அஜீரணம் (Dyspepsia)

Spread the love

அஜீரணத்திற்கு ஆங்கில வார்த்தையான Dyspepsia, கிரேக்க மொழியிலிருந்து தோன்றியது. அஜீரணம், உணவு ஜீரணிப்பதில் கோளாறு என்று பொருள். அஜீரணம் என்பதை பொதுவாக பல வயிற்று உபாதைகளை குறிக்கும் சொல்லாக நாம் பயன்படுத்துகிறோம்.

அஜீரணத்திற்கு பல காரணங்கள் உண்டு. அவை

வயிற்று, அல்சர்கள்

கேஸ்ட்ரைடீஸ்

கிருமிகளால் வரும். உதாரணம் ஹெலிகோபேக்டர் பைலோரி

பித்தப்பை கற்கள்

ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், மனவியா கூலம், மனபரபரப்பு, ஸ்ட்ரெஸ்

அதிக சாப்பாடு

அடிக்கடி சாப்பிடுவது, விருந்துணவு, காரமான மசாலா உணவுகள். உணவை மென்று சாப்பிடாமல், அவசரமாக விழுங்குவது.

மலச்சிக்கல்,புகைப்பது, மது அருந்துதல்

உடலுழைப்பு இன்மை.

அறிகுறிகள்

மேல் வயிற்றில் வலி

வலியில்லாவிட்டால் மேல் வயிற்றில் கணப்பது போல் சங்கடமான உணர்வு

வயிறு “பண்ணான் சால்” போல் உப்புதல்

சிலருக்கு சாப்பிடும் முன்பு வலி தோன்றும், சாப்பிட்டால் குறையும். சாப்பிட்ட பின் வலி தோன்றும்.

பசியின்மை

பிரட்டல், வாந்தி, பேதி

வயிற்றில் இரைச்சல்

ஏப்பம்

எடை குறைதல்

கறுப்பாக மலம் கழித்தல்

ரத்த வாந்தி

அஜீரணத்தோடு ஆஸ்துமா போன்ற மூச்சிரைப்பு, வியர்த்துக் கொட்டுதல், தாடை, கழுத்து, கை வரை வலி பரவுதல்.

2 வாரங்களுக்கு மேல் அஜீரணம் தொடர்ந்தால் டாக்டரிடம் செல்லவும்.

ஆயுர்வேதத்தின் படி, அக்னி சக்தி மந்தமானால் ஜீரண கோளாறுகள் உண்டாகின்றன. வாத தோஷ அதிகரிப்பினால் வலியும், பித்த தோஷ அதிகரிப்பினால் எரிச்சலும், கப அதிகரிப்பினால், பிரட்டலும், வாந்தியும் ஏற்படுகின்றன.

சிகிச்சை

உணவுக்கு முன் ஒரு கிராம் இஞ்சியை, பாறை உப்புடன் சேர்த்து உண்ணவும்.

வாந்தியெடுக்கும் உணர்வும், பசியின்மையும் சேர்ந்திருந்தால் வாந்தி எடுக்க விடுவது நல்லது. வாந்தியை உண்டாக்க உப்புத் தண்ணீரை குடிக்கலாம். வாந்தியின் பிறகு 3-4 மணி நேரம் வயிற்றை காலியாக வைக்கவும்.

பசியின்மை, சுருசி இவற்றுக்கு நெய்யில் வறுத்த கிராம்பை, உணவுக்கு முன் உட்கொள்ளவும்.

இதே போல் நெய்யில் வறுத்த 3-5 பல் பூண்டை பயன்படுத்தலாம்.

பசி எடுன்ன, இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு சம அளவில் (ஒரு தேக்கரண்டி) கலந்து பருகவும்.

ஒரு சிட்டிகை பெருங்காய பொடி, நெய் சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் (முழு உணவை சாப்பிடும் முன்) எடுத்துக் கொள்ளவும். இதை தினசரி அஜீரணம் மறையும் வரை செய்யலாம்.

எலுமிச்சை சாறு அஜீரணத்தை குறைக்கும்.

கறிவேப்பிலையை உலர்த்தி, பொடித்து, மிளகு, சீரகம், சுக்கு, உப்பு சேர்த்து அன்னத்தில் பிசைந்து சாப்பிட்டு வர அஜீரணம் விலகும்.

திராட்சை அல்லது திராட்சை சாறு அஜீரணத்திற்கு மருந்தாகும்.

அன்னாசி, கொய்யாப்பழம் போன்றவையும் உதவும்.

புதினா சாறு நல்லது. இதை தேன், எலுமிச்சை சாற்றுடன் கலந்து குடிக்கலாம்.

ஆயுர்வேத மருந்துகள்

ஹிங்கு வாஷ்டக சூரணம் – பெருங்காயம், சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், சீரகம் கலந்த மருந்து.

லவண பாஸ்கர சூரணம்

திராக்ஷாரிஷ்டம்

ஹரிடாக்கி (கடுக்காய்) சூரணம்

அத்னி முகலவணம்

நாராயண சூரணம்

லசூன்னாதி வடி – போன்றவை.

அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்ட உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்

உணவு உட்கொள்ளும் போது தண்ணீர் அல்லது மற்ற திரவங்களை குடிக்க வேண்டாம்.

அவசரமாக உண்பதை தவிர்க்கவும்.

வயிறு முட்ட உண்ண வேண்டாம்.

முன்பு உண்ட உணவு ஜீரணமாகும் முன்பு, அடுத்த உணவை சாப்பிட வேண்டாம்.

காரசாரமான மசாலா உணவுகள் கூடாது.

உடற் பயிற்சிகளை மேற்கொள்ளவும்.


Spread the love
error: Content is protected !!