என்சைம்

Spread the love

தெரிந்த பெயர், தெரியாத விவரங்கள் என்று நாம் பட்டியலிட்டால் அதில் “என்சைமும்” வரும். தமிழில் இதை நொதிப்பொருள் என்கிறோம்.

என்சைம் என்பது ஒருபுரதம், உடலில் சில இராசயன மாறுதல்களை விரைவுப்படுத்தும், தூண்டுபொருள். அதுவும் தான் எந்த மாறுதல்களுக்கும் உட்படாமல், ரசாயன மாற்றங்களை ஊக்குவிக்கும் கிரியா ஊக்கி.

மனித உடலில் 2000 என்சைம்கள் இருப்பதாக தெரிகிறது. இதில் 1000 என்சைம்களே நமக்கு சரியாக தெரிந்தவை.

என்சைம் ஒருபொருளுடன் இணைந்து அதை வேறொரு பொருளாக மாற்றும் திறனுடையது. இந்த ரசாயன நிகழ்சிசியில் என்சைம் எந்த மாறுதலுக்குள் ஆளாகாமல் தான் அப்படியே இருக்கும். இது தான் அதன் தனித்திறன். ஒரு என்சைம் ஒரு குறிப்பிட்ட மாறுதலை மட்டும் செய்யும். அதாவது ஒரே என்சைம் எல்லா வித மாறுதல்களையும் உண்டாக்காது. அந்தந்த மாறுதலுக்கு அந்தந்த என்சைம் தேவை.

என்சைம் சக்தி வாய்ந்தது. அது திறன்பட வேலை செய்ய

·     சரியான உஷ்ண நிலை. வெப்பம் 55 டிகிரி சென்டிகிராமுக்கு மேல் இருக்கக் கூடாது.

·     பொருள் சரியான pH அளவில் இருக்க வேண்டும். pH என்றால் ஒரு கரைசலில் இருக்கும் ஹைடிரஜன் அயான்களின் (அணுவின் நுட்பமான பாகம் – Ions) அளவு, இது அமிலத்தன்மையையும், காரத்தன்மையையும் தீர்மானிக்கும். pH 7 என்றிருந்தால் அமிலமும் காரமும் சரிசமமாக இருக்கிறது என்று அர்த்தம். 7க்கு குறைந்தால் அதிக அமிலத்தையும், 7க்கு மேலிருந்தால் அதிக காரத்தன்மையையும் காட்டும்.

·     கூட ஒரு கோ – என்சம் (co – enzyme) தேவை, கோ – என்சம் புரதம் இல்லை. அது ஒரு அங்க – Organic பொருள். என்சைமை முன் வைத்து, அது ஊக்குவிக்கும் செயலை நடத்தித்தரும் கோ என்சைம்களில் விட்டமின்  ‘H’ இருக்கும். கோ என்சைம் கி, எஃப்.ஏ.டி. (F.A.D. – Flavin adenine dinucleotide), என்.ஏ.டி. (N.A.D – Nicotinamide adenine dinucleotide) – இவை மூன்றும் கோ என்சைமுக்கு உதாரணங்கள். உதாரணமாக கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்திற்கு, என்சைமுடன், கோஎன்சைம் “ஏ” சேர்ந்து ஒத்துழைக்கிறது. கோஎன்சைம்கள், என்சைமை போல, செல்களில் தொடர்ந்து உருவாகின்றன.

·     இவை தவிர, என்சைம்கள் சரிவர வேலை செய்ய, ‘தடுப்பிகள்இருக்கக் கூடாது.

என்சைம் தடுப்பிகள் (Enzyme Inhibitors) உணவில் இயற்கையாக இருப்பவை. உதாரணமாக கோதுமையில் உள்ள ஒரு பொருள் அமைலேஸ்என்ற உமிழ் நீர் என்சைம் கோதுமை உணவு ஜீரணம் மெதுவாக நடக்கலாம். வர்த்தக ரீதியாக என்சைம் தடுப்பிகள் தயாரிக்கப்பட்டு ஜீரணத்தை நிதானிக்க பயன்படுகின்றன. அகார்போஸ்‘ (Acar bose) அவற்றில் ஒன்று.

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் இயற்கையான என்சைம் தடுப்பிகள். என்சைமால் மாற்றப்படும் பொருளை சப்ஸ்ட்ரேட்‘ (Substrate) என்கிறார்கள். என்சைமும், சப்ஸ்ட்ரேட்டும், ரசாயன மாறுதல் நிகழும் போது பூட்டும், சாவியும் இணைவது போல், சேர்ந்து பணியாற்றும். என்சைம்கள் உடலின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் இவற்றுக்கு அவசியதேவை, அதுவும் என்சைமின்றி உணவு ஜீரணமாகாது. இவைகள் வாயிலிருந்து ஆரம்பிக்கின்றன. ஜீரண என்சைம்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.

  1. வாயில் சுரக்கும் உமிழ்நீர் – இதில் உள்ள என்சைம் உமிழ்நீர் அமைலேஸ் என்ற டயலின்‘ (Ptyalin). இது ஸ்டார்ச்சை டெக்ஸ்ட்ரைன், மால்டோஸாக மாற்றும்.
  2. வயிற்று சுவர்களிலிருந்து சுரக்கும் ரெனின், பெப்சின், லிபேஸ். ரெனின் பால்புரதமான கேசினை தயிர் போன்ற பொருளாகவும், பெப்சின் புரதத்தை அமினோ அமிலமாகவும், பாலிபெப்டைடுகளாகவும், லிபேஸ், கொழுப்பை, கொழுப்பு அமிலங்களாகவும் மாற்றும்.
  3. கணையம் சுரக்கும் ட்ரைப்சின், எலாப்டேஸ், லிபேஸ், அமைலேஸ் கொலஸ்ட்ரால் எஸ்டிரேஸ் போன்ற என்சைம்கள், புரதம், நார்புரதம், கொழுப்பு, கொலஸ்ட்ரால் இவைகளை, அமினோ அமிலம், க்ளைசெரால், க்ளைசிரைட்ஸ், டெக்ஸ்ட்ரீன், மால்டோஸ் இவைகளாக மாற்றும்.
  4. சிறுகுடல் சுரக்கும் லிபேஸ், சுக்ரோஸ், மால்டேஸ் (மால்டோஸ் அல்ல!) லாக்டேஸ் போன்ற பல என்சைம்கள், உணவுக் கூழின் பல பொருட்களை அமினோ அமிலம், கிளைசெரால், குளுக்கோஸ், காலக்டோஸ், இவைகளாக மாற்றும்.

Box

என்சைம்கள் உடல் இல்லாதவை மிகவும் நுண்ணியவை ஆனால் சக்தி வாய்ந்தவை. இவைகளைத்தான் பிராணசக்தி‘, ‘பிரபஞ்ச சக்தி‘, மின்சாரம் போல் இயங்குபவை என்று நமது புராணங்கள், மருத்துவ, விஞ்ஞான நூல்களில் குறிப்பிடப்படுகிறது என்பது பல விஞ்ஞானிகளின் கருத்து. என்சைம்களால் தான் உணவு ஜீரணமாகி உடல் திசுக்களுடன் சேர்கிறது. இந்த மாறுதலை ஏற்படுத்தும் என்சைம், எந்த மாறுதலையும் அடைவதில்லை. என்சைம்களால் தான் வைட்டமின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் ஜீரணமாக்கப்படுகின்றன.

தாவர விதைகளில் என்சைம்செயலின்றி பல வருடங்கள் வரை அப்படியே இருக்கும். தக்க சமயத்தில் விளைந்து, உயிர் பெறும். தண்ணீர் சேர்த்தால் முளைகட்டும். இந்த முளைகட்டிய தானியங்களில் சத்து அதிகம்.

என்சைம் சிகிச்சை முறை என்பது தற்போது பிரபலமாகி வருகிறது.


Spread the love
error: Content is protected !!