எடையை குறைக்கும் நவீன சிகிச்சை

Spread the love

உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக்கோப்புடனும் வைத்துக்கொள்ள 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ் மற்றும் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ள 80 சதவீதம் பேர் உடலைப் பேணிக் காக்க வழிவகுப்பதே இல்லை என்பது நிபுணர்களின் கருத்தாகும்.

அமெரிக்கா மற்றும் ரஷ்ய தொழில் நுட்பத்துடன் கூடிய எலக்ட்ரானிக் இயந்திரங்கள் உடலிலுள்ள தேவையற்ற சதையை குறைக்கவும், உடலை வடிவமைக்கவும் உதவிபுரிகின்றன. மருந்து, உணவு கட்டுப்பாடு இல்லாமல் பருமனான உடல் உள்ளவர்கள் தங்களது உடலைக் குறைக்க எலக்ட்ரானிக் மசாஜ் சிகிச்சை ஒரு வரப்பிரசாதம்.

செல்லுலாய்ட் சிகிச்சை மூலம் உங்கள் எடையை 30 நாட்களில் 8 முதல் 10 கிலோ வரையும், உடல் சுற்றளவை கணிசமான அளவும் குறைக்க முடிகின்றது. எலக்ட்ரானிக் மைல்ட் பல்ஸ்ஸை பாட்கள் மூலம் உடலில் செலத்துவதன் மூலம் எடைக்குறைவு ஏற்படுகிறது.

உடலிலுள்ள 8 பல்வேறு பாகங்களுக்கும் ஒரே சமயத்தில் சிகிச்சை செய்ய இக்கருவி பயன்படுகிறது.

பெண்கள் மற்றும் ஆண்கள் வயிறைத் தட்டையாக்கவும். பெண்களுக்கு தொடையை ட்ரிம் செய்யவும் இக் கருவிகள் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love