியவை அதிகமாக உள்ளது.சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.கண்பார்வையில் தெளிவு உண்டாகும்.

கொண்டைக்கடலை

உடலில் உள்ள சக்தி குறையாமல் வைத்திருக்கும்.

கருப்பு உளுந்து

தாய்ப்பால் சுரக்கும்.

எள்

ஓல்லியான உடல்வாகு கொண்டவர்கள் குண்டாகலாம், கண்பார்வை மேம்படும்.

கொள்ளு

உடல் பருமன் குறையும், மூட்டுவலி நீங்கும்.

முளைக்கட்டிய தானியங்களின் நன்மைகள்

முளைக்கட்டிய தானியங்கள்  ஊட்டச்சத்துகளும், புரதச்சத்துகளும் நிறைந்த இயற்கை உணவுவாகும். முளை கட்டப்படுவதால் தாதுக்கள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவை நமக்கு கிடைக்கின்றன. இதை உண்பதால் செரிமானத்திற்கு உதவும் எண்ணற்ற சுரப்பிகள்  சுரக்கப்படுகின்றன. பருப்புகள் மற்றும் தானியங்களை தண்ணீரில் ஊற வைத்தையே முளைக்கட்டுதல் என்கிறோம்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love