முட்டை சைவம் அல்லது அசைவம் என பலபேருக்கு சந்தேகம் இருந்தாலும், அந்த முட்டையில் எந்த கரு சத்து, இதை பயப்படாமல் சாப்பிடலாமா! என சிலருக்கு இந்த மாதிரியான சந்தேகம் எழும். ஆனால் குழப்பமே இல்லை. உண்மையிலேயே மஞ்சள் கருவில் தான் அதிக சத்து உள்ளது. மஞ்சள் கருவில், விட்டமின் K,A,D,E மற்றும் B6,B12 பின் போலட் போன்ற சத்துகளும், கால்சியம், மெக்னீஷியம், இரும்புசத்து, பொட்டாசியம், சோடியம் மற்றும் செலினியம் போன்ற மினரல்ஸ் அடங்கியுள்ளது.
இவ்வளவு சிறிய மஞ்சள் கருவில் இவ்வளவு ஊட்டசத்துகள் இருப்பதனால் தான். முட்டைக்கு அவ்வளவு மவுசு, ஆனால் சிலர் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுங்கள். ஏனென்றால் அதில் கொழுப்பு இல்லை. ஆனால் இந்த கொழுப்பு உண்மையிலேயே ஆரோக்கியமானது தான். அதுமட்டுமின்றி சூரிய ஒளி மூலமாக கிடைக்க கூடிய வைட்டமின் D ஒரு சில உணவுகளில் மட்டுமே உள்ளது. அதுவும் முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது. இதில் இருக்கும் DHA கொழுப்பு அமிலம் மூளை செயல் திறனை செம்மைபடுத்தும்.
இது ஆரோக்கிய தோலிற்கும் முடியின் அடர்த்தி மற்றும் இனப்பெருக்கத்திற்கு உதவியாக உள்ளது. ஆனால் இதய நோயாளி மட்டும் முட்டையின் கருவை சாப்பிடகூடாது என கூறப்படுகின்றது. ஏனென்றல் இதில் இருக்கும் கொலஸ்ட்ரால் ஏற்கனவே இதய கோளாறு இருக்கிறவர்களுக்கு பிரட்சனையை தீவிரபடுத்தும். மற்றொரு பக்கம் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் Choline என்ற பொருள் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் என கூறுகின்றனர்.
மேலும் கண்பார்வையையும் கூர்மையாக்கும். மஞ்சள் கருவிற்கு காரணம் இதில் இருக்கும் கரோட்டினய்டு என்ற Colorful Pigments தான் காரணம். இது ஆண்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு கண்களை Free Radicals-இடம் இருந்து பாதுகாக்கின்றது. இது டெஸ்டோஸ்டிரோன் ஊக்குவித்து, இரத்தம் உறைதல் மற்றும் அழற்சியை கட்டுபடுத்தவும் உதவுகின்றது.