விஷமாகும் விட்டமின்

Spread the love

ஒரு நாள் உட்கொள்ள வேண்டிய அளவு ஆண்கள் – 700 லிருந்து 900 மைக்ரோகிராம் (0.7 முதல் 0.9 மில்லிகிராம்) பெண்கள் – 700 மைக்ரோகிராம் (0.7 மி.கி.) வாரத்தில் 3 (அ) 4 முறை வைட்டமின் ‘ஏ’ உட்கொண்டால் போதுமானது. அதுவும் டாக்டரின் அனுமதியுடன் உட்கொள்ள வேண்டும்.

டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக் டி.வி. சேனல்களில், துருவக் கரடி (Polar bear) யை பார்த்திருப்பீர்கள். வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கொழு கொழுவென்று இருக்கும் பெரிய கரடி அது. இந்த கரடியின் எந்த பாகங்களை அங்குள்ள எஸ்கிமோக்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ, அதன் ‘லிவரை’ (கல்லீரல் – Liver) மட்டும் அவர்கள் தொடமாட்டார்கள்! எஸ்கிமோக்களின் வாகனமான “ஸ்லெட்ஜ்ஜை” (Sledge) இழுக்கும் நாய்கள் கூட இந்த துருவக் கரடியின் கல்லீரலை சாப்பிடாது காரணம் துருவக் கரடியின் லிவரில் உள்ள விட்டமின் ‘ஏ’ – இதன் அளவு எவ்வளவு தெரியுமா? ஒரு கோடி மி.ஹி. (International Unit)! (மி.ஹி. – 1 மை.கிராம்) ஒரு சராசரி மனிதனின் தினசரி தேவை அதிகபட்சமாக 5000 மி.ஹி.. துருவ கரடியின் லிவரை உட்கொண்டால், தலை சுற்றல், வாந்தி முதலியவை உண்டாகி, உண்டவரில் புறத்தோல் முழுவதும் உரிந்து போய்விடும். அதிக அளவு விட்டமின் ‘ஏ’ யை தொடர்ந்து நீடித்த நாட்கள் உட்கொண்டால் உடலில் நச்சப்பொருட்கள் உருவாகும்.

தூக்கக் கலக்கம், மயக்கம், தொடர்ந்து தூங்குவது, கடுமையான தலைவலி, கல்லீரல் வீக்கம், 24 மணி நேரம் கழித்து தோல் உரிதல்.

சருமத்தில் அரிப்பு, தோல் வெடிப்பு, உலர்ந்த அழுகிய சர்மம், தலைமுடி கொட்டுதல், உதட்டில் வெடிப்பு.

பசியின்மை, எலும்புகள் விகாரமடைதல், எலும்புகளில் வலி, மென்மையாதல், நலிவடைதல், பற்சிதைவு.

ஆயாசம், எரிச்சல் படுவது, உதிரப்போக்கு.

முதல் சிகிச்சை ரெநாய்ட் (வைட்டமின் ஏ)

உட்கொள்வதை நிறுத்த / குறைக்க வேண்டும்.  வாரத்தில் அறிகுறிகள் மறையும். தோல் பாதிப்புகள் குறைய சில மாதங்களாகும். கல்லீரல் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். விட்டமின் ஏ வின் உற்ற தோழன் விட்டமின் ‘டி’ இரண்டும் சேர்ந்தே உட்கொள்ளப்படுகின்றன. இதனால் ஹைபர்விட்டமினோசிஸ் அறிகுறிகளில் சில விட்டமின் ‘டி’ யால் உண்டாக்கப்பட்டிருக்கலாம்.

குழந்தைகளை பொருத்த வரையில், குழந்தையின் தாய் கர்ப்பமாக இருக்கும் போது முதல் 3 மாதங்களில் 7.5 லிருந்து 12 மி.கி. ரெடினால் உட்கொண்டு வந்திருந்தால், குழந்தை பிறவிக்கோளாறுகளால் பாதிக்கப்படலாம். எனவே டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட அளவை கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டும்.

விலங்குகளில் நடத்திய சோதனையில், விட்டமின் ‘இ’ விட்டமின் ‘ஏ’ உண்டாக்கிய நச்சுகளை குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே விட்டமின் ஏ உள்ள மருந்துகள், டானிக்குகளில் விட்டமின் ‘இ’. சிறிதளவு சேர்க்கப்படுகிறது. கர்ப்பிணிகள் உடலில் கொழுப்புடன் விட்டமின் ‘ஏ’ சேர்ந்து தேங்கி விடுகிறது. இவர்களின் உடலிலிருந்து நஞ்சான ரெடினாய்டுகளை நீக்கி 2 வருடங்களாவது ஆகலாம். தவிர ஆண்களும் ‘சுய மருத்துவம்‘ செய்து கொண்டு அளவுக்கு மீறி விட்டமின் ‘ஏ’ உண்பது தவறு.


Spread the love
error: Content is protected !!