முகத்துக்கு அழகு சேர்க்கும் மாஸ்க்குகள் (Facial Masks):
மாஸ்க்குகள் (Facial Masks) என்று அழைக்கப்படும் இதன் உபயோகமும் பலன்களும் சருமம் ஆரோக்கியமாகவும், இளமை பொருந்திய பளபளப்புடன் வைத்திருக்க முக்கிய பங்காற்றுகின்றன. மாஸ்க்குகள் சருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்கை நீக்குகின்றன. இதன் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் வராமல் தடுக்கின்றன. மாஸ்க்குகளின் அடங்கியிருக்கும் தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் சருமத்தற்கு அளித்து ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. புதிய செல்கள் உருவாக உதவுகின்றன. அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமத்திற்கு மாஸ்க்குகள் மிகவும் ஏற்றது. மாஸ்க்குகளை தடவிய பின்பு உரித்து எடுக்க வேண்டும். 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ( கடலை மாவு, முல்தானி மட்டியும் ) என்று ஒரு டைப் மாஸ்க்கும் 20 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு ( கற்றாழை ) என்று ஒரு டைப் மாஸ்க்கும் அளிக்கப்படுகிறது. ஃபேஸ் பேக்கிற்கும் (Face Pack) மாஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஃபேஸ் பேக் பொடிகளால் ஆனது. இளவயதினருக்கு ஏற்றது. இளமைத் தோற்றம் வேண்டுமா? உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாஸ்க்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஃபேசியல் மாஸ்க் (Facial Masks) எவ்வாறு இடுவது? :
1. மாஸ்க்குகளை பயன்படுத்துமுன் முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும்.
2. மாஸ்க்கை முகத்தில்; ஒரே மாதிரி அளவாக சரியாக தடவ வேண்டும். உதடுகள், கண்கள் இவற்றை விட்டு விட வேண்டும்.
3. மாஸ்க்கை குறைந்த பட்சம் அரை மணி நேரம் முகத்தில் காய வைத்திருக்க வேண்டும். மாஸ்க்கை எடுப்பதற்கு நிறைய தண்ணீரை உபயோகிக்கவும். கடைகளில் கிடைக்கும் மாஸ்க்குகள் உரித்து எடுக்கும் வகையைச் சார்ந்தவை.
4. களிமண் ஒரு சிறந்த மாஸ்க் ஆகும். ஏனெனில் சருமத்தில் உள்ளே இருக்கும் அழுக்குகளையும் மாசுக்களையும் உறிஞ்சி விடும். அது மட்டும் அல்லாது சருமத்திற்கு தேவையான தாதுப் பொருட்களை களிமண்ணில் உள்ளன.
5. மாஸ்க்குகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகின்றன.
6. மாஸ்க்குகள் உபயோகிக்கும் முன்பு நீராவியினால் முகத்தை சுத்தம் செய்து கொள்வது நல்லது. இதனால் சரும துவாரங்கள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். நீராவிக்கு வெறும் தண்ணீர் மட்டும் உபயோகிக்காமல் மூலிகை கஷாயங்களை சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது.
7. மாஸ்க் முகத்தில் உபயோகித்து மீண்டும் அதை எடுத்து விடும் வரை பேசக் கூடாது.
8. தோல் நோய் உள்ளவர்கள் மாஸ்க் உபயோகிக்கக் கூடாது.
எந்த சருமத்திற்கு எந்த மாஸ்க்குகள் பயன்படுத்தலாம?
நார்மலான மற்றும் உலர்ந்த சருமத்திற்கு:
6 பாகம் முல்தானி மட்டி, 2 பாகம் கற்றாழைச் சாறு, 2 பாகம் தண்ணீர், 1 பாகம் தேன் அனைத்தும் நன்றாக கலந்து கொண்ட பின் பயன்படுத்தவும்.
எண்ணெய்ப் பசையுள்ள சருமத்திற்கு:
5 பாகம் முல்தானி மட்டி, 1 பாகம் கற்றாழைச் சாறு, 1 பாகம் தேன், ஒரு பாகம் எலுமிச்சைச் சாறு.
முதிர்ந்த சருமத்திற்கு:
6 பாகம் முல்தானி மட்டி, 3 பாகம் தேன் உடன் வைட்டமின் இ, ஏ மற்றும் தண்ணீர் அல்லது கற்றாழைச் சாறு.
குறைபாடுள்ள சருமத்திற்கு:
6 பாகம் முல்தானி மட்டி, 1 பாகம் தயிர், 2 பாகம் ஜோஜோபா எண்ணெய்.
அனைத்து வகை சருமத்திற்கு ஏற்ற பொதுவான மாஸ்க்குகள்:
பாதாம் பருப்பு பொடி, முட்டையின் வெள்ளையுடன் கலந்த சந்தன பவுடர், தேன், தயிர், இவையெல்லாம் கலந்த கலவையானது அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்ற மாஸ்க் ஆகும். இதை முகப்பரு உள்ளவர்கள் உபயோகிக்கக் கூடாது.
பழம், காய்கறிகளால் ஆன மாஸ்க்குகள்:
சாதாரண சருமத்திற்கு -& வாழைப்பழம், திராட்சை.
உலர்ந்த சருமத்திற்கு -& வாழைப்பழம், ஆப்பிள், கேரட், முலாம் பழம்.
எண்ணெய் சருமத்திற்கு -& எலுமிச்சை, தக்காளி, வெள்ளரிக்காய்
முதிர்ந்த சருமத்திற்கு -& எலுமிச்சை, தக்காளி, ஆப்பிள், முட்டைப் கோஸ், திராட்சை.
நீருடன் தயாரிக்கப்படும் மாஸ்க்குகள்:
தேவையான பொருட்கள்:
தேன் -& 1 தேக்கரண்டி
ஆரஞ்சுச் சாறு -& 1 தேக்கரண்டி
முல்தானி மட்டி பவுடர் -& 1 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் ( பன்னீர் ) &- 2 தேக்கரண்டி
செய்முறை:
முல்தானி மட்டியை ரோஸ் வாட்டர் ( பன்னீரில் ) அரைமணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு மற்ற பொருட்களையும் கலந்து களிம்பாக ஆக்கிக் கொள்ளவும். இதை முகத்தில் தடவி, நன்றாக உலர்ந்த பின் கழுவி விடவும. இந்தப் கலவையில் ஆரஞ்சுச் சாறுக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறையும் பயன்படுத்தலாம்.