உடனடியாக தயாரிக்கக் கூடிய, சாப்பிடக் கூடிய உணவு வகைகளை நாம் ஜஙக்ஃபுட் அல்லது துரித உணவுகள் என்று கூறுகிறோம். சிறிய நகரம் முதல் மாநகரம் வரை உள்ள பள்ளி/கல்லுரிவரை செல்லும் டீன் ஏஜ் வயதினர் அதிகம் விரும்பிச் சாப்பிடும் துரித உணவாக பிட்சா, பர்கர் பிரெஞ்ச்ஃப்ரை மற்றும் குளிர்பானங்கள் அமைந்துள்ளது. மேற்கூறிய துரித உணவுகள் நாக்கில் உள்ள சுவை மொட்டுகளுக்கு திருப்தியைத் தரலாம். இதில் அடங்கியுள்ள டிரான்ஸ் பேட்ஸ் எனப்படும் கொழுப்புகள் அதிகம் இருப்பதினால், மனதில் ஒரு மயக்கத்தில் வைக்கச் செய்கிற-து. எனினும் நீண்ட நாட்கள் துரித உணவுகளைச் சாப்பிட்டு வர, பல வித தீமைகளை நோய்களை உருவாக்குகிறது என்பதை -குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் அறிந்து கொள்ளவில்லை. துரித உணவுகளின் கெடுதல்கள் பற்றிய விழிப்புணர்வு இதனால் அவசியமாகிறது.
ஒரு காலத்தில் நம் குழந்தைகளுக்கு, பள்ளிக்கூடம் செல்லும் பொழுது பள்ளியில் சாப்பிடுவதற்காக தயார் செய்யும் உணவுகள் பெரும் பாலும் இட்லி, தோசை¤, மதிய உணவாக சாதம், மற்றும் ரொட்டி, சப்பாத்தி என்று இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், தாயும், தகப்பனும் காலையில் வேலைக்குச் செல்லும் பரப்பரப்பில் இருப்பார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் இல்லை என்பதால் அவசர அவசரமாக, ஏனோதானோவென்று ஏதோ ஒரு உணவை சமைத்து பள்ளிப் பிள்ளைகளுக்கு டிபன் பாக்ஸில் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள் ஒரே வகையான சுவை இல்லாத உணவுகளாக குழந்தைகள் எண்ணுவதாலும் வீட்டை விட்டு வெளியே செல்லுமிடங்களிலும் பள்ளி மதிய உணவு நேரங்களில் பள்ளியில்/கல்லுரியில் உள்ள கேண்டீன் மற்றும் வெளி உணவகங்களிலும் குழந்தைகளை துரித உணவுகள் வசப்படுத்தி வருகிறது. பள்ளி/கல்லுரி செல்லும் குழந்தைகளுக்கு கைச் செலவாக கொடுக்கும் பணத்தில் 10 வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளில் 85 சதவீதத்தினர் வெளியில் ஏதாவது ஒரு உணவை, அதிலும் முக்கியமாக துரித உணவு வகைகளைத் தான் சாப்பிடுகின்றனர். இந்தியாவில், குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை வெளியில் துரித உணவு சாப்பிடுவதை தங்கள் பெற்றோர்களிடம் கூறுவதில்லை. பொய் கூறிவிடுகிறார்கள். பெங்களுரு, மும்பை போன்ற மாநகரங்களில் முன்றில் ஒரு குழந்தை தனது பெற்றோர்களிடம் வெளியில் சாப்பிடுவதை மறைத்து விடுகிறார்கள் ஆனால் ஜெய்பூர், அகமதாபாத் போன்ற ஒரளவு பெரிய நகரங்களில் 8லிருந்து 13 சதவீத குழந்தைகள் துரித உணவுகளை சாப்பிடுகின்றனர். மாநகரங்களில் வசிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு துரித உணவுகள் எளிதாகக் கிடைப்பதனாலும் துரித உணவுகள் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இதன் காரணமாக, குழந்தைகளின் உடல் ஆரோக்கியமும் அதிகம் பாதிக்கப்டுகிறது என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்வது நல்லது. பள்ளி/கல்லுரிக்கு சென்று மீண்டும் வீட்டிற்குத் திரும்பும் இடைப்பட்ட நேரங்களில், வெளியில் சாப்பிடும் துரித உணவுகளை சாப்பிட்டு வரும் குழந்தைகள் அதிக அளவு உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பினை உட்கொள்ள நேரிடுகிறது. மேலும் வெளியில் சென்று சாப்பிடும் உணவுகளில் சுகாதார முறைகளில் தயாரிக்கப்படுவதில்லை என்பதுடன் அதனைச் சாப்பிடுவதால் குடல் சார்ந்த தொற்றுக்களான டைபாயிடு, காலரா, குடல்புழுக்கள் நோய், இரைப்பைக் குடல் அலர்ஜி போன்ற நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.
துரித உணவுகள், ஊட்டச்சத்துக்கள் குறைபாடு, இரத்தச் சோகை, உயிர்ச்சத்து H,2 குறைவு உயர் இரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, மாறாபாடான கொழுப்புசத்து விகிதம், மற்றும் உடல்போன்ற நோய்கள் அதிகரிக்கக் காரணமாகின்றது. ஒரு சில குழந்தைகளுக்கு துரித உணவுகள் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியைத் தோற்றுவிக்கிறது. பெரும்பாலான துரித உணவுகளில் போதுமான அளவு நார்ச்சத்து காணப்படாததால், மலச்சிக்கல் ஏற்பட்டு துன்பமடைகின்றனர். பெரும்பாலான துரித உணவுகளில் அதிக விகித அளவில் சோடியம் மற்றும் இதர உப்பு வகைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. இதன் காரணமாக குழந்தைகளின் குடல் பகுதியும் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளின் மன ஆரோக்கியமும் கெடுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யம் அடைவீர்கள். துரித உணவுகள் அதிகம் சாப்பிடும் குழந்தைகளின் மனநிலையானது தெளிவற்றுக் காணப்படும். மன அழுத்தம் மற்றும் மயக்கநிலை காணப்படும். மனிதனின் மனநிலைகளை ஒழுங்குபடுத்தக் காரணாக இருப்பது டிரான்ஸ்பேட்ஸ் என்ற கொழுப்புகள் ஆகும். இது துரித உணவுகளில் அதிகம் காணப்படுவதால் மேற்கூறிய மனநிலை வேறுபாடுகள் அதிகரிக்கிறது.