காலையில் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால்? அந்த சமயத்தில் தான் செரிமான செயல்பாடு சீராக இயங்குகிறது. பழத்தில் இருக்கும் மொத்த ஊட்டச்சத்தையும், நமது உடல் உறிஞ்சிக்க ஒத்துழைக்கும். குறிப்பாக காலை உணவிற்கு முன்னால் அண்ணாச்சி, முலாம்பழம், வாழை, திராட்சை, பெர்ரி, பேரிக்காய், மாங்காய், பப்பாளி, ஆப்பிள், போன்ற பழங்கள் எடுத்து கொள்ளலாம்.
மதிய உணவிற்கு முன்னால் சில பழங்கள் சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்க உதவும். அந்த வகையில் காலையில் உட்கொள்ளும் உணவில் மாதுளையையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் தான் பழங்கள் சாப்பிட வேண்டும். அதனால் வேலைக்கு போவதற்கு முன்பும், வேலை முடிந்த பின்பும், இருக்கிற இடைவெளியில் பழங்களை சாப்பிடலாம். அது சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. குறிப்பாக நார்சத்து நிறைந்த பழ வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
தினமும் இரவு சாப்பிடுவதற்கு முன்பாக பழங்கள் சாப்பிட்டால், அதில் இருக்கும் குறைந்த கலோரி மற்றும் நார்சத்து பசியின் வீரியத்தை குறைத்துவிடும். இதனால் அளவாக சாப்பிடதோன்றும், உடல் பருமனையும் குறைக்கலாம். முக்கியமாக உணவிற்கு சில நிமிடத்திற்கு முன்பாகவோ அல்லது சாப்பிட்ட உடனேயோ பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பிட்டால் செரிமானத்தில் பிரட்சனை ஏற்படும்.
அதோடு பழத்தில் இருக்கும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம். எப்பொழுதும், உணவுகளோடு கலந்து பழங்கள் சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமானம் தடைபடும்.
அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. பதப்படுத்தப்பட்ட எந்த உணவையும் உண்ணக் கூடாது. சிறுநீரக பிரட்சனை உள்ளவர்கள் பொட்டாசியம் குறைவாக இருக்கும் பப்பாளி, ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்ற பழங்கள் சாப்பிடலாம்.