மூன்றில் ஒன்று போதுமா?

Spread the love

மூன்றில் ஒன்று  போதுமா?

கல்வியா?  செல்வமா?  வீரமா?  இம்மூன்றில் எது வேண்டும்.  மூன்றில் ஒன்றிருந்தால் போதும் என்கிறது ஒரு திரைப்படம்.  பொருள்  இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்கிற வள்ளூவர், கேடில் விழுச் செல்வம் கல்வி என்றும் பகையகத்துச் சாவார்  எளியர்  (வீரர்கள்) என்றும் கூறுகிறார்.  அறம், பொருள், இன்பம் என்கிற மூன்றில் நடுவன உள்ள ‘பொருள்’ இருந்தால் மற்ற இரண்டும் கிட்டும்  என்பார்,  சிலம்புச் செல்வர்.  இருப்பினும், “பயன் கல்வியே” சிறப்புடையது, என்பது என் எண்ணம்.

அவைருக்கும் கல்வி, எப்போதும் எங்கேயும் கல்வி என்கிற கொள்கையைக் கொண்டே மாண்புமிகு புரட்சித் தலைவி முதலமைச்சர் அம்மா அவர்கள் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் என்கிற ஒரு உயர்நிலை கல்வி அமைப்பை உருவாக்கினார்.  அதன் பயனாளிகளின் நிலை என்ன?

பட்டம் பெறுவது என்பது வேறு கல்வி பெறுவது என்பது வேறு.  ஞானம் பெற்றவர்களில் வெகுசிலரே பட்டதாரிகள்.  வள்ளுவனை உலகுக்கு அளித்த வான்புகழ் கொண்ட தமிழ்நாடு அவருக்கு ஒரு தமிழ் பேராசிரியர் பதவியைத் தருமா? சட்டம் இடம் தராது.

சில வேளைகளில் நம் சட்டத்தின் கைதிகளாகி ஞானிகளை வெளிக்காட்ட முடியாமல் கையாலாகாதவர்களாகி விடுகிறோம்.

இதனை குறிப்பிட வேண்டியதன் அவசியம், என்னவென்றால, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்களை “கடையோராகக்” கருதுகின்ற மனப்£ன்மை படித்த பட்டதாரிகளிடம் இருப்பதைக் கண்ணுற்றே இவ்வாறு கூறுகிறேன்.  கல்லூரியில் பட்டம் பெறுபவர் இருபதுவயது அல்லது இருபத்து ஐந்து வயதினர்.  இவர்களுக்கு ஏட்டு கல்வி இருக்கும்.  பட்டறிவும், ஞானமும் இருக்காது.  முழுநேரக் கல்வி என்று குறிப்பிடுவது திறந்த நிலை பல்கலைக் கழக மாணவர்களுக்கே பொருந்தும்.  எனவே, தாழ்ச்சிச் சொலல் ஆகாது. 

“அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல்  ஆகா, அரண்”.

எனவே அறிவை பெறுபவர்கள் திறந்த நிலைப் பல்கலை மாணவர்களே.. கல்வியை மட்டும் பெற்று பட்டம் பெறுபவர்களே ஏனையோர்.

கவுன்சலிங் சைக்கோதெரபி பயிற்சி தொடக்கவிழா?

தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் சிறப்பான பாடத்திட்டங்களில் ஒன்று.

மனநல ஆலோசனை மற்றும் மனநல சிகிச்சை முதுநிலை அறிவியல்.

இரண்டு தண்டுகால் படிப்பின் 12 வது வகுப்பை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர், திருமதி சந்திரகாந்தா ஜெயபாலன் தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார்.  அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் இயக்குநர் டாக்டர்.  சி.என்.  மகேஸ்வரன் மிகிஷி  மற்றும் டாக்டர் ஆர்.கே. கிரிஜா சங்கர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  முன்னாள் கல்லூரி முதல்வர் பேராசிரியர்.  பிரேமாவதி பாலச் சந்திரன் தொகுத்தளித்தார்.  டாக்டர் T. ராஜமோகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேலான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

& ராஜ்வேலவன்.


Spread the love