ஒவ்வொரு நாளும் இந்தியாவில் மட்டும் நச்சுத்தன்மையுள்ள 40,000 டன்கள் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் 1950 ஆம் ஆண்டில் இருந்து 900 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 சதவீதம் மட்டுமே மறு சுழற்சி செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
தண்ணீரை வியாபாரமாக்கிய பிறகே பாட்டில்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டிற்கு 50 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கிலாந்தில் 16 மில்லியன் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் பயன்பாட்டிற்காக ஆண்டிற்கு 480 பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பாட்டிலும் தயாரிக்கும்போது 100 கிராம் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுகிறது. அமெரிக்காவில் பாட்டில் தயாரிப்பதற்காக 17 மில்லியன் பேரல் எண்ணெய் தேவைப்படுகிறது.
ஒரு முறை பாட்டில்களை பயன்படுத்திய பிறகு அவை கழிவுகளாக கொட்டப்படுகிறது. இதனால் மழை நீர் பூமியின் உள்ளே செல்ல முடியாமல் போகிறது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களை கடலில் கொட்டுகின்றனர். இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மூடிகள் மட்குவதற்கு 700 ஆண்டுகள் ஆகின்றன. பிளாஸ்டிக் மாசுவினால் கடலில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. தற்போது மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி அண்டார்டிகா கடல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ பனிகட்டியில் 17,000 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஓஹோ
திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. பயணத்தின் போதும் தண்ணீர் பாட்டில்களை விலைக்கு வாங்குகிறோம். தமிழக அரசும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கிறது. இந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை குடித்தப் பிறகு அதனை தூக்கி வீசி விடுகிறோம். இதனால் பூமியில் மாசு அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகம் முழுவதும் இது பெரும் பிரச்சனையாக உள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில்கள் பூமியை கெடுக்கும் குற்றவாளியாக உள்ளது. ஆகவே இந்த பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக கடல் பாசியிலிருந்து (ஷிமீணீஷ்மீமீபீ) தயாரிக்கப்பட்ட சவ்வு அல்லது மெல்லிய தோலில் (விமீனீதீக்ஷீணீஸீநீமீ) பாட்டில்களைத் தயாரித்து அதில் நீரை சேகரித்து விற்பனை செய்தனர். இந்த தோல் எளிதில் மட்கும் தன்மை கொண்டது. அதன் பின்னர் ஸ்கிப்பிக்கிங் ராக்ஸ் லேப் (ஷிளீவீஜீஜீவீஸீரீ ஸிஷீநீளீs லிணீதீ) என்ற நிறுவனம் ஓஹோ (ளிஷீலீஷீ) என்கிற சாப்பிடக்கூடிய தண்ணீர் பந்துகளை (ணிபீவீதீறீமீ ஷ்ணீtமீக்ஷீ தீணீறீறீs) அறிமுகம் செய்தது. லண்டனை மையமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது.
தண்ணீர் உருண்டைகள்
ஓஹோ என்றால் சாப்பிடும் தண்ணீர். தண்ணீர் பாக்கெட் வடிவத்திற்கு பதிலாக இது உருண்டை வடிவில் தயாரிக்கப்படுகிறது. கைக்கு அடக்கமாக ஒரு சிறிய உருண்டையை தயாரிக்கின்றனர். இது பார்ப்பதற்கு ஒரு சிறிய பந்து போல் உள்ளது. அதனுள் தண்ணீர் உள்ளது. இந்த உருண்டையின் மேல் உறை பழுப்புநிற கடல் பாசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த பந்தைக் கடித்தால் உள்ளே இருக்கும் தண்ணீரை விழுங்கலாம். சவ்வு போன்ற தோலை சாப்பிடலாம். இது இயைற்கையான சுவை கொண்டது. சாப்பிட பிடிக்கவில்லை என்றால் குப்பையில் போட்டு விடலாம். அது 2 முதல் 3 வாரத்தில் மட்கிவிடும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
இந்த பந்துகளில் 50 மில்லி லிட்டர் முதல் 100 மில்லி லிட்டர் வரை தண்ணீர் அடைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் 7 முதல் 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தண்ணீருடன் சிறிது பாலிமர் கலந்து ஜெல் வடிவிலும் தயாரிக்கின்றனர். இதன் மேல் உறையை ஆரஞ்சு பழத் தோலை உறிப்பது போல், உறித்து தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக கடித்தும் சாப்பிடலாம். இந்த தண்ணீர் பந்துகளில் வாசனை மற்றும் நிறம் கூட சேர்க்கின்றனர்.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கும் செலவை விட இதற்கு ஆகும் செலவு குறைவு. குறைந்த விலையில் தண்ணீரும் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் கடலில் கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பும் தடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நமது பைகளில் தண்ணீர் பாட்டிலுக்குப் பதிலாக தண்ணீர் பந்துகள் இருக்கும். தற்போது லண்டனில் சாப்பிடும் தண்ணீர் பந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
அறிவியல் எழுத்தாளர்,
ஏற்காடு இளங்கோ