சேனைக்கிழங்கு

Spread the love

சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைப் போல பயன்படுத்தப்படுகின்றன.

இந்த கிழங்கு செடி வகைகளை சுலபமாக பயிரிடலாம். இவைகளை நோய், நொடிகள் தாக்குவதில்லை. கிழங்குகளையே நட்டு பயிரிடலாம். கிழங்குளை சுலபமாக சேமித்து வைக்கலாம். பயிரிட்ட பின் 8 (அ) 10 மாதங்களில் பலன் தரும். அளவிலும், நிறத்திலும் ரகத்

ஈரம் நிறைந்த உஷ்ணப்பிரதேசங்களில், ‘டியாஸ்கோரியாஇனத்தைச் சேர்ந்த கிழங்குகள், அவை ஸ்டார்ச் செறிந்தவை என்பதால், பரவலாக பயிரிடப்படுகின்றன. இவை தான் ஆப்ரிக்கா ஆசிய தென்அமெரிக்கா மற்றும் கடல் தீவுப்பிரதேசங்களில் வருடம் முழுவதும் பயிரிடப்படும் கொடியின வகைகள். சேனை கிழங்குகள் தான் லட்சக்கணக்கான மக்களின் முக்கியமான மாவுச்சத்து உணவு. இந்த கிழங்குகள் உருளைக்கிழங்கு, துக்கு ரகம் மாறுபடும்.

சேனை கிழங்குகள் 2.5 மீட்டர் வரை நீண்டும், 70 கிலோ வரை எடையுடனும் வளர முடியும். கரடு முரடான தோலை உரிப்பதுகடினம். சூடாக்கினால் மிருதுவாகிவிடும். சுலபமாக தோலை எடுக்கலாம். தோல்கள் வெளிர் சிவப்பு அல்லது பழுப்பு நிறங்களில் இருக்கும். இந்த இனக்கிழங்குகள் பெரும்பாலும் மாமிசம் போல் அதிக அடர்த்தியான பொருள் செறிந்திருக்கும். இந்த கதுப்புப் பொருள் முற்றிய காய்களில் வெள்ளை முதல் ஆரஞ்சு நிறம் வரை மாறுபடும்.

மேற்கு ஆப்ரிக்காவிலும் நியூகிளியிலும் சேனைகிழங்குகள் முக்கியமான வேளாண்மை பொருட்கள். கி.மு. 8000 ஆண்டுகளில் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் முதன் முதலாக பயிரிடப்பட்டன. இன்று வரை இந்த பிரதேசங்களின் ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தக்கிழங்குள் இன்றியமையாதவை. குளிர்சாதன வசதியின்றி 6 மாதம் வரை இந்த கிழங்குகளை பாதுகாக்கலாம். எனவே மழைக்கால உணவு பஞ்சத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்படுகின்றனர்.

இந்த கிழங்குகளில் டயாஸ்கோரின் ஒரு விஷகாரம் உள்ளது. ஆனால் குறைந்த அளவில் இருக்கிறது. கிழங்குகளை வேக வைத்தால் இந்த விஷம் அழிந்து விடும்.

டயாஸ்கோரின் தவிர, இந்த இன கிழங்குகளில் ஸ்டீராய்டுகளான சபோஜெனிங்களும் உள்ளன. எனவே இந்த கிழங்குகளை, சமைத்துத் தான் சாப்பிட வேண்டும். பச்சையாக உண்ணக் கூடாது. உண்டால் வியாதிகள் வரும்.

சில வகைகள்

வெள்ளை மற்றும் மஞ்சள் வகைகள் ஆப்ரிக்க இனத்தை சேர்ந்தவை. இவற்றினிடையே 200 வகைகள் உள்ளன! இவை பிரம்மாண்ட கொடி வகைகள்! 10 லிருந்து 12 மீட்டர் நீளம் உடையவை. கிழங்குகள் 25 கிலோ வரை எடை இருக்கும். நல்ல 7 லிருந்து 12 மாதங்களில் கிழங்குகளை அறுவடைசெய்யலாம்.

பெரும் வள்ளி கிழங்கு – இந்தியா முழுவதும் பயிராகும் இந்த கிழங்கு வாட்டர் யாம், விங்டட் யாம், மற்றும் பர்பிள் யாம் என்று சொல்லப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் முதலில் பயிரிடப்பட்டிருக்கிறது. ஆப்ரிக்க கிழங்கு போல் அளவில் அதிகமில்லாவிட்டாலும், ஆசியா, பசிபிக் தீவுகள், மேற்கிந்திய தீவுகள், ஆப்ரிக்கா முதலிய இடங்களில் பரவலாக பயிரிடப்படுகிறது.

கொடிக்கிழங்கு – இந்த வகை கிழங்குகள் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் பயிரிடப்படுகின்றன. கொடிகள் 6 மீட்டர் நீளம் வரை வளரும். கிழங்குகள் இருக்கும். ஆனால் இவற்றை விட கொடியின இலைகளின் கீழ்வளரும் உருளைக்கிழங்கு போன்ற கிழங்குகள் தான் முக்கிய உணவுப்பொருள். இவை அரைகிலோவிலிருந்து 2 கிலோ எடை இருக்கும். கொடிக்கிழங்குகளை விட இதர ரகங்கள் அதிக ருசி உடையதாக இருப்பதால் இவை வர்த்தக ரீதியாக பயிரிடப்படுவதில்லை. வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. நான்கு மாதங்களிலேயே பலன் தரும் கொடிகள் 2 வருடம் வரை காய்களை தரும்.

சிறுவள்ளிக்கிழங்கு தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியது. அங்குதான் இன்றும் பயிரிடப்படுகிறது. உலகின் வேறு இடங்களில் பயிரிடப்படுவதில்லை. இதன் கொடிகள் 3 மீட்டர் நீளம் வளரும். கிழங்குகள் சிறியவை. உருளைக்கிழங்கு போல் வேக வைத்து, வறுத்து உண்ணப்படுகின்றன. சுவையுள்ள இந்த கிழங்குகள் எதிர்காலத்தில் இன்னும் பிரசித்த ஆகுமென்று எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த ரகம் பயிரிடப்படுகின்றது. இந்த கிழங்குளை அதிக நாள் வைத்திருக்க முடியாது.

ஊட்டச்சத்துக்கள்

டயாஸ்கோரியா இன கிழங்குகளில், விட்டமின் C, நார்ச்சத்து, விட்டமின் H6, பொட்டாசியம், மங்கனீஸ் சத்துக்கள் உள்ளன. கொலஸ்ட்ரால், கொழுப்புகள் மற்றும் சோடியம் குறைவு. விட்டமின் C, நார்ச்சத்து, விட்டமின் H 6 – இவை ஆரோக்கியத்தை பாதுகாப்பவை. தவிர பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாக இருப்பது நல்லது. இதனால் எலும்பு அடர்த்தி குறைபாடும் ஆஸ்டியோ பெராசிஸ், இதய நோய்களும் தவிர்க்கப்படுகின்றன. பூரித கொழுப்பு  குறைவாக இருப்பதும் நல்லதே. இதயம் பாதுகாக்கப்படும். உருளை ரகங்களை விட, சேனைக்கிழங்கு வகைகள் சர்க்கரை குறைந்தவை. குறைந்த கிளைசமிக் அளவுகள் உள்ளவை. நீடித்து இருக்கும் சக்தியை கொடுப்பது மட்டுமன்றி, நீரிழிவு, அதீத உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும்.

உணவு நலம் நவம்பர் 2010

சேனைக்கிழங்கு, டியாஸ்கோரியா, ஸ்டார்ச், மாவுச்சத்து, உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, நோய், உணவு, மழைக்கால உணவு, டயாஸ்கோரின், ஸ்டீராய்டு, சபோஜெனிங்களும், வியாதிகள், வகைகள், பெரும் வள்ளி கிழங்குவாட்டர் யாம், விங்டட் யாம், பர்பிள் யாம், ஆசியா, பசிபிக் தீவுகள், மேற்கிந்திய தீவுகள், ஆப்ரிக்கா, கொடிக்கிழங்கு, உணவுப்பொருள், சிறுவள்ளிக்கிழங்கு, ஊட்டச்சத்துக்கள், விட்டமின், C, நார்ச்சத்து, விட்டமின், H, 6, பொட்டாசியம், மங்கனீஸ், கொலஸ்ட்ரால், கொழுப்புகள், சோடியம், பொட்டாசியம், எலும்பு, ஆஸ்டியோ பெராசிஸ், இதய நோய்கள், பூரித கொழுப்பு, இதயம், கிளைசமிக் அளவுகள், நீரிழிவு, அதீத உடல் பருமன்,


Spread the love